Thursday, July 11, 2013

"எதையும் பேசிடும் முன்னர் சிந்தித்துப் பிறகே பேசுக" !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!




தினம் ஒரு திருக்குறள்.                                   


அதிகாரம்  :-  அடக்கமுடைமை.                    


குறள் எண்:-  127.                                             


யாகாவா ராயினும் நாகாக்க காவாக் ** **                                                                                        கால்    


சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...      




விளக்கம் :-  வாழ்கையில் காக்க 


வேண்டியது என்று எவ்வளவோ 


எண்ணிலடங்காதது உள்ளது. 


அவற்றை காக்காவிட்டாலும் 


நாக்கையாவது காக்க வேண்டும். 


காக்கத் தவறினால் சொற் 


குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். 


இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன் விளக்கமும்  


ஆகும்.                                                                       



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-                   


கடம்பன் :-  டேய்! கந்தா!! அடேய் !! 


கந்தா!!செவிட்டுப் பயலே கந்தா!!  


என்னாடா மூஞ்சியை துணியாலே 


மூடிக்கிட்டுபோறே. 


உம்..என்னா...என்னா சங்கதிடா.உம். 


உன் நடவடிக்கை ஒன்னும் சரியாத் 


தெரியலையேடா!! எங்கனாச்சும் 


தகராறு, கிகராறு பண்ணியாடா? 


சொல்டா!! நான் உன் நண்பன் 


கேக்கேன்.சொல்றா!!டேய்!!                     


கந்தன்:- ஆமாண்டா!!நம்ம சோத்துக் 


கடை சொக்கன்கிட்டபோனவருசம் 


ரூ.1௦௦/=கைமாத்து வாங்கிருந்தேன். 


என்னாலே கொடுக்க முடியல்லே. 


வாய்தா, வாய்தாவா கேட்டதாலே 


கடுப்பாயிட்டான். இன்னைக்கு 


சொக்கா களட்டுன்றான்.                           


கடம்பன் :- ஏண்டா உனக்கு எத்தினி 


தரம் சொல்றதுடா!! கடன்வாங்காதே 


யார்கிட்டேயும்னு சொன்னா 


கேக்கனுண்டா!!சரி!! அப்புறம் மேலே 


சொல்லு.                                                                 


கந்தன்:- சொக்கன், என்னை 


கண்டமேனிக்கு திட்டுனாண்டா!! 


நானும் பணத்தை  கை நீட்டி 


வாங்கிட்டோமேனு கம்னுதாண்டா 


இருந்தேன்.அப்பாலே அவன்என்னை 


ரொம்பவும் இழிவு படுத்தி பேசினான். 


அப்படி எல்லாம் பேசாதன்னு 


எம்புட்டோ சொன்னேன் பயபுள்ள 


கேக்கல.அதாலே நானும் அவன 


கண்டமேனிக்கு திட்டினேன் பாரு. 


அம்புட்டுத்தான் கோவம் வந்திருச்சு 


சொக்கனுக்கு. ஓங்கி விட்டான் பாரு 


ஒரு குத்து. ரொம்ப நாளா ஆடிட்டு 


இருந்த கடவாய்பல்லு ரெண்டு. 


தானா  கழண்டுகிட்டு விழுந்துடுச்சு. 


அதான் துணி வச்சு மறச்சுகிட்டு 


வாரேன்.                                                                 



பழி ஓரிடம். பாவம் ஓரிடம்.


இதுதான் இப்போ சம்பவம். 


ஆம் நேயர்களே!! 


எதையும் பேசிடும் முன்னர் சிந்தித்து 


பிறகு பேசிட வேண்டும் யோசித்து 


அதன் பின்னரே உனது நாவை 


வெளியே கொண்டுவர வேண்டும்  


என்பதற்காகவே ஆண்டவன் 32 


பற்கள் எனும் பெரிய கோட்டைக்குள் 


பத்திரமாக பாதுகாப்புடன் படைத்தது  


அந்த பரம்பொருளின் மகிமை. 


ஆனால் மனித கட்டுப்பாட்டையும் 


மீறி கண்டவற்றையும் பேசிவிட்டு 


நாக்கு பத்திரமாக உள்ளே சென்று 


அமர்ந்துவிடுகிறது.ஆனால் எதிரி 


விடுகின்ற குத்தில் உடைவது 


என்னவோ பற்களுள் 


ஒன்றுதான்.எனவே அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளே!!நான் 


உங்களனைவரையும் வேண்டி 


விரும்பி கேட்டுக்கொள்வதெல்லாம் 


தலைப்பினில் குறிப்பிட்டுள்ளது 


போல " எதையும் பேசிடும் முன்னர் 


சிந்தித்துப் பிறகே பேசுக" என்று 


கேட்டுக்கொண்டு வாய்ப்புக்கு நன்றி 


கூறி விடை பெறுகிறேன்.வணக்கம். 


அன்புடன் மதுரை TR.பாலு.

No comments:

Post a Comment