Monday, July 29, 2013

வறுமையின் கொடுமை -- திருவள்ளுவர் கண்ணோட்டத்தில் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள்!! 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!! 


தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுதில்!!   



தினம் ஒரு திருக்குறள்.                     


அதிகாரம்   :-   நல்குரவு.                       


குறள் எண் :-   1௦49.                                     


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்           


 யாதொன்றும் கண்பாடு அரிது... ... ... ... ... ... ... ... ... ... 


விளக்கம் :-  ஒருவன் கொழுந்து 


விட்டு எரிகின்ற நெருப்புக்குள் 


இருந்து கூட தூங்கிவிட முடியும் 


ஆனால் அவனை வறுமைநிலை 


வந்து தாக்கி துன்புறுத்துகின்ற 


போது எவ்வகையாலும் கண்மூடித் 


தூங்குவது என்பது மிக மிகஅரிதான 


ஒன்று. இது வான் புகழ் வள்ளுவன் 


நமக்கு அளித்த குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.                                   


நமது நாட்டு அடைப்பு விளக்கம் :-     


(ஒரு வறுமையில் வாடித்தவிக்கும் 


குடும்பத் தலைவன்,தலைவி இந்த 


இருவருக்கும் இடையில் 


நடைபெறுகின்ற உரையாடல் இது :- 


(இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு 


உள்ள  கதா பாத்திரங்கள் 


 மற்றும்  நிகழ்வுகள், 


உரையாடல்கள் இவை அனைத்தும் 


கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட 


கற்பனையே அன்றி வேறுயாரையும் 


குறிப்பிடுவன அல்ல.)        



கணேஷ் :-      கமலா ! கமலா!!           


கமலா :-   வாங்க வாங்க என்னங்க 


போன காரியம் என்ன ஆச்சு. இந்த 


மாதமாவது உங்களுக்கு வேலை 


போட்டுத் தருவாங்களா இல்லையா?


கணேஷ்:- அதுக்குத்தான் மேனேஜர் 


மகாலிங்கத்தைப் பாத்துட்டு வரேன். 


கமலா :- என்னங்க  சொன்னார்? 


நிச்சயம் வேலை கிடைச்சுடுமா?   


கணேஷ் :-  ஸ்ட்ரைக் பண்ணி 


அதாலே சஸ்பென்ட் செஞ்சு 


இருக்காங்க.    அவ்வளவுவிரைவில் 


வேலை கிடைக்கும்னு சொல்ல 


முடியாதும்மா.                                         


 கமலா:- என்னங்க இப்படி சொன்னா 


எப்படிங்க. ஏற்கனவே வீட்டுக்கு 


வாடகை ரெண்டு மாசம் பாக்கி, 


மளிகைக் கடைக்குவேற பணம் 


தரனும். பால்காரன் வேற பாலை 


நாம பணம் தராததாலே தண்ணியா 


பாலை ஊத்துறான்.பிள்ளைகளுக்கு 


ஸ்கூல் பீஸ் வேற கட்டனும். உம் .... 


என்னதான் செய்யப்போறோமோ? 


அம்மாகிட்டே உதவி கேக்கலாம்னு 


பாத்தா நாம காதல்  செய்து 


கல்யாணம் செஞ்சுகிட்டதாலே 


பேச்சே கிடையாது. வேற உங்க 


நண்பர்கள் யார்கிட்டேயாவதுபணம் 


கேக்கலாம் இல்லீங்களா?                   


கணேஷ் :- ஒருத்தன் விடாமல் 


எல்லோர்ர்கிட்டேயும் கைமாத்து 


வாங்கியாச்சு. இனிமே 


எவன்கிட்டயாவது போய் கடன் 


கேட்டால் கால்மாத்துதான் 


தருவான். இப்ப நான் கடன் கேக்காத 


ஒரு ஆள் உண்டுன்னு சொன்னாஅது 


ஆண்டவன்  ஒருத்தர்கிட்டேதான்.                           


கமலா:-  என்னங்க நான் சீரியஸா 


பேசுறேன். நீங்க காமெடி பண்றீங்க. 


நாம இப்ப இருக்குற சூழ்நிலையிலே 


எனக்கு ராத்திரி படுத்தால் தூக்கமே 


வர மாட்டேங்குதுங்க. கண்ணை 


மூடி தூங்கலாம்னு சொன்னா 


கடன்காரங்கள் தான் வந்து 


பயமுறுத்துறாங்க. நான் என்ன 


செய்வேன் சொல்லுங்க.                   


கணேஷ்:- நானும் என்னதான் 


செய்றது. கேட்ட நேரம் வந்தா 


இப்படித்தான் குடும்பத்தைபடுத்தும் 


அப்படீன்னு பெரியவங்க 


சொல்வாங்க. அது சரியாத்தான் 


இருக்கு. இந்தத் துன்பம்,துயரத்துலே 


இருந்து ஒரேடியா விடுதலை 


கிடைக்கனும் அப்படீன்னு சொன்னா 


அதுக்கு விஷத்தை குடிச்சுட்டு 


செத்துவிட வேண்டியதுதான்.  வேற 


வழி தெரியல்லை கமலா 


(கண்ணில் நீர் வழிந்தபடியே)                                 

கமலா:-  அப்படி எல்லாம் திடீர்னு 


ஒரு முடிவுக்கு வந்துராதீங்க இரவு 


என்று ஒன்று இருந்தா பகல்னு 


ஒன்னு நிச்சயம் உண்டுங்க. 


இன்பம்னு ஒன்னு இருந்துச்சு நம்ம 


வாழ்கையிலே. இப்ப துன்பம் 


வந்திருக்கு. இதுவும் கடந்து போம். 


மன தைரியத்தோட போராடனுங்க 


வாழ்க்கையிலே.  தற்கொலை 


அப்படீங்கறது கோழைகளின் 


ஆயுதம். நமக்கு அது தேவை 


இல்லை. போராடுவோம்.வெற்றி 


பெறுவோம் .வெற்றி பெறும்வரை 


போராடுவோம். நான் உங்க 


பக்கத்லே இருக்கேன். மனசை 


மட்டும் வுட்டுறாதீங்க. நானும் 


பிள்ளைகளும் உங்களைத்தான் 


நம்பி உயிரோட இருக்கோம். 


எங்களை விட்டுட்டு நீங்க மட்டும் 


போறதுன்னா அது எப்படிங்க. 


அதுதான் உங்க முடிவுன்னு 


சொன்னா தயவுசெய்து உங்களோட 


என்னையும் பிள்ளைகளையும் 


சேத்து   சாகுறதுக்கு கூட்டிட்டுப் 


போங்க. ப்ளீஸ். (அழுகிறாள் )                                    


 கணேஷ்:- கமலா. இப்ப எனக்குபுத்தி 


வந்துருச்சு. இனிமே எந்நாளும் நான் 


அந்தமாதிரி கோழைத்தனமான 


முடிவுக்கு போக மாட்டேன். இது 


உன்மேலே சத்தியம். உழைச்சு 


பிழைப்போம். ஆண்டவன் ஒரு நாள் 


நம்ம கஷ்டத்தை போக்கிடுவான். 


நம்பிக்கைதான் வாழ்க்கை. வா 


கமலா வரும்போது உனக்கும் 


எனக்கும் சேர்த்து நாலு புரோட்டா 


வாங்கிவந்தேன். சாப்பிட்டு 


படுப்போம்.                                                       



(அப்போது அருகில் உள்ள தேநீர் 


கடையில் உள்ள வானொலிப் 


பெட்டியில் இருந்து இந்தப் பாடல் 


ஒலிக்கிறது)                                                 



 நாளைப் பொழுது என்றும் !!         


 நல்ல பொழுதாகுமென்று !!     


 நம்பிக்கை கொள்வாயடா !!   


 இறைவன் நல்வழி தருவானடா!!     



நமது நாட்டு நடப்பு விளக்கம் 


இத்துடன் நிறைவு பெறுகிறது 


அன்பர்களே !!  மீண்டும் அடுத்த 


குறள் விளக்கத்தில் உங்கள் 


அனைவரையும் சந்திப்போம்.  


நன்றி !! வணக்கம் !!                           


அன்புடன் மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment