Friday, August 2, 2013

பகைவரை வெல்வது எப்படி ?





உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தினம் ஒரு திருக்குறள்.                               

அதிகாரம்   :- சான்றாண்மை.                 


குறள் எண் :- 985.                                         


ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் 

மாற்றாரை மாற்றும் படை... ... ... ... ... ... 


விளக்கம் :-ஆற்றலுடையவருடைய 


ஆற்றலாவது (செயலாவது) 


பணிவுடன் நடத்தலே ஆகும். அது 


சான்றோர் தம் பகைவரைப் 


பகைமையிலிருந்து  மாற்றுகின்ற   


கருவியாகும். இது வான்புகழ் 


வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.               


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-     


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


எனது அன்புத் தமிழ் உடன்பிறப்புகள் 


அனைவருக்கும் என் இனிய காலை 


வணக்கங்கள். நான் நலம். நான் 


உங்களிடம் நாடுவதும் அதுவே. 


நிற்க!!                                                           


இப்பவும் உங்களில் அனைவரும் 


அறிந்திருப்பீர்கள் என்றே 


கருதுகிறேன் நான் ஒரு 


வான்மண்டல கிரகங்களின் 


ஆராய்ச்சியாளர் என்று (இதனை 


சொல் வழங்கு தமிழில் சோதிடம் 


என்றும் சொல்வதும் உண்டு) அந்த 


அடிப்படையில் ஒவ்வொரு மனித 


ஜாதகத்திலும் 6ஆம் இடம் என்பது 


(லக்னத்தில் இருந்து) ரொணம் , 


ரோகம்,கடன்,சத்ரு, என இந்த 


நான்கு அம்சங்களின் ஒட்டு மொத்த 


ஸ்தானம் என்று சோதிட 


வல்லுனர்கள் சொல்வது உண்டு. 


அந்த அடிப்படையில் இந்த 6ஆம் 


இடம் பொதுவாக வலு இழந்து 


இருக்க வேண்டும். இது மிக மிக 


அவசியமானது ஆகும். அப்படிப்பட்ட 


ஜாதகருக்கு வாழ்வில் நோய் நொடி, 


கடன் தொல்லை, எதிரிகளால் பயம் 


இது போன்ற மனதை கசக்கிகவலை 


தரும் விஷயங்கள் எதுவுமே 


இருக்காது என்றே சோதிட நூல்கள் 


நமக்கு அறிவுறுத்துகின்றன. 


ஆனால் அதற்கு மாறாக இந்த 6ஆம் 


இடம் வலுப்பெற்று பாவிகளின்   


 பார்வையும் பெற்றுவிடுமே ஆனால் 


வாழ்நாள் முழுவதும்  நோய்நொடி 


கடன் சித்திரவதை எதிரிகளால் 


தொல்லை இவைகளோடு போராடிப் 


போராடி வாழ்க்கை முழுவதுமே 


கடந்துவிடும். இது உண்மை.இது 


நிஜம்.ஆனால் பகுத்தறிவு  சிந்தனை 


உடையவர்கள்,முற்போக்கு 


எண்ணம் கொண்டவர்கள் 


சோதிடத்தை ஒத்துக்கொள்வது 


கிடையாது. நான் அவர்களுக்கு 


ஒன்று சொல்லிகொள்வேன் 


கவிஞரின் பாடலில்இரண்டுவரிகள் 



தெய்வம் என்றால் அது தெய்வம்!!   

வெறும் சிலை என்றால் அது 

சிலைதான் !!                                                 

உண்டென்றால் அது உண்டு !!             

இல்லை என்றால் அது இல்லை !!       

இல்லை என்றால் அது இல்லை !!     


அந்த வரிகள் போல, நம்பினால் 


ஜோதிடம், என்பது ஒரு மாபெரும் 


கணிதமும் விஞானமும் இணைந்த 


ஒரு பெரும் விலை மதிப்பில்லாத 


பொக்கிஷமே ஆகும். அந்த 


அடிப்படையில் நமக்கு எதிரிகள் 


இருப்பதும் மறைவதும் வலு இழந்து 


காணப்படுவதும் வலுப்பெற்று 


நம்மை சித்திரவதை செய்வதும் 


அவரவர் முன்ஜென்ம வினைப்படி 


அமைந்த விதியே ஆகும்.  மீண்டும் 


நாளை சந்திப்போமா நேயர்களே !! 


நன்றி !!வணக்கம் !!                                     


அன்புடன் மதுரை T.R. பாலு.                       

No comments:

Post a Comment