Friday, August 16, 2013

பணிவானகுணத்தின் பெறுமை என்ன ? வள்ளுவர் தரும் விளக்கம் !!

உடல் மண்ணுக்கு!!உயிர் தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!       


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !! 


தமிழ்பேசிடும்சகோதர,சகோதரிகள் 


நடுவினில் உரையாடிடும் பொழுது!!


தினம் ஒரு திருக்குறள்.             


அதிகாரம் :-  பெருமை.             


குறள் எண் :-  978.


இன்றைய தினம் நான் உங்கள் 


சிந்தனைக்கு தரும் குறளும் அதன் 


விளக்கமும்:-


பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து!.. .. .. 


வான்புகழ் வள்ளுவன் நம் தமிழ்த் 


தாய் பெற்ற தவப்புதல்வன்.எப்படி 


பாட்டு எழுதிஉள்ளார் பாருங்கள் 


அன்பர்களே. பெருமைக்குரிய 


காரியங்களை செய்தவர்கள், 


செய்பவர்கள் பணிந்துஅமைதியாக 


இருப்பார்கள். ஆனால் அதேசமயம் 


சிறுமைத்தனம் கொண்டோர்கள், 


சின்ன புத்தி படைத்தவர்கள், 


தன்னை தானே பாராட்டிகொண்டு 


தான் செய்யும் செயல்களை தானே 


வியந்து வாழ்வார்கள், என்பதனை 


இன்றைக்கு இரண்டாயிரம் 


ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து 


சொன்னதால்தான் அவர் தெய்வப் 


புலவர் என்று அழைகப்படுகிறார் 


என்றால் அதில் வியப்பில்லை. 


மீண்டும்சந்திப்போம்.அடுத்தகுறள் 


விளக்கத்தில்.நன்றி !! 


வணக்கம் !!.


அன்புடன்.மதுரை T.R.பாலு.  

No comments:

Post a Comment