Thursday, August 22, 2013

ஆளும் வர்க்கத்தினருடன் பழகுவது எப்படி ? --வள்ளுவர் தரும் விளக்கம் !!

உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


தினம் ஒரு திருக்குறள்.             


அதிகாரம்:- மன்னரைச் சேர்ந்தொழுகல்.       


குறள் எண் :-  691
 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க  

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் ... ...

விளக்கம் :- 

அதாவது நல்ல பனிகாலத்தில் 


குளிரின் கொடுமையில் இருந்து 


தம்மை காத்துக்கொள்ள வேண்டி 


மக்கள் தீ வளர்த்து அந்த தீ தரும் 


வெப்பத்தில் குளிர் காய்ந்து  


தத்தமது உடலை பாதுகாப்பது 


வழக்கம். ஆனால் தீ ஜுவாலை 


கொழுந்துவிட்டு எரியும்போது 


மிகவும் நெருங்கினால் அனல் 


நம்மை சுட்டுவிடும். அதேசமயம் 


சற்று விலகி நின்றாலோ குளிர் 


நம்மை  வாட்டி விடும். 


அதுபோலவே ஆட்சியில்,  


அதிகாரம் செலுத்தும் இடத்தில் 


இருக்கும் நபர்களிடம் நாம் 


அதுபோலவே பழக வேண்டும். 


மிகவும் நெருங்கினால் அதுவும் 


துன்பம் தரும். விலகிவிட்டாலும் 


துயரம் தரும் என்ற கருத்தை 


வள்ளுவப் பெருந்தகை எவ்வளவு 


அழகாக கூறியுள்ளார் என்பதனை 


நாம் அறிந்து நம் வாழ்வினில் 


அதனை செயல்படுத்துவோமாக.



நன்றி !! வணக்கம்!!


மீண்டும் நாளை சந்திப்போம். 


அன்புடன் மதுரை T.R.பாலு.




No comments:

Post a Comment