Saturday, August 17, 2013

உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தினம் ஒரு திருக்குறள்.           


அதிகாரம் :-தெரிந்து செயல்வகை. 


குறள் எண்:-  466. 


வணக்கம் இன்று நான் உங்கள்


சிந்தனைக்கு தரும் குறளும் அதன்


விளக்கமும் யாதெனின்:-

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 


செய்யாமையானும் கெடும்... ... ... ... ... ... ... ...           


விளக்கம் :-அதாவது எந்த  அரசாக 


இருந்தாலும் சரி  அல்லது தனி 


ஒரு மனிதனாக இருந்தாலும்  சரி  


அந்த அரசு  மக்களுக்கு/தனி 


மனிதன் தனக்கு  செய்யத் தகாத 


செயல்களை  செய்கின்றபோது 


அந்தசெயல் மக்களுக்கு/அவனுக்கு 


கெடுதல்செய்யும்விஷயமாக 


ஆகிவிடுகிறது. அது போலவே 


மக்களுக்கு/தனி மனிதன் தனக்கு 


நல்லது செய்யக்கூடிய 


செயல்களை செய்யாமல் 


இருந்தாலும் அது மக்களுக்கு /தனி 


மனிதனுக்குகெடுதல்செய்யக்கூடிய 



விஷயமாக ஆகி விடுகிறது 



என்பதனை தெய்வப்புலவர் 


எவ்வளவு தெளிவுற கூறி உள்ளார் 


நேயர்களே!


சிந்தித்துப் பாருங்கள்.உண்மை 


தெளிவாகும்.


நன்றி !! வணக்கம் !!. 


அன்புடன். மதுரை TR.பாலு.

                                                                                




No comments:

Post a Comment