Saturday, August 10, 2013

அடுத்தவர் மனைவியை காம உணர்வோடு பார்க்காதே !!--அது பழி பாவத்திற்கு உரிய குற்றமே !!





உடல் மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 


தினம் ஒரு திருக்குறள்.                             


அதிகாரம்  :- பிறனில் விழையாமை. 


குறள் எண்:- 145.                                             


 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் 


 விளியாது நிற்கும் பழி... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... 


விளக்கம் :-     இந்தச் செயல் 


எளிதானது என்று எண்ணி 


அடுத்தவருடைய மனைவியிடம் 


நெறி தவறி செல்கிறவன், 


எப்போதும் அழியாமல் நிலைத்து 


நிற்கும் பழியை அடைவான். இது 


வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை 


நமக்கு அளித்திட்ட குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-           


சந்தானம் :-  ஏண்டி ? சரோஜா !! 


எங்கடி போய்த்தொலஞ்சே !!


சரோஜா :- அடடா. ஒரு நிமிஷம் 


பொறுக்க மாட்டீங்களே ! என்ன 


அப்படி அவசரமா கூப்பிடீங்க ? உம் .. 


சொல்லுங்க சீக்கிரம். எனக்கு 


சமையல் வேலை இன்னும் இருக்கு.  


சந்தா:-  அட!! சரிதாண்டி!! என்ன 


இன்னைக்கு ஞாயிறு லீவுதானே. 


என்னவோ ஆபீசுக்கு போறமாதிரி 


ரொம்ப அவசரப்படுறியே.  இல்ல  


 நான்எதுக்கு உன்னைய 


 கூப்பிட்டேன்னா  நேத்து உங்க 


ஊருலே திருவிழாவிற்குபோனேமே 


 சரோ:- ஆமாங்கஅதுக்குஇப்பஎன்ன?    

சந்தா:-  இல்லடி அங்கே என்நண்பன் 


நாராயணன் மனைவியை 


பார்த்தேன். ஆண்டவன் ஏன்தான் 


இப்படி பொருத்தமிலா ஜோடி சேத்து   

வைக்கிறானோஎனக்குத்தெரியலை.


சரோ :- நானும்தான் பாத்தேங்க. ஏன் 


அந்த ஜோடிக்கு என்னவாம்.               


சந்தா:- நிஜமாவா கேக்கிறே.உனக்கு 


உண்மையிலேயே கண் அப்டின்னு 


ஒன்னு இருக்கான்னு நான் இப்ப 


யோசிக்கிறேன்?


சரோ:-  சரி..சரி.. இப்ப விசயத்திற்கு 


வாங்க. இப்ப அந்த ஜோடிக்கு 


என்னவாம்.


சந்தா:- இல்லடி.நாராயணன் அந்தக் 


கால நாகேஷ் மாதிரி இருப்பான். 


அவன் மனைவி நல்லா கிளி மாதிரி 


நம்ம பத்மினியே தான்.என்ன 


அழகு.என்ன அழகு. அதைத்தான் 


சொன்னேன்.


சரோ:- என்ன கதை வேற எங்கயோ 


போற மாதிரி இருக்கு. பேசாம 


என்னைய கல்யாணம் பண்றதுக்கு 


பதிலா அவளையே கட்டி இருக்க 


வேண்டியது தானே?                                


சந்தா:- (மனசுக்குள்- உம்.. என் தலை 


எழுத்து. உன்னை கல்யாணம் 


பண்ண பிறகுதானே அந்த 


தேவதையை நான் பார்த்தேன்) ஏய் !! 


என்ன சரோஜா. நான் சும்மா ஒரு 


பேச்சுக்கு சொன்னா, உடனே என் 


புஜ்ஜி குட்டிக்கு கோபத்தை பாரு. நீ 


சாதாரண ரோஜா இல்லையடி என் 


கண்ணே!! நீ சர்ர்ர்..ரோஜா 


இல்லையா! அடி கழுதை 


கோபத்துலே கூட நீ எவ்வளவு 


அழகு பாரு. (இப்படி எல்லாம் நடிச்சு 


பேசி ஐஸ் வச்சாத்தானேடி 


இன்னைக்கு ராத்திரி சாப்பாடு 


கிடைக்கும்) ஐ!! சிரிப்பைப்பாரு......... 


(உடனே அவர் மனைவி சரோஜாவும் 


சிரித்துக்கொண்டே சமையல் 


அறைக்குள் செல்கிறாள். எதையும் 


உடனேயே நம்பிவிடும் தமிழ் 


பெண்ணின் வம்சம்தானே அவள். )                                       

 

அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே !! 


மேலே குறிப்பிட்ட கதாநாயகன் 


சந்தானத்தைப் போலத்தான் இந்தக் 


கால கணவன்மார்களில் சுமார் 9௦ 


விழுக்காடுகளுக்குமேல் 


மனைவியிடம் பிரியம் 


உள்ளவர்போல நடித்துக்கொண்டு 


அடுத்தவர் மனைவியை சைட் 


அடித்துக்கொண்டு பொய் வாழ்க்கை 


வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் 


என உளவியல் ஆய்வு அறிக்கைகள் 


சுட்டிக்காட்டி உள்ளதாக 


உளவியல் ஆர்வலர்கள் சொல்லு 


கின்றார்கள்.                                               


இந்தக்காலஇளம்கணவன்மார்களே 


நீங்களும் அதுபோல இல்லாமல் 


மனைவியை உளமாற, மனதார, 


நேசித்து, ஒருவனுக்குஒருத்தி, என்ற 


வள்ளுவனின் குறளில் சொன்ன 


கருத்து போல வாழ்ந்திடவேண்டும் 


என கேட்டுக்கொண்டு விடை 


பெறுகிறேன். நன்றி !! வணக்கம் !!     


அன்புடன்.மதுரை T.R. பாலு.

                   

No comments:

Post a Comment