Thursday, July 4, 2013

கெட்டவன் வாழ்வதும் நல்லவன் கஷ்டப்படுவதும் எதனாலே ? வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!     


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!    


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது!!


தினம் ஒரு திருக்குறள்.                                           


அதிகாரம்  :-   அழுக்காறாமை.               


குறள் எண்:-   169.                                                   


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ்                

*                                                                       செவ்வியான்       


கேடும்  நினைக்கப் படும்... ... ... ... .... .... ,..     



விளக்கம் :-   பொறாமை பொருந்திய 


நெஞ்ஜத்தைஉடையவனின் 


ஆக்கமும் அத்தகைய பொறாமை 


குணம் கிஞ்சித்தும் இல்லாத 


நல்லவனின் கேடும் ஆராயத் 


தக்கவை ஆகும். இது வள்ளுவர் 


நமக்கு அருளிய குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.                                                      




நமது நாட்டு நடப்பு விளக்கம் :- அந்த 


ஊர் பஞ்சாத்து தலைவர் மதிப்பு 


உள்ள பஞ்சவர்ணம் அவர்கள். 


பார்க்க நல்ல மனிதர் போல 


வெள்ளை வேட்டி சட்டை 


மேல்துண்டு .இவரது வேலை: பொது 


மக்கள் நலத்திற்கு உழைப்பது என்று 


சொல்வது. ஆனால் உண்மை அது 


அல்ல. ரொம்ப கெட்ட எண்ணம் 


கொண்டவர். பாத்தீங்கன்னு 


சொன்னா இந்த கெட்டவர்தான் வீடு 


வாசல் தோட்டம் உளவு மாடு வண்டி 


கார் வங்கியில் நிறைய பணம் 


சேமிப்பு. வீட்லே 1௦௦௦ பவுனுக்கு 


மேலே தங்க நகைகள்.வெள்ளி 


பாத்திரங்கள் கையிலே ரொக்கப் 


பணம் கையிருப்பு 5 C க்கு மேலே 


இருக்கும். ஆனால் உடம்பு பூரா 


வியாதி.தினமும் மருத்துவர் வந்து 


பரிசோதனை செய்த பின் தான் அவர் 


உடல் என்ன நிலைமையில் இருக்கு 


என தெரியவரும்.                                               


அதே தெருவில் ஒரு உண்மை 


ஊழியர் பரோபகார சிந்தனை 


மட்டுமே உடையவர்.நல்லவர் 


வேலைசெய்வதில் வல்லவர்.அந்தப் 


பகுதி மக்களின் என்ன தேவைகள் 


என்றாலும் அத்தனையையும் தனி 


ஒரு ஆளாக செய்து முடிப்பவர். 


ஆனால் இப்படிப்பட்ட நல்லவரிடம் 


கையிலே காசு பணம் கிடையாது. 


சொந்தம் பந்தம் எதுவும் இல்லை. 


செத்தா தூக்கிப் போட ஆளும் 


இல்லை யாரும் இல்லை. ரொம்ப 


கஷ்டம் வாழ்க்கை முழுவதும்.   ஏன் 


இந்த நிலை.வள்ளுவர் சொன்ன 


கருத்துப்படி இவர்கள் இருவரின் 


வாழ்வு நிலைகளும் ஆராயத் 


தக்கவை. அப்படீனா என்ன? போன 


பிறவியில் பஞ்சாயத்து தலை 


ரொம்ப ரொம்ப நல்லது 


பண்ணியதாலே அந்த புண்ணியம் 


அவருக்கு இந்தப் பிறவியிலே நல்ல 


வாழ்க்கையைத் தந்து இருக்கு. 


ஆச்சா!! அதே கதை தான் நம்ம 


நல்லவருக்கும். இந்தப் பிறவியிலே 


நல்லவர் அவரோட போன 


ஜென்மத்திலே ரொம்ப ரொம்ப 


கெட்ட மனுசனாத்தான் வாழ்ந்து 


இருக்காரு. அந்த பிறவியிலே அவர் 


செஞ்ச கெடுதல்கள் இந்தப் 


பிறவியிலே அவரை வாட்டி 


வதைக்குது.இதுதான் வள்ளுவர் 


சொன்ன ஆராயத்தக்கவை என்ற 


வார்த்தையின் உட்பொருள். புரிந்து 


சிறந்து தெளிந்து வாழ்ந்து வழி 


காட்டுங்கள் அன்பர்களே. 


நன்றி.வணக்கம்.மீண்டும் நாளை 


சந்திப்போமா. அன்புடன் மதுரை TR. 


பாலு.

No comments:

Post a Comment