Tuesday, July 2, 2013

சாமியாராகப் போவது நல்லதா!!?இல்லை சந்நியாசியாகப் போவது சிறந்ததா!!?ஒரு கண்ணோட்டம்.





உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!  


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!


தனித்தமிழில்மட்டுமே பேசிடுங்கள்!!


ஆங்கிலமொழி கலப்பு ஏதும் இன்றி!! 


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுதில் !!  




உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலாக நான் போற்றி 


வணங்கிவரும் அன்புத் தமிழ் உடன் 


பிறப்புகளே !!      



உங்களில் அனைவருக்கும் எனது 


நெஞ்சார்ந்த காலை வணக்கம். 


இன்றைய தினம் "குறள் விளக்கம்" 


வலை பதிவில் நம் ஒவ்வொருவரது 


வாழ்கையிலும்  பின்னிப் பிணைந்து 


உள்ள பிரச்னைக்கு வான்புகழ்  


வள்ளுவர் எப்படி அழகுற பதில் 


கூறியுள்ளார் என்று பாருங்கள் 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே!! 



வீட்டுக்கு வீடு வாசல் படி. இது ஒரு 


பொது மொழி. இதற்கு உண்மைப் 


பொருள் என்னவென்றால் எப்படி 


எல்லோருடைய வீட்டினிலும் 


வாசல் படி என்று ஒன்று உள்ளதோ, 


அது போல ஒவ்வொருவரது 


வீட்டிலும் ஒரேமாதிரியான  


பிரச்சனைகள் இருந்தே தீரும். இது 


தவிர்க்க முடியாதது. ஆகவே நாம் 


அவைகளைசந்தித்தே தீர 


வேண்டும்.எப்படி இரவும் பகலும் 


மாறி மாறி வருகிறதோ அது 


போலவே இன்பமும் துன்பமும் மாறி 


மாறித்தான் வரும்.எல்லோருக்கும் 


மனைவி "மந்திரியாக" அமைவது 


இல்லை.அவள்  மந்திரியாக 


இல்லாமல் கூட இருந்து விடலாம். 


ஆனால் அந்த மனைவியாக 


இருக்கப்பட்டவள்  ஒரு"மாதிரியாக " 


மட்டும் இருந்திடக் கூடாது. சங்க 


காலப் பாடல்களில் மனைவியைப் 


பற்றி குறிப்பிடும் போது என்ன 


சொல்லி இருக்கின்றார்கள் 


என்றால் மனைவி குணவதியாக 


வீட்டில் உள்ளவரை உனது 


வாழ்வினில் யாதொரு குறைவும் 


கிடையாது. ஆனால் அதே சமயம் 


அந்த மனைவியாகப்பட்ட அந்த 


பெண், மனைவியாக இல்லை என்று 


சொன்னால் நீ யாரிடமும் 


எவரிடமும் சொல்லாமல் 


கொள்ளாமல் சந்நியாசம் வாங்கிக் 


கொண்டு எங்கேயாவது கண் 


காணாத இடம் நோக்கி நீ சென்று 


விடு என்ற அந்தப் பாடலின் வரிகள் 


கீழ்வருமாறு :-                                                 



இல்லாள் அகத்திருக்க                               

இல்லாதது ஒன்று இல்லை.                     

இல்லாளும் இல்லாளே யாமாயின் 

கூறாமல் சன்னியாசம் கொள்...... ..... 


இந்தக் கருத்தினையே அய்யன் 


வள்ளுவன் வேறு ஒரு குறளில் 


என்ன சொல்லியிருக்கிறார் 


என்றால் :-                                                        



அதிகாரம்:-வாழ்க்கைத் துணைநலம் 


குறள் எண்:- 53.                                                   



இல்லதென் இல்லவள் மாண்பானால்         *                                                                உள்ளதென்      


இல்லவள் மாணாக் கடை... ... ... ... ...    



விளக்கம்:-  மனைவி நற்பண்புகளை  


உடையவளானால், இவன்(கணவன்)


வாழ்வினில் இல்லாததுதான்என்ன ? 


அதே மனைவி நற்பண்புகள் இல்லா 


பெண்மகள் என்று அமைந்திட்டால் 


அவன் வாழ்வினில் இருப்பது என்ன? 


இது வள்ளுவர் நமக்கு அருளிய 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



ஆக ஒரு குடும்பத்தில் 


சண்டை,சச்சரவு,பிரச்சினை என 


ஒன்றின் பின் ஒன்று வந்து 


கொண்டே உள்ளது என்று 


சொன்னால் அதற்கு மூல ஆதாரம் 


மனைவி என்பவள் மட்டுமே. ஆக 


இந்தக் கருத்தினை மையமாக 


வைத்து என் கவியரசர் 


கண்ணதாசன் எழுதிய பாடல் தான் 


இயக்குனர்    சிகரம்/இமயம்            


திருK. பாலச்சந்தர் அவர்களின் 


சிறந்த படைப்புகளுள் ஓன்றான 


1976ம் ஆண்டு வெளிவந்த உலக 


நாயகன் தனது சிறந்த நடிப்பில் 


வெளிவந்த வண்ணக் காவியமாம்             


" மன்மத லீலை "படத்தில் ஒரு 


பாடல் எழுதியிருந்தார். அதுதான் 


திரு K.J.ஜேசுதாஸ் தனது மலரினும் 


மெல்லிய குரலில் காதல் இரசத்தை 


கலந்து தந்த பாடல் :-                                   



மனைவி அமைவதெல்லாம் 


இறைவன் கொடுத்த வரம் !!                       


மனது மயங்கி என்ன உனக்கும் 


வாழ்வு வரும்.....என்ற பாடல்.    


(அதில் அடுத்த பாராவில் கவிஞர்....) 


பொருத்தம் உடலிலும் வேண்டும்!!


புரிந்தவன் துணையாக வேண்டும்!! 


கணவனின் துணையோடு தானே 


காமனை வென்றாக வேண்டும் !!         


(இந்த வரிகள் தங்கத் தகட்டில் வைர 


ஊசியின் முனை கொண்டு எழுதப் 


பட வேண்டிய வாசகங்கள் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே!!) ஆக ஒரு 


வீட்டின் குத்து விளக்கு என்பவளும் 


மனைவி என்பவளே !! அதே வேளை 


கணவனை வார்த்தைகளால் ஊசி 


முனை கொண்டு குத்துபவளும் 


அதே மனைவி எனப்படுபவளே 


ஆகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில்     


மனைவியின் கொடுமைகளை 


தாங்கிட முடியாத சூழ்நிலை 


உருவாகும் போது இந்த ஆடவன் 


கணவன் இருக்கிறானே அவன் 


நிலை மிகவும் பரிதாபத்துக்கு 


உரியது. அதனால்தான் அந்த 


சூழலில் அவன் கட்டுரை தலைப்பில் 


குறிப்பிட்டு இருப்பதைப் போல 


சாமியாராக போவது நல்லதா? 


இல்லை, சன்னியாசியாகப் போவது 


சிறந்ததா என்ற சிந்தனையின் உச்ச 


கட்ட எல்லையில் கணவன்/


கிரகஸ்தன் என்பவன் நிற்கிறான். 


இந்த நிலை கண்ட வான் புகழ் 


வள்ளுவன் எழுதிய குறள் அதன் 


விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது. 


அன்பர்கள் அனைவரும் படித்து 


பார்த்துப்  பயன் பெற வேணுமாய்க் 


கேட்டுக்கொண்டு நல்ல நல்ல 


உள்ளங்களுக்கு நன்றி கூறி இந்த 


கட்டுரைதனை நான் நிறைவு 


செய்கிறேன். நன்றி!! வணக்கம் !! 


மீண்டும் நாளை சந்திப்போமா ? 


அன்புடன் மதுரை TR.பாலு.



தினம் ஒரு திருக்குறள்.                                       


அதிகாரம்   :-  கூடா ஒழுக்கம்.                      


குறள் எண் :-  280.                                                 


மழித்தலும் நீட்டலும் வேண்டா- 

*                                                     உலகம் 

பழித்தது    ஒழித்து விடின்... ... ... ... ... ...  


விளக்கம் :-    இந்த உலகம் பழிக்கும் 


தீய ஒழுக்கத்தை விட்டு விட்டால் 


அது மட்டுமே போதுமானது. 


மொட்டை அடித்து சாமியாராகவும் 


வேண்டா. தாடி வளர்த்து சந்நியாசி 


ஆகவும் வேண்டா. இந்த விளக்கமே 


வான் புகழ்  திருவள்ளுவர் நமக்கு 


அருளிய திருக்குறளும் அதன் நல்ல 


விளக்கமும் ஆகும். நன்றி. 


வணக்கம்.                                   



No comments:

Post a Comment