Saturday, July 13, 2013

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!


தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!     


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!                     

ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!! 


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது!!       




உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 


எனது உயிரையும் விட நான் சற்று 


அதிகமாகவே நேசிக்கும்என் அன்புத் 


தமிழ் உடன்பிறப்புகளே!!வணக்கம். 



இன்றைய தினம் "குறள் 


விளக்கம்"பக்கத்தில் நான் எடுத்துக் 


கொண்ட அதிகாரம் " வாழ்க்கை 


துணை நலம்". ஒரு ஆண் மகனுக்கு 


மனைவி அமைவது என்பது எனது 


குருநாதர் கவியரசர் கண்ணதாசன் 


சொன்னது போல அது "இறைவன் 


கொடுத்த வரமேதான்". ஆனால் 


அப்படி எல்லோருக்கும் அமைவது 


என்பது கிடையாது. நான் ஒரு 


ஜோதிடரும் கூட என்பதால் 


ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் 


7ஆம் வீடுதான் மனைவி ஸ்தானம் 


ஆகும். களஸ்திர ஸ்தானம் என்றும் 


சொல்வது உண்டு.ஏன் அந்தப் பெயர் 


வந்தது என்றால் போராடும் 


இடம்,சண்டை செய்யும் 


இடம்,போர்க்களம், என்றும் வெற்றி 


காணும் இடம், உழவர்களைப் 


பொறுத்த வரையில் அவர்கள் 


நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி 


உழைத்து பாடுபட்டு நெற்கதிர்களை 


வளர்த்து அறுவடை செய்து அந்த 


கதிர்களை ஓங்கி,தூக்கி அடித்து 


நெல்மணிகளை பெற்று வெற்றி 


அடையும் இடம் "களத்து மேடு " 


என்று சொல்வது உண்டு.இவைகள் 


எல்லாமே அந்த 7ஆம்வீடு என்று 


சொல்லப்படும் களஸ்திரஸ்தானம் 


என அழைக்கப்படும் காம 


ஸ்தானமே ஆகும். ஜனன கால 


ஜாதகத்தில் இந்த 7ஆம் வீடு 


கோளாறு ஆகிவிட்டது என்று 


சொன்னால் அவனது வாழ்வே 


கோளாறுதான்.               


 மனித மனம் என்பது ஒரு 


கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கும் 


இயல்பு கொண்டது. இந்த உலகில் 


எந்த ஆணும் தனது மனைவியுடன் 


மட்டும்உறவுவைத்துக்கொண்டவன் 


என்று சொல்லவே முடியாது.ஒரு 


கோடி ஆண்களில் ஒருவர், இருவர் 


வேண்டுமானால் ஒருவனுக்கு 


ஒருத்தி என்ற தத்துவத்தில் 


வாழ்ந்திடலாம். ஆனால் 


ஏனையோர் அனைவரும் 


"தப்பித்தால் தப்பில்லை " என்ற 


தலைப்பினில், மறைந்த பண்பாட்டு 


எழுத்தாளர் சுஜாதா எழுதிய 


நாவலின் தலைப்பு போலவே இங்கு 


" இன்றளவும் " வாழ்ந்துகொண்டு 


இருக்கிறார்கள் என்று சொன்னால் 


அது மிகைப்படுத்தப்பட்ட சொல் 


அல்ல அன்பு தமிழ் 


உடன்பிறப்புகளே !!


அகப்பட்டால்தான் திருடன்!! 


அகப்படாதவரை இராஜா தான் !!. 


இப்படி எண்ணத்தோடு 


வாழ்பவர்கள் 


தான் 95 விழுக்காடுகளுக்கு மேல் 


உள்ள ஆண்மகன்கள் ஆகும் அன்புத் 


தமிழ் உடன்பிறப்புகளே !!ஆனால் 


நமது புராணங்களும் சரி!! நமது 


இதிகாசங்களும் சரி பெண்களை 


மட்டுமே கற்புநெறியோடு வாழ 


வேண்டும். கணவன் தவிர பிற 


ஆண்களை கண்கொண்டு 


நேரிடையாக பார்த்தல்கூடாது. 


தொட்டுத் தாலி கட்டிய கணவனது 


கண்களுக்கு மட்டுமே நிறைந்து 


வாழ்தல் வேண்டும்.பிற ஆடவர் 


கண்களுக்கு மறைந்து வாழ்தல் 


வேண்டும்.அப்படி நடப்பவள் 


மட்டுமே " கற்புக்கு அரசி " 


என்றெல்லாம் அந்தக் காலத்தில் 


அழைக்கப்பட்டு வாழ்ந்துவந்தனர் 


பெண்குலப் பெருமக்கள். ஏன் அப்படி 


பெண்ணுக்கு மட்டுமே கற்பு நெறி 


கொண்டு வாழ்வதினை நம் 


முன்னோர்கள் கடமையாக ஆக்கி 


விட்டுச் சென்றுள்ளார்கள் என்றால் 


பெண் என்பவள் ஒரு பானை 


முழுவதும் நிறைந்துள்ள 


பரிசுத்தமான தூய்மையான தரமான 


பாலை ஒத்தவள்.அந்த பாலில் ஒரு 


சொட்டு ஒரே ஒரு சொட்டு மாற்று 


திரவம் விழுந்தது என்று 


சொன்னால் பானை முழுவதும் 


உள்ள பால் கெட்டுவிடும். 


அது போலவே ஒரு பெண் என்பவள் 


வாழ்வினில் மனம்போன போக்கில் 


வாழ ஆரம்பித்தால் அது அவளை 


மட்டும் அல்ல அவளது குடும்ப 


பாரம்பரியம் முழுவதற்குமே கெட்ட 


பெயரை ஏற்படுத்தி விடும்.அதனால் 


மட்டுமேபெண்களுக்கு இவ்வளவு


கட்டுப்பாடுஅந்தக்காலத்தில்விதிக்க


பட்டு பெண்கள் வாழ்ந்த காலம் 


என்று ஒன்று இருந்தது. 



ஆனால் இன்று அந்த சட்டம் 


எல்லாம் நவீன நங்கையர்களுக்கு 


பொருந்துமா? அவர்கள் அதனை 


ஏற்றுக்கொள்வார்களா? 


ஜீரணிக்கும் சக்தி இந்தக் கால 


பெண்களிடம் உள்ளதா?


அவரவர்களது மனசாட்சிப்படி 


பதிலை அவர்களுக்குள்ளாகவே 


சொல்லிக்கொண்டால் 


போதுமானது. இப்போது நாம் 


தலைப்பு சம்பந்தப்பட்ட 


விஷயத்திற்கு வருவோம் 


அன்பர்களே !! நான் ஏற்கனவே 


இந்தக் கட்டுரையின் நடுப்பகுதியில் 


குறிப்பிட்டுள்ளதைப்போல 


 கற்புக்கரசிகள் பற்றிய குறளையும் 


அதன் விளக்கத்தினையும் கீழே 


நாம் காண்போமாக:-                                           


தினம் ஒரு திருக்குறள்.                             


அதிகாரம் :-வாழ்க்கைத்துணைநலம்


குறள் எண்:- 55.                                               


  தெய்வம்  தொழாஅன்   கொழுநன்  தொழுதெழு

**                                                                                       வாள்** 

   பெய்யெனப் பெய்யும் மழை... ... ... ... ... ... ... ... ... ... ... 


விளக்கம்:-வேறு எந்தத்தெய்வத்தை 


-யும்  தொழாதவளாய்த் தனது 


கணவனை மட்டுமே தெய்வமாகக் 


கொண்டு தொழுது பின் துயில் 


எழுகின்ற பெண், பெய், என்று 


சொன்னால் மழை பெய்யும். இது 


வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன் 


விளக்கமும்   ஆகும்.                                                                 


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-               


மேலே சொன்ன குறளையும் அதன் 


விளக்கத்தையும் சிவன் கோவில் 


உற்சவத்தில் பக்தி சிரோன்மணி 


உபன்யாசகுல திலகம் ஸ்ரீலஸ்ரீ 


பாலகிருஷ்ண சாஸ்திரிகள் 


வெகு அழகான  விளக்கத்துடன் 


சொன்னதைக் கேட்டுகொண்டிருந்த 


நமது குப்புச்சாமி நேராக வீட்டுக்கு 


வந்தான். வீட்டுக்குள் வந்தவன் 


நேரே சமையல் அறையில் 


சமைத்துக்கொண்டு இருந்த தனது 


அழகிய "புத்தம்புது" மனைவியான 


சுந்தரியை அழைக்கிறான்.                     


குப்புச்சாமி:-சுந்தரி!அடியேய் 


சுந்தரி!! 


எங்கடி போய்த்தொலைஞ்சு போனே 


உம்.. கூப்பிட்ட குரலுக்கு நாய்!! நாய் 


மாதிரி ஓடி வரல்லேன்னு சொன்னா 


உன்னையை கட்டிகிட்டதுக்கு ஒரு 


நாயைக் கல்யாணம் 


செஞ்சிருக்கலாம்டி. சுந்தரி !!               


சுந்தரி :- அடடா!! ஏன்னா ஏன் காலங் 


காத்தாலே நாய் மாதிரி வள்ன்னு


குறைச்சுண்டு இருக்கேள். சித்த 


மெதுவா, அன்போட, ஆசையோட, 


சுந்தரி அப்படீன்னு கூப்பிட்டா நான் 


வர மாட்டேனா ? ஏன்னா 


சொல்லுங்கோ ஏன் இப்படி மச 


மசன்னு நின்னுண்டு இருக்கேள்? 


சொல்லுங்கோ விஷயத்தை!!                 


குப்பு:-என்னத்தடி சொல்லச் 


சொல்றே. உம்.. நான் உன்னையை 


நாய் அப்டீன்னு சொன்னா நீயும் 


பதிலுக்கு என்னையை நாய்ன்னு 


சொல்றே!! இரு இரு உன்னைய 


அப்பறம் வச்சுக்கிறேன்.                             


சுந்தரி:- கிளிச்சேள் !! விஷயத்தை 


சொல்லுங்கோ.நேக்கு ! நாழியாரது. 


குப்பு:- ஏண்டி நீ கற்புக்கரசி தானே.     


சுந்தரி:- அட ராமா ! இதென்ன 


அந்நியாயமா இருக்கு. ஒரு 


ஆம்படையான், ஆத்துக்காரியைப் 


பாத்துக் கேக்கற கேள்வியா இது ? 


உம்.. ஆமா நான் கற்புக்கு 


அரசியேதான். இப்ப அதுக்கு என்ன. 


சொல்லுங்கோன்னா.                   


குப்பு:- சரி. ஏண்டி! சுந்தரி !! நீ 


என்னையைத்தானே தெய்வமா 


வழிபடரே!அப்டீன்னா.இப்ப நீ 


வானத்தைப் பாத்து மழை பெய். 


அப்டி சொல்லு. மழை பெய்றதா 


பாப்போம் .                                                 


 சுந்தரி :- அச்சச்சோ ! ஏன்னா! 


உங்களுக்கு என்ன கிறுக்கு கிறுக்கு 


பிடிச்சுடுத்தா? ஏன் இப்படி 


பினாத்றேள் ? 


நேக்கு பயம்மா இருக்குன்னா 


என்னை விட்டுடுங்கோ ப்ளீஸ். 


உங்காத்துக்கு கோடி புண்ணியம் 


உண்டு.                                                     


குப்பு:- அடியேய்! அப்படி எல்லாம் 


சொல்லிட்டு என்னாண்ட இருந்து 


தப்பிச்சு ஓடிரலாம்னு பார்க்ரியாடி. 


அதுதான் நடக்காது,உக்கும். ஏய்! 


மழை பெய்யச்சொல்லுடி!!                 


(அப்போது குப்புச்சாமி கூட 


எப்போதும் இருக்கும் அவர் தம்பி


அப்புச்சாமி):-  மன்னி ! அது விஷயம் 


வேற ஒன்னும் இல்லை (உபன்யாச 


விஷயம் பற்றி சொல்கிறார் 


அப்புச்சாமி தனது அண்ணா 


(சம்சாரத்திடம்) மன்னியிடம்)                                               


 சுந்தரி:-ஓஹோ !! அப்படியா 


விஷயம். ஏன்னா, சித்த இப்படி 


வரேளா!! என்ன செய்யச் 


சொன்னேள் ?. 


குப்பு:- வானத்தைப் பாத்து மழை 


பெய் அப்படி சொல்லு. பெய்யுதா 


பாப்போம்.அப்ப தான் நீ என் 


மனைவி. என்னையை மட்டும்தான் 


நீ தெய்வமா வணங்குறேன்னு 


அர்த்தம்.உக்கும்... ... ...                                             


சுந்தரி:- அட மட ஆம்படையானே!! 


அங்கே சொன்னது திருவள்ளுவர். 


அவர் ஒரு உத்தம புருஷன். மனைவி 


வாசுகியைத் தவிர வேறு யாரையும் 


அவர் கண்ணால் கூட பாக்க 


மாட்டார். அங்கே மழை பெய் என 


சொன்னால் பெய்யும். இங்கே எப்படி 


பெய்யும்னேன்.


ரோட்டுலே போற ஒரு 


பொம்மனாட்டியையும் விடறது 


இல்ல. தெற்குப் பக்கம் 


பொம்மனாட்டியை பார்த்து வழிய 


ஆரம்பிச்சா வடக்குப் பக்கம் முடியற 


வரை அவாளோட அங்க 


அசைவுகளைப் பார்த்து ஜொள்ளு 


விடுவேள் .  நான் பக்கத்திலே 


இருக்கச்சே எத்தனை 


பொம்பளைகளை பாத்து சைட்டு 


அடிச்சுருக்கேள். எல்லாம் நேக்கும் 


தெரியும். கண்டும் காணாமல் நான் 


போயுண்டு இருக்கேன்.ராமா 


இவருக்கு நல்ல புத்தியை 


கொடுன்னு நான் வேண்டாத நாளே 


இல்ல.அதான் கேக்றேன். இங்கே 


நீங்க சொன்னா எப்படி மழை 


பெய்யும்?                  


குப்பு:- ஏன்! ஏன்! ஏன் இங்கே 


பெய்யாது?                                                     


 சுந்தரி :-  ஏன்னா இங்கே கூப்பிடச் 


சொல்றது என் ஆம்பிடயானாக்கும். 


பின்னே எப்படி மழை பெய்யும். 


பேசாம பொத்திண்டு போங்கோ. ஏன் 


என் மானத்தை வாங்கறேள். நேக்கு 


பத்திண்டு வர்றது.அட ராமா !! அட 


கஷ்ட காலமே!!நேக்கு ஒரு 


விமோசனமே கிடையாதா? எண்ட  


குருவாயூரப்பா!! நேக்கு 


மோஷத்தைக் கொடு. இனிமே இந்த 


மனுஷாளோட என்னாலே குப்பை 


கொட்டிண்டு இங்கே இருக்க 


முடியாது. நான் இப்பவே இந்த 


ஷணமே என் பொறந்த ஆத்துக்கு 


கிளம்பறேன். நீர் ஷேமமா எல்லா 


பொம்மனாட்டிகளையும் பாத்துண்டு 


சந்தோஷமா சௌக்கியமா 


 இருங்கோ.நான் வரேன்!!                           

****************************************

  

இத்துடன் கட்டுரை நிறைவு 


பெறுகிறது. யாரையும் 


புண்படுத்தவேண்டும் என்பது எனது 


நோக்கம் அல்ல. எல்லோரையும் 


தமிழின் சுவை அறிந்து அந்த 


தேனினும் இனிய மொழிதனை 


நன்றாக பயன்படுத்திடுவதற்கு 


மக்களை  நன்கு பண்படுத்துவதே 


எனது நோக்கம்.நன்றி.வணக்கம் .   


மீண்டும் நாளை சந்திப்போமா ? 


அன்புடன் மதுரை TR.பாலு.               



No comments:

Post a Comment