Thursday, October 10, 2013

பொண்டாட்டிக்கு ஏவல் செய்து வாழ்ந்திடும் ஆண்மையை விட நாணம் கொண்ட பெண்மையே உயர்ந்தது !! வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



             தினம் ஒரு திருக்குறள்.                      


அதிகாரம்   :- பெண்வழிச் சேறல்.       


குறள் எண் :-  9௦7.                                       



பெண்ணேவல் செய்தொழுகும்             


                     ஆண்மையின் நாணுடைப் 



பெண்ணே பெருமை உடைத்து... ... ... 



விளக்கம் :- மனைவி இடுகின்ற 


கட்டளைகளுக்கு அஞ்சி, அவள் 


சொல்லுகின்ற வேலைகளைச் 


செய்து உயிர் வாழ்ந்துவரும் 


ஆண்மையை விட, நாணத்தையே 


தனது இயல்பான குணமாக உடைய 


பெண்ணின் பெண்மையே பெருமை 


உடைத்து. இது திருவள்ளுவர் 


நமக்கு அளித்திட்ட குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.                               


 

நமது நாட்டு நடப்பு விளக்கம் :-           



லலிதா-சந்திரன் இவர்கள்இருவரும் 


காதலித்து அதன்பின் திருமணம் 


முடித்த இளம் தம்பதிகள். லலிதா 


பெயருக்கேற்றபடியே அவள் ஒரு 


பேரழகி. பெரும் பணக்காரியும் கூட. 


இந்தப் பணம் சற்று அளவுக்கு 


அதிகமாக இந்தப் பெண்களிடம் 


இருந்தாலே (கணவன் சம்பாதிப் 


பதை விட ) இந்தக்காலப் 


பெண்களுக்கு எங்கிருந்துதான் 


வருமோ இந்தத் திமிரும் ராங்கித் 


தனமும், கணவனை பத்து நயா  


பைசாவுக்குக்கூட மதித்திடாத 


எகத்தாளம் நிறைந்த, 


ஏளனத்தன்மை செறிந்த குணமும் 


இதுபோன்ற அகங்காரம் கொண்ட 


பெண் இனத்தின் பரம்பரைச் 


சொத்தாகக் கூட  இருக்கலாம். 


அதிலும் நமது கட்டுரையின் வரும் 


பெண் பெயரே பொதுவாக திமிரின் 


ஒட்டுமொத்த அடையாளம் தான். 


இது ஊர் அறிந்த,உலகறிந்த 


உண்மை. ஆண்டவன்தான் 


இப்படிப்பட்ட பெயர் உடைய 


பெண்களுக்கு நல்ல புத்தியைத் தர 


வேண்டும். (தயவு செய்து லலிதா 


என்ற பெயரை உடைய உலகினில் 


வாழ்ந்துவரும்சாந்தசொரூபிணிகள் 


யாரேனும் இருந்தால் நான் 


அவர்களின் பாதார விந்தங்களில் 


என் இரு கரங்களையும் வைத்து 


பகிரங்க மன்னிப்பு கேட்கக்கூடத் 


தயாராகத்தான் நான் இருக்கிறேன். 


நான் உங்களைப் பற்றிச் சொல்ல 


வில்லை, என்றும் இந்தப் பெயரை 


உடைய, திமிரின், அடங்காப் 


பிடாரத்தன்மையை மட்டுமே 


தங்களது அங்கத்தின் மொத்த 


அடையாளச் சின்னமாக 


காட்டிக்கொண்டு இந்த நாட்டை 


வலம் வந்து கொண்டு இருக்கும் 


எத்தனை எத்தனையோ லலிதா 


என்ற பெயரை உடைய 


அம்மையார்களைப் பற்றித்தான் 


சொல்கிறேனே ஒழிய உங்களை 


அல்ல என்று மன்னிப்பு கேட்டுக் 


கொள்கிறேன். )இப்போது நாம் நமது 


நாட்டு நடப்பு விளக்கத்தின் உள்ளே 


செல்வோமா நேயர்களே !! 


பொதுவாக நம் உலகியலில் ஒரு 


சொல் வழக்கு ஒன்று உண்டு. அது 


யாதெனின் தனக்கு இளையது தாரம் 


என்று. இங்கே நீங்கள் சற்றே உற்று 


கவனிக்க வேண்டுகிறேன்.என்ன 


அது? இளையது என்றால் வயதில் 


மட்டும் அல்ல. அறிவினில், 


அந்தஸ்தினில்,அழகில்,சொத்தின் 


மதிப்பீட்டில், வருமானத்தின் 


அடிப்படையில் நமக்குமனைவியாக 


வருபவள் நமது நிலையை விட 


மேலே சொன்ன அனைத்து 


அம்சங்களிலும் இளையவளாக 


இருத்தல் என்பது மிகமிக 


அவசியமானது அன்பர்களே!!இங்கே 


நமது கற்பனை காவியக் கதையில் 


மனைவி லலிதா நாயகன் சந்திரன் 


இவனைவிடஅழகி,பணக்காரி,நல்ல 


சிவந்த மேனியின் நிறம்உடையவள் 


(ஏங்க இம்புட்டு சொல்லீடீங்க, இனி 


இந்தப் பொம்பள அவ புருஷனை 


மயிரா மதிக்கப்போறா?) உங்க 


கேள்வி என்னமோ நியாயம் 


நிறைந்ததுதான்.ஆனா இங்கே 


பாதிக்கப் படுவது சந்திரன் என்னும் 


ஆண் இனம் தானே!! சரி என்ன 


செய்வது? காதல் அதற்குப்பின் 


திருமணம் என்றஇந்தக் கால 


வாழ்கையில் இதுவெல்லாம் 


ரொம்ப,ரொம்ப,சகஜம்தான்.நாங்கள் 


வாழ்ந்திருந்த காலங்களில் 


எல்லாம் திருமணங்கள்தாய்,தந்தை 


இருவர் மட்டுமே பெண்ணைப் 


பார்த்து இவள் நம் மகனுக்கு 


ஏற்றவள் என்பதனை அவர்கள் 


மட்டுமே தீர்மானித்து அதன் பிறகு 


பெரியவர்களுடன் பேசி முடிவு 


செய்த கல்யாணங்கள்தான் 


அன்றைய தினம் நடைபெற்றிருந்த 


காலங்களில் நாங்கள்வாழ்ந்திருந்த 


காலம்.சரி !! அதனால் என்ன பயன்? 


உண்மையில் சொல்கிறேன் நான் 


என் மனைவியை பார்த்ததே 


திருமணத்தன்று மணமேடையில் 


வைத்துத்தான். அதற்கு முன்பாக 


எங்களுக்குள் ஏவ்வித 


தொடர்புகளும் கிடையாது.இதோ 


எனக்கும் எனது இல்லத்தரசிக்கும் 


திருமணம் முடிந்து ஆண்டுகள் 39 


நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 


எங்கள் இல்லறவாழ்வின் பயன், 4 


குழந்தைகள், கொசு 2, மூட்டைப் 


பூச்சி 2, பெற்றுஎடுத்தோம்.(அதாவது 


பெண் குழந்தை 2, ஆண் குழந்தை 2, 


என்பதை நான்  வேடிக்கைக்காகஎன் 


நண்பர்கள் மத்தியில் குறிப்பிடுவது 


உண்டு) கொசு என்றால் என்னதான் 


பெண் குழந்தைகளை நாம் 


திருமணம் செய்வித்து அவர்களை 


அவர்களது புகுந்தவீட்டிற்கு அனுப்பி 


வைத்தாலும் கூட அவ்வப்போது 


தாயார் வீட்டிற்கு வந்து கொசு 


கடிப்பது போல என்னத்தையாவது 


பெற்றுக் கொண்டுதானே 


செல்வார்கள்.அதுபோல ஆண் 


பிள்ளைகளை ஏன் நான் இங்கே 


மூட்டைப் பூச்சி என்று 


குறிப்பிட்டேன் என்று சொன்னால், 


நமது ஆயுசு முடியும்வரை அவர்கள் 


நம்மோடுதானே இருப்பார்கள். 


எப்படி மூட்டைப்பூச்சி நம் 


படுக்கையிலேயே ஒட்டிக்கொண்டு 


இருக்கும் அதுபோல ஏதாவது 


சிறுசிறு விஷயங்கள் ஊடல்கள் 


சண்டைகள் சச்சரவுகள்அவர்களால் 


நாம் சந்தித்துக்கொண்டேதானே 


நாம் நமது வாழ்க்கையை 


வாழ்நாளின் இறுதிவரை கொண்டு 


செல்ல வேண்டி உள்ளது. 


அதனால்தான் ஆண் பிள்ளைகளை 


மூட்டைப் பூச்சி என்று நான் அங்கே 


குறிப்பிட்டேன். தவறுகள் இருந்தால் 


அதை   அருள்  கூர்ந்து   நேயர்கள் 


மன்னிக்க வேண்டுகிறேன்) எங்கள் 


39 ஆண்டுகால வாழ்க்கைப் 


பாதையில் இன்று வரை 


எந்தவிதமான சச்சரவுகளோ, 


சண்டைகளோ,மனக் கசப்புகளோ, 


எதுவுமே ஏற்பட்டது இல்லை. அவள் 


என்ன நினைக்கிறாளோ அதை 


மனைவி எண்ணி சொல்லிடும் 


முன்பே நான் செய்து முடிப்பேன் 


அதே போலத்தான் என் அன்புக்கும் 


பாசத்துக்கும் உரிய என் வாழ்க்கைத் 


துணைவி நான் என்ன எண்ணி 


வருகிறேன்,என்ன அவளிடம் 


கேட்கப்போகிறேன் என்பதை 


முன்கூட்டியே அறிந்து அதை நான் 


சொல்லிமுடிக்குமுன்பே செயலில் 


செய்து முடித்திடுவாள். எங்கள் 


இருவருக்குள் இந்த நாள் வரை 


எந்தவிதக் கருத்து வேறுபாடோ 


இல்லை மாறுபாடோ ஏற்பட்டது 


என்பதுகிடையவேகிடையாது.


இதற்கு என்ன காரணம்? 


நான் கட்டுரையின் முகப்பில் ஒரு 


அவசியமான, மற்றும் வாழ்க்கை 


நடத்துவதற்கு மிகமிக முக்கியமான 


அம்சம் கணவன்-மனைவி 


வாழ்க்கையில் இந்த குறியீடு 


நிச்சயம் அமைந்து இருக்க 


வேண்டும் என்று குறிப்பிட்டு 


இருந்தேன் அல்லவா? அது 


எங்களுக்குள் இருந்தது. 


வாழ்க்கையும் இன்றுவரை 


அமைதிப் பூங்காவாகவே ஓடிக் 


கொண்டு இருக்கிறது. அந்தத் தாரக 


மந்திரம்தான் அன்பர்களே !! :-           


 "தனக்கு இளையது தாரம் என்பது" 


சரி!! நேயர்களே நாம் இப்போதுநமது 


நாட்டு நடப்பு விளக்கத்தின் இறுதிப் 


பகுதிக்கு வந்து விட்டோம். லலிதா-


சந்திரன் இந்த இரு தம்பதிகள் 


நடுவில் நடைபெறும் ஒரு சிறு 


உரையாடலுடன் கட்டுரை அங்கே 


நிறைவு பெரும்.                                       


லலிதா :- ஏங்க !! ஏங்க !! அங்கே 


என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க. 


மனுசி இங்க நாயாக் கத்திக்கிட்டு 


இருக்கேன். உங்க காதுல விழல 


இல்லையா?(சற்று அதிகமான 


வேலைப்பளுவின் காரணமாக 


சந்திரன் சற்றே  அயர்வடைந்திருந்த 


தினால் லேசாக கண் மூடியதால் 


அதற்குக்கிடைத்த பரிசு இது)என்ன ? 


கூப்பிட்டியா ?                                           


 லலிதா:- என்ன கூப்பிட்டியாவா? 


ஏங்க நான் அப்பத்தி இருந்து 


கத்திட்டே இருக்கேன்? உம்..நீங்க 


உங்க மனசுலே நீங்க என்னதான் 


நினைச்சுட்டு இருக்கீங்க? ஆமா 


நேத்து நான் கரண்ட் பில் கட்டச் 


சொன்னேன்.பால் கார்டும் வாங்கச் 


சொன்னேன்.அப்படியே ரேஷன் 


கடைக்குப்போகச்சொன்னேன். 


சாமான் வாங்கிட்டு வர்றபாதையில் 


காய்கறியும் அப்படியே தேச்சுவச்ச 


உருப்படிகளை நம்ம தாஸ்அண்ணே 


கடையிலே வாங்கிட்டு 


வர்ச்சொன்னேன்னே ? இதுல எது 


எல்லாம் செஞ்சீங்க? சீக்கிரம்  


சொல்லுங்க .எனக்கு ஆபீஸ் 


போணும்.(வேலைக்காரக் கிழவி 


தெய்வானையைப் பார்த்து) ஏய்! 


டிரைவரை சீக்கிரம் வண்டியத் 


துடைச்சு வெளியே எடுக்கச் 


சொல்லு நான் இன்னும் 1௦ 


நிம்சத்துலே கிளம்பனும்.


(கணவனைப் பார்த்து) என்னங்க 


நான் பாட்டுக்கு பேசிட்டே 


இருக்கேன். நீங்க என்னடானா 


இப்படி எதுமே பேசாம இருந்தா 


எப்படிங்க.                                                       


சந்திரன்:- (மனசுக்குள்-ஏண்டி அறிவு 


கெட்ட நாயே.எனக்கு என்ன இருபது 


கையாடி இருக்கு. இருப்பது இரண்டு 


கைதானே ? ஒன்நோன்னாத்தனேடி 


செய்ய முடியும் வெறிபிடிச்ச நாயே) 


இல்லம்மா அது வந்து நீ சொன்னபடி 


ரேஷன் சாமான் வாங்கிட்டேன் 


அப்புறம் கரண்ட் பில் நேத்து 


கூட்டம்அதிகம் அதாலே கட்ட 


முடியலை. காய்கறி சாயந்திரம் 


ஆனதாலே வாங்க முடியல. தேச்ச 


டிரஸ் நான் கடைக்குப் போயி 


வாங்குறதுக்குள்ளே அவன் 


கடையை மூடிட்டுப் போய்ட்டான். 


லலிதா:-  உம்.. பரவாயில்லையே !! 


ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு 


காரணம் சொல்றீகளே சரியா.இந்தக் 


கதை எல்லாம் என்கிட்டேநடக்காது. 


இன்னைக்கு நான் ஆபீஸ்ல இருந்து 


திரும்பி வர்றதுக்குள்ளே எல்லா 


வேலையையும் செஞ்சு 


முடிக்கலைன்னு வச்சுக்குங்க 


.அப்புறம் நான் வந்து உங்களை 


வச்சுக்குறேன். டிரைவர் வண்டியை 


எடுங்க. சர்...என வண்டி புறப்பட்டுப் 


போயிருச்சு.                                                 


சந்திரன்:- இப்போது சத்தமா 


ஏய்..ஏய்..திமிர் பிடிச்ச ஓநாயே! 


உம்..வந்து என்னடி வச்சுக்கிறது. 


இப்பயே வச்சுக்கடி ஆங்காரம் புடிச்ச 


ஆந்தையே ! உன் ரீங்காரம் 


என்னலே தாங்க 


முடியலைடி.அய்யா நான் உன் 


அளவு பட்டப் படிப்பு 


படிக்கலதான்.அதாலே வேலை 


கிடைக்கலைதான்.சம்பாதிக்கிற 


அம்சம் இல்லாதவன்தான். 


காதலிக்கிறப்ப என்னடி !!நீ என்னடி 


சொன்னே.அதான் நான் 


சம்பாதிக்கிறேன்ல நீங்க எதுக்கும் 


கவலைப்படாதீங்க !!அப்படி !!


இப்படின்னு சொல்லிட்டுகல்யாணம் 


பண்ணிக்கிட்டு என்னையை இப்படி 


மறுநாள்ளே இருந்து டார்ச்சர் 


பண்ணியே கொடுமைப்படுத்துறயே 


உம்..உனக்கு மனசாட்சியே 


இல்லையா. உன்ட்ட புருஷன் 


உத்தியோகம் பார்த்து வயித்தை 


வளர்க்கிறதை விட்டு புட்டு பேசாம 


நாலுதெருபோயி பிச்ச எடுத்துப் 


பொழைக்கலாம்.பொசகேட்டவளே!! 


என்ன மாதிரி பொண்டாட்டிக்கு 


ஏவல் செஞ்சு காவல் காத்து வயித்த 


கழுவி வாழ்றதவிட பேசாம செத்துப் 


போயிரலாம்டி. இராட்ச்சசி. அப்படி 


நான் செத்தா அந்தப் பாவம் 


உன்னைய சும்மா விடாதுடி வெறி 


பிடிச்ச நாயே. தன்  இயலாமையை, 


வயித்தெரிச்சலை இப்படி 


வார்த்தைகளால் 


ஆற்றிக்கொள்வதைத் தவிர பாவம் 


சந்திரனால் வேறு என்ன செய்ய 


முடியும். அவன் தலை எழுத்து 


அப்படி!!  


(இது போல புலம்பி  கண் கலங்கி 


நிற்கும் சந்திரன் போன்றோர் 


இரண்டாயிரம் காலத்திற்குப் 


பின்னால்வருவார்கள் என்பதை 


முன்கூட்டியே கணித்து நம்ம 


அய்யன் திருவள்ளுவர் எப்படி எழுதி 


இருக்கார் குறளை.) உம்..நீங்களும் 


தினம் ஒரு திருக்குறள் 


படியுங்க.பொது அறிவினை 


வளர்த்திடுங்க. சொல்லித்தர 


நானிருக்கேன். போயிட்டு வாரேன். 


எனக்கு " புதிய தலைமுறை" 


தொலைக்காட்சியில் மூன்று நாள் 


குறும்படம் 1 படப்பிடிப்பு உள்ளது. 


எனவே நாம் மூன்று தினங்கள் 


கழித்து சந்திப்போம்.நன்றி !!


வணக்கம் !!. 


அன்புடன்.மதுரை TR.பாலு.


No comments:

Post a Comment