Sunday, October 27, 2013

வயதில் பெரியவர்களை மதித்து வணங்கிடும் குணம் இருத்தல் மிகமிக அவசியம் !! வள்ளுவர் வாக்கு !!







உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!



உரக்கச்சொல்வோம் இதை 



உலகுக்கு !!                                               



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!     



நம் வெற்றிப் பாதையில் நரிகள்       



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!                                                 



            "  தினம் ஒரு திருக்குறள்  "




அதிகாரம்:பெரியாரைப்பிழையாமை 



குறள் எண் :-  896.         




எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்                                                                உய்யார் 


பெரியார்ப் பிழைத்தொழுகு வார்... ... 



விளக்கம் :-  தீயினால் ஒருவர் 



சுடப்பட்டாலும் ஒருவேளை உயிர் 



பிழைத்து வாழ்ந்திட முடியும். 



ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியவர்-



களிடத்தில் தவறு செய்து நடப்பவர் 



ஒருக்காலும் தப்பிப் பிழைத்திட 



முடியவே முடியாது. இது 



திருவள்ளுவர் நமக்கு அருளிச் 



சென்ற குறளும் அதன் விளக்கமும் 



ஆகும்.                                                             



நமது நாட்டு நடப்பு விளக்கம்:- 



(இந்தக் கட்டுரையில் வரும் 



பெயர்கள்,சம்பவங்கள், நிகழ்வுகள், 



குறியீடுகள், இவை யாவும் 



கட்டுரையின் ஆசிரியர் கனவினில் 



தோன்றிய கற்பனையே தவிர, வேறு 



எந்தத் தனிப்பட்ட நபரையோ, 



அல்லது இயக்கத்தையோ 



குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல.)       



 அது ஒரு பொன் நாடு. கல்தோன்றி 



மண் தோன்றாக் காலத்தே முன் 



தோன்றிய மூத்த மொழி, அதுவும் 



ஒரு உலகப்புகழ் பெற்ற செம்மொழி 



பேசிடும் திரு நாடு. அந்த நாட்டில் 



சமீபத்தில் இந்த ஆண்டு 



துவக்கத்தில் நடைபெற்ற மக்கள் 



வாக்கெடுப்பில் வஞ்சகத்தின் மூலம் 



ஒரு நடிகர் கட்சியின் துணையோடு 



நிறைவேற்றவேஇயலாபொய்யான 



வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி 



வீசி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவன் 



தான் ஜெயந்தன் என்பவன். மிகவும் 



தலைக்கனம் மிகுந்த, எவரையும் 



மதித்திடாத குணத்தையும் என்ன 



வயது என்றுகூட பார்க்காமல் 



அவரையும் அவரது குடும்பத்தையும் 



இகழ்ந்து பேசியே தனது அரசியல் 



வாழ்க்கையை நடத்திக்கொண்டு 



வருபவன்தான் ஜெயந்தன் 



என்பவன். பார்த்தால் இவனா இப்படி 



நடந்துகொள்வான் என்ற ஐயப்பாடு 



காண்பவர்கள் மனதில் ஏற்படுவது 



உண்மை.  ஆனால் உள்ளம் 



முழுவதும் கள்ளம். மனம் வேறு 



செயல் வேறு மன்னு தொழில் வேறு 



என்ற சொற்றொடருக்குஇலக்கணம் 



வகுத்தவனே ஜெயந்தன் என்பவன். 



இவன் பதவிக்கு வருவதற்கு முன்பு 



சிறந்த முறையில் சீராகவும் 



செம்மையாகவும் ஆட்சி 



நடத்தியவர்தான் பெரியவர்,வயதில் 



மூத்தவர், அவர் சார்ந்து உள்ள 



மொழியில் நன்கு திறமையோடு 



பேசும் சக்தி படைத்தவர்(அடுத்தவன் 



எழுதிக்கொடுப்பதை அந்தக் 



காகிதத்தை  கையில் வைத்துக் 



கொண்டு பேசும் கலைஅறியாதவர்.) 



வாய் திறந்து பேச ஆரம்பித்தார் 



என்று சொன்னால் அருவியின் 



நீர் வீழ்ச்சி போல அப்படியே 



வார்த்தைகள் வந்து கொட்டும். 



அத்தனையும் தேன் துளிகள்தான். 



அள்ளிப்பருகிக் குடித்திடத்தான் 



நமக்கு எல்லாம் இந்த ஆயுள்என்பது 



போதவே போதாது. அப்படிப்பட்ட 



இந்த மூத்தவரை, முன்னாள் 



முதல்வரை, இந்த இந்நாள் 



முதல்வர் ஜெயந்தன் இருக்கிறாரே 



எப்படி அடைமொழி சொல்லி அது 



சட்டம் இயற்றிடும் மன்றமாக 



இருக்கட்டும் அல்லது அரசு நடத்தும் 



பொதுநிகழ்ச்சிகள் ஆகட்டும், 



அல்லது தனது கட்சியின் 



பொதுக்கூட்ட மேடைகள் ஆகட்டும், 



ஜெயந்தன் ஒருமையில்தான் 



அழைப்பார். எப்படி என்றால் ஏய் !! 



அன்புநிதி!! உன்னைப் பற்றி 



எனக்குத் தெரியாதா? உன் 



குடும்பத்தைப் பற்றி நான் 



அறியாததா? இப்படி எல்லாம் 



பேசியே வளர்ந்தவன்தான் இந்நாள் 



முதல்வர் ஜெயந்தன்.இத்தனைக்கும் 



அன்புநிதிக்கு வயது 9௦ இவருக்கு 



ஜெயந்தனுக்கு வயது 65. 



இத்தனைக்கும் ஜெயந்தனின் 



கட்சியை உருவாக்கிய தலைவர்G.M. 



சந்திர ராமன், ஜெயந்தன், அன்புநிதி 


இவர்கள் அனைவருமே ஒரேதிரைத் 



துறையில் ஒன்றாகவே 



பணியாற்றிவர்கள். இத்தனையும் 



விட ஒரு சிறப்பு அன்புநிதி தயாரித்து 



G.M. சந்திர ராமன், ஜெயந்தன் 



இணைந்து பலபடங்களில் 



நடித்திருந்தும், அந்த GM.சந்திர 



ராமன்தான் இந்த ஜெயந்தனையே 



திரை உலகுக்கு அறிமுகம் 



செயவித்து தன்னுடைய  தனது 



அத்தனை படங்களிலும் 



ஜெயந்தனுக்கு தகுந்த வேடங்களை 



தனக்கு இணையான நிலையில் 



தந்திருந்தாலும்கூட ஜெயந்தனுக்கு 



சந்திர ராமன் மீது  உண்மையான 



விசுவாசமோ, மாறாத பற்றோ, 



அன்போ என்பது ஜெயந்தனுக்கு 



என்றுமே கிடையவே கிடையாது. 



ஆக இந்த நமது நாட்டு நடப்பு 



விளக்கத்தின் வாயிலாக நாம் 



அன்பர்களுக்குத் தெரிவிப்பது 



என்னவென்றால் உங்களில் யாரும் 



ஜெயந்தனைப்போல மூத்தவர், 



வயதில் பெரியவர், அகவை 9௦ 



கடந்து இருந்தாலும் தள்ளு சக்கர 



நாற்காலியில் அமர்ந்துகொண்டு 



அந்நாட்டு மக்களுக்கு இந்தத் 



தள்ளாத வயதிலும் தனது கடமை 



ஆற்றிவரும் இவர் போன்ற வயதில் 



பெரியோரைப் பிழையாமல் 



வாழ்ந்திடுங்கள். இவரை 



எசுவோர்கள் ஏசிவிட்டுப்போகட்டும். 



அதனால் இந்த அன்பு நிதி என்ற 



சூரியனுக்கு எந்த இழப்பும் 



கிடையாது. சூரியனைப்பார்த்து 



ஏதோ ஒன்று கத்துவது 



போலத்தான் பெரியவர் இதை 



எடுத்துக் கொள்வார். நாம் அந்தத் 



தவறை செய்துவிடக் கூடாது என்று 



வேண்டி விரும்பி கேட்டு குறள் 



விளக்கத்தை நான் இத்துடன் 



நிறைவு செய்கிறேன்.  




நன்றி !!  வணக்கம் !!                                   




அன்புடன். மதுரை T.R. பாலு. 

No comments:

Post a Comment