Tuesday, October 1, 2013

அறநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா அறங்களையும் விட தலையாய அறம் எது ?--திருவள்ளுவர் தருகின்ற விளக்கம் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



இதை உரக்கச் சொல்வோம்       



உலகுக்கு !!                                                   



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!   



நம் வெற்றிப் பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம்       



விண்ணுக்கு !!                                               




வீரர்கள் வாழும் திராவிட நாட்டை     



வென்றவர் கிடையாது !!                       



வேலும் வாளும் தாங்கிய மறவர் 



வீழ்ந்ததும் கிடையாது !!                       



சத்தியமே இலட்சியமாய்க் 



கொள்ளடா !!                                               



தலை நிமிர்ந்து, உனை உணர்ந்து 



செல்லடா !!                     



குள்ள நரிக்கூட்டம் வந்து 



குறுக்கிடும் !!                                                 



நல்லவர்க்குத் தொல்லைதந்து           



மடக்கிடும் !!  நீ                                               



எள்ளளவும் பயம் கொண்டு 



மயங்காதிரு !! அவற்றை                       



எமன்உலகுக்கு அனுப்பி வைக்கத் 



தயங்காதிரு !!                                           




உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 



உயிரினும் மேலான அன்புத் தமிழ் 



உடன்பிறப்புகளே !!                                   



உங்கள் இமைகள் திறந்து இந்த 



பூவுலகைக் காணும் இந்த இனிய 



நன்னாளில் உங்கள் வாழ்க்கையில் 



எந்தவித சுமைகளும் இல்லாமல் 



சுகங்கள் மட்டுமே நிறைந்து நீங்கள் 



அனைவரும் வாழ்ந்திடவேண்டும் 



என்று அந்த எல்லாம் வல்ல 



இறைவனை உங்களது சார்பாக 



வணங்கி,வேண்டி வருகின்ற 



உங்கள் இனிய அன்புத் தோழன் 



மதுரை T.R.பாலுவின் உளங்கனிந்த 



காலை வணக்கங்கள் அதனோடு 



இணைந்திட்ட மனம் கனிந்த நல் 



வாழ்த்துக்களும் உரித்தாகுக!!         



தமிழ் இனம் காத்திட வாழ்ந்திடுக !! 



தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 



ஆங்கிலமொழி கலப்பு ஏதும்இன்றி!!



தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 



நடுவில் உரையாடும் பொழுது !!



                

              தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :- கொல்லாமை.                 


குறள் எண் :-  322.                                           



பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்                                                              நூலோர் 


தொகுத்தவற்றுள் எல்லாம் தலை... ...



விளக்கம் :- கிடைத்தவற்றை 



எல்லோருக்கும் சமமாக பகுத்துக் 



கொடுத்து (பிரித்துக் கொடுத்து) 



தாமும் உண்டு பல உயிர்களையும் 



காப்பாற்றுதல் எனும் செயல் 



அறநூல்கள் தொகுத்து நமக்கு 



வழங்கியஅறங்கள்எல்லாவற்றுள்

 


தலையான அறமாகும். இது 



வான்புகழ் வள்ளுவர் நமக்கு 



அளித்த குறளும் அதன் விளக்கமும் 



ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-           



சென்னை மாநகரில் உள்ள ஒரு  



மக்கள் நெருக்கடி மிகுந்த தெருவின் 



இரண்டாவது இடது புறம் திரும்பும் 



ஒரு சின்னஞ்சிறு முட்டு சந்து 



ஒன்றினில், திருமணம் ஆகாத, 



ஆகாயக் கனவுகள் அனைத்தையும் 



தங்கள் நினைவினில் 



ஏற்றிக்கொண்டு வாழ்ந்துவரும் 



வாலிபர்கள் தங்கியிருக்கும் ஒரு 



நீண்ட அறைகளைக் கொண்ட ஒரு 



குடியிருப்பு அது. அதில் அறை எண் 



79ல் வாடகைக்கு குடி இருப்போர்கள் 



மொத்தம் 6 வாலிபர்கள். அதில் 



இரண்டே இரண்டு நபர்கள் 



மட்டும்தான்பணம்சம்பாதிப்பவர்கள், 


அந்த இரண்டு  வாலிபர்கள் 



அவர்களது பெயர் வெங்கட் மற்றும் 



சீனு. இவர்கள் இருவரும் தங்கள் 



சம்பாத்தியத்தில் கிடைக்கும் 



ஊதியத்தில் இருந்து அவர்களது 



ஏனைய நான்கு நண்பர்களுக்கும் 



உணவு மற்றும் தங்குகின்ற செலவு 



இவை அனைத்தும் இந்த இருவரது 



வருமானத்தில்தான் நடைபெற்றுக் 



கொண்டு வருகிறதுது.அந்த 



அளவுக்கு வள்ளுவர் உரைத்த நட்பு 



என்ற இலக்கணத்திற்கு உதாரண 



புருஷர்களாகவே அந்த இரண்டு 



நண்பர்களும் வாழ்ந்துவருகின்றனர்.



இவர்களைப் பார்த்துத்தானோ 



என்னவோ மேலே குறித்த குறளை 



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் 



திருவள்ளுவப் பெருந்தகை குறள் 



எழுதினாரோ என்னவோ நான் 



அறியேன் அன்பர்களே !!       



மிக்க நன்றி !! வணக்கம் !!                   



மீண்டும் நாளை மற்றும் ஒரு 



குறளில் இருந்து நாம்விளக்கத்தைப் 



பார்ப்போமா நேயர்களே !!அதுவரை,          



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் !!



மதுரை TR.பாலு. 



No comments:

Post a Comment