Friday, October 18, 2013

அரசரின்/முதல்வரின் செல்வத்தை அழிக்கும் போர்க்கருவி எது ?-வள்ளுவர் தரும் விளக்கம் !!






            " தினம் ஒரு திருக்குறள் ". 




அதிகாரம்    :-கொடுங்கோன்மை.       



குறள் எண்  :-  555.                                           



அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்       

                                                     ணீரன்றே 


செல்வத்தைத் தேய்க்கும் படை... ...          



விளக்கம் :-                         


(முறை செய்யாதவனுடைய) 



முறைஇல்லாமல் , நேர்மையற்ற, 



திருட்டுத்தனம் நிறைந்த ,  பிறர் 



உழைப்பைத் திருடி,பொய்சொல்லி, 



தான் உழைத்திடாமல்,இலஞ்ச 



லாவண்யம் மூலமாக எவன் 



ஒருவன்/அவன் ஒரு தனிமனிதனோ 



இல்லை நாடாளும் அரசனோ/



இல்லை மாநிலம் ஆளும் 



முதல்வரோ/ அப்படிப்பட்ட அவன் 



ஈட்டும் அந்த வகைசெல்வம் 



உள்ளதே, அப்படி  சேர்த்த 



செல்வத்தை அழிக்கவல்ல படை 



எது என்றால், அவனால் பலர் 



துன்பப்பட்டு, அந்தத்துன்பம் 



பொறுக்கமுடியாமல், 



பாதிக்கப்பட்டோர்கள் அழுத 



கண்ணீர் அன்றோ?(அல்லவா)         





நமது நாட்டு நடப்பு விளக்கம்:-           



(இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் 



படும் சம்பவங்கள், பெயர்கள், 



அடைமொழிகள், நிகழ்வுகள் இவை 



எல்லாம் கட்டுரை ஆசிரியரின் 



"கனவுக்கற்பனையில்" உதித்ததே 



அன்றி வேறு யாரையும் தனிப்பட்ட 



முறையில் குறிப்பிடுவன அல்ல.) 



அந்த உலகம் ஐந்து கண்டங்களாக 



பிரிக்கப்பட்ட உலகம். அதில் ஒரு 



கண்டம். அந்த கண்டத்தில் உள்ள 



ஒரு தீப கற்பநாடு. அதன் தென் 



கடைக்கோடியில்உள்ளமாநிலம்.



உலகத்தின் தொன்மைமிக்க 



மொழிகளுள் ஒரு மொழி அந்த 



மாநிலத்தில் பேசப்படுவது அதன் 



சிறப்பு.அந்த மாநிலத்தின் சிறப்பு 



என்ன என்றால் அந்த மாநில மக்கள் 



யார் எது சொன்னாலும் உடனே 



நம்பி ஏமாறும் குணம் படைத்த 



நல்லவர்கள். அவர்களிடம் உள்ள 



மற்றுமொரு சிறப்பு என்ன என்றால் 



சினிமாவை உண்மை என்று நம்பி 



ஏமாறும் குணம் சற்று 



தாராளமாகவே அவர்களிடம் 



உண்டு. அப்படி அவர்கள் ஒருமூன்று 



ஆங்கிலஎழுத்து நடிகரிடம் 



ஆட்சியை முதலில் ஒரு 13 



வருடம்,பிறகு அவரது அரசியல் 



வாரிசு ஒருவரிடம் 5 வருடம், 



அதன்பின் அவரிடமே மேலும் ஒரு 



5வருடம், அதன்பிறகு தற்போது 2.1/2 



வருடம் என இப்படியாகப்பட்ட 



பிரகஸ்பதிகளை தேர்ந்து எடுத்து 



மக்கள் படும் அவதியும் இன்னலும் 



கண்ணீரும் சொல்ல வார்த்தை 



இல்லை. இந்தக் கால கட்டத்தில் 



ஏறத்தாழ 25.1/2 ஆண்டுகளாக 



இவர்கள் மக்களின் 



வரிப்பணத்தை,இலஞ்ச 



இலாவன்யங்கள் மூலமாக அடித்த 



கொள்ளை கணக்கில் அடங்காது. 



இன்று வழக்குகளில் சிக்கி சீரழிந்து 



வருகின்றனர் இப்படி கொள்ள 



அடித்த அரசியல்வாதிகள். இவர்கள் 



தேடிய செல்வம் இன்று இவர்களால் 



பாதிக்கப்பட்ட, நொந்துபோய் 



நூலான மக்கள், வடிக்கின்ற 



கண்ணீர் ஒன்றே போதும் இதுதான் 



அவர்கள் தேடிய செல்வத்தை 



அழிக்கின்ற படை என்று 



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு 



முன்பே இப்படி ஒரு கொள்ளைக் 



கூட்டம் மக்களை வாட்டிவதைக்கும் 



என்று கணித்து சொன்னாரே 



அய்யன் திருவள்ளுவர். அவர் புகழ் 



வாழ்க !! வளர்க !! நன்றி!!வணக்கம்!!



அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment