Saturday, October 5, 2013

பகைவனைப் பார்த்து பயம் கொள்ளத்தேவை இல்லை !!நம்கூடவே இருந்துகொண்டுநமக்கு குழிபறிக்கும் நபரைப் பார்த்து பயப்படு!! வல்லுவர்தரும் விளக்கம் !!





தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-  உட்பகை 


குறள் எண் :-  882.




வாள்போல் பகைவரை அஞ்சற்க                                                                        அஞ்சுக 

கேள்போல் பகைவர் தொடர்பு... ... ... ...  


விளக்கம் :-  வாளைப்போல 


வெளிப்படையான பகைமை 


உணர்வு கொண்டுள்ள எதிரிகள் 


கூட்டத்தைப் பார்த்து நாம் அஞ்ச, 


பயப்படத்தேவை இல்லை. ஆனால் 


உறவினர்கள் போல,/நண்பர்களைப் 


போல, நம் கூடவே இருந்துகொண்டு 


தனது உள்மனத்தில் பகை உணர்வு 


கொண்டுள்ளவர்களிடம் தொடர்பு 


வைத்திருப்பவர்களிடம்  மட்டுமே 


நாம் அஞ்ச வேண்டும். இது 


திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-        



(நீங்கள் இதன் கீழே வரும் 


கட்டுரையைப் படிக்க உள்ளீர்கள். 


இந்தக் கட்டுரையில் வரும் 


பெயர்கள்,சம்பவங்கள் இவை 


அனைத்தும் ஆசிரியரின் சொந்தக் 


கனவுக் கற்பனையில் உதித்ததே 


தவிர, வேறு எந்தத் தனிப்பட்ட 


நபரையோஅல்லது அமைப்பினைப் 


பற்றியோ  குறிப்பிடுவன அல்ல.) 



அன்று அந்த மாநிலத்தினை ஆளும் 


கட்சியின் மந்திரிசபைக் கூட்டம். 


அடுத்தவாரம் எதிர்வரும் 


ஆண்டுக்கான நிதிநிலை 


அறிக்கையை சட்ட மன்றத்தில் 


சமர்ப்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட 


சூழலில் மாநில முதல்வர், துணை 


முதல்வர்,மற்றும் ஏனைய பிற


அனைத்துத்துறைகளின் அமைச்சர் 


பெருமக்கள் உட்பட இந்திய ஆட்சிப் 


பணி (I.A.S) துறைச் செயலர்கள் 


அனைவரும் கலந்து கொள்ள


உள்ளனர். அனைவரும் 


கூட்டத்திற்கு வந்தாகி விட்டது. 


இவர்கள் அனைவரும் மாநில 


முதல்வர் திரு J. ஜெயந்தன் 


அவர்களின் வருகைக்காக காத்துக் 


கொண்டு இருந்தனர். முதல்வர் 


அவர்களை எல்லோரும் " அப்பா " 


"அப்பா"என்றே அழைத்து மனம் 


மகிழ்ந்திருந்தனர். 


இதுகூட அந்த முதல்வரின் அன்புக் 


கட்டளையே ஆகும்.  முதல்வரும் 


தனது பரிவாரங்களுடன் கருப்புப் 


பூனைப் படையின் துணைகொண்டு 


கூட்டத்தில் பிரசன்னம் ஆனார். 


அனால் அவர் முகம் மிகவும் 


இறுக்கமாக காட்சி அளித்தது. 


காரணம் என்ன என்றால் இவர்கள் 


எந்தெந்த வகையில் புதிய வரிகள்,


வரிச் சலுகைகள், மக்கள் நலத் 


திட்டங்கள் எதிர்வரும் சட்டமன்ற 


கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை 


தாக்கல் செய்கின்ற போது 


அறிவிக்கலாம் என்று ஏற்கனவே 


நடைபெற்ற இதற்கு முந்திய மந்திரி 


சபைக் கூட்டத்தில் முடிவு செய்து 


இரகசியமாக வைத்திருந்தனரோ 


அந்த அனைத்துமுடிவுகளும்நேற்று 


நடந்த ஆளும் கட்சியின் 


எதிரிக்கட்சியின் (எதிர்க்கட்சிஅல்ல) 


பொதுக்கூட்டத்தில் தமிழ்மாநில 


முன்னேற்றக் கழகத்தின் தலைவர் 


மு.அன்புநிதிஅவர்கள்புட்டுப்புட்டு 


வைத்ததைக் கேள்விப்பட்ட 


முதல்வர் மாண்புமிகு J. ஜெயந்தன் 


அவர்களின் முகத்தில் எள்ளும் 


கொள்ளும் வெடித்திட்ட முகத்துடன் 


வருகை தந்ததைப் பார்த்தஅனைத்து 


அமைச்சர்களின் வயிற்றிலும் 


புளியைக் கரைத்ததுபோன்ற பயம் 


கொண்ட முக பாவனையோடு 


அமர்ந்து இருந்தனர்.(இந்த மாதிரி 


கண்டிப்பான முதல்வர் ஒருவர் 


இல்லை என்றால்  இந்த 


அமைச்சர்கள் இருக்கிறார்களே 


எல்லோரு மலை முழுங்கி 


மகாதேவனுங்க.இவங்க குணம் 


தெரிஞ்சுதான் விவரமான முதல்வர் 


எல்லா அமைச்சர்களின் 


கடிவாளத்தைத் தனது கையில் 


வைத்துக் கொண்டு அவர்களின் 


விஷப் பல்லையும் பிடுங்கி 


எடுத்துவிட்டார்.)



முதல்வர்:-அமைச்சர்பெருமக்களே!! 


உயர் நிலை I.A.S. அலுவலர்களே !! 


எனது மந்திரிசபை இரகசியங்கள் 


அனைத்தும் நேற்று நடைபெற்ற 


தமிழ்மாநிலமுன்னேற்ற கழகத்தின் 


பொதுக் கூட்டத்தில் என் அரசியல் 


எதிரியான அன்புநிதியின் கைக்கு 


எப்படிப்போனது என்பது  உடனே 


எனக்குத் தெரிந்தாக வேண்டும். 


இதற்கு யார் யார் உடந்தை என்பதும் 


எனக்கு தெரியும்/நான் அறிவேன். 


அவர்களாகவே குற்றத்தை ஒப்புக் 


கொண்டால் தண்டனை சற்றுக் 


குறைவாக இருக்கும். ஆனால் 


தண்டனை இல்லாமல் தப்ப 


முடியாது. என்ன சொல்கிறீர்கள்? 


என்று ஆவேசத்துடன் மேசையை 


தனது வலது கரம் கொண்டு ஓங்கி 


ஒரு அடி அடித்தார், முன்கோபமே 


மூலதனமாகக் கொண்ட முதல்வர் 


மாண்புமிகு J. ஜெயந்தன் அவர்கள். 


அந்த மந்திரி சபையில் கருப்பு ஆடு 


ஒன்று உள்ளது. அந்த ஆடுதான் 


இங்கே நடைபெறும்முடிவுகளையும் 


அனைத்தையும் அவ்வப்போது 


எதிரிக் கட்சியின் தலைவர் திரு மு. 


அன்புநிதிக்குஅளித்துவந்திருந்தார். 


அவர்பெயர்திருO.தண்ணீர்செல்வம். 


அவர்தான்அவ்வப்போது உளவு 


வேலை பார்த்து வருகிறார். 


இதுபோன்ற நபர்கள் ஈராயிரம் 


ஆண்டுகளுக்கு பின்னால் உருவாகி 


வருவார்கள் என்ற எதிர்காலத்தின் 


தன்மையை முன்கூட்டிகணிக்கும் 


வள்ளுவரின் தெய்வீகத்தன்மையை 


எவ்வாறு பாராட்டாமல் இருக்க 


முடியும்? நீங்களே சொல்லுங்கள் 


நேயர்களே.ஆக வள்ளுவரின் 


குறளைப் படித்து நாம் வாழ்ந்து 


வருவேமேயானால் இது போன்ற 


நமக்கு உள்ளேயிருந்து எதிரிக்கு 


உளவு சொல்லிடும் எத்தர்களின் சதி 


வலையில் நாம் வீழ்ந்து விடாமல் 


இருந்திடலாம். அட...என்ன .. நான் 


சொல்றது ? மீண்டும் நாளை வேறு 


ஒரு குறள் விளக்கத்தில் நாம் 


அனைவரும் சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன்.மதுரைTR. பாலு. 

No comments:

Post a Comment