Wednesday, October 2, 2013

அடுத்தவனைப்பற்றி அவன்இல்லாதபோது புரங்கூறாதே !! வள்ளுவர் தரும் விளக்கம் !!





               தினம் ஒரு திருக்குறள்.                           



அதிகாரம்   :-  புறங்கூறாமை.               



குறள் எண் :-  186.                                           



 பிறன்பழி கூறுவான் தன்பழி                                                                                                                                                                யுள்ளும் 


திறன்தெரிந்து கூறப் படும்... ... ... ... ... 



விளக்கம் :-  மற்றவனைப்பற்றிப் 


புறங்கூறுபவன் (இல்லாததை 


இருப்பதாக பொய் உரைத்துப் 


போட்டுக் கொடுப்பவன்) அவனுள் 


இருக்கும் பலவகையான 


நோகத்தக்கவை எவை என்று 


ஆராய்ந்துபிறரால்பழிக்கப்படுவான்.


இது வள்ளுவர் நமக்குத் தந்த 


குறளும் அதன் விளக்கமும் ஆகும். 


 நமது நாட்டு நடப்பு விளக்கம் :-     


 அந்த இடம் நான்கு நண்பர்கள் 


வேலை பார்த்து ஓய்வு எடுக்க 


மட்டும் பயன் படுத்தும் அறை.   


அவர்கள் பெயர் ராமன்,சோமன், 


பீமன் மற்றும் காமன் இது இவர்கள் 


திருப்பெயர்கள் ஆகும். இந்த நான்கு 


நண்பர்கள்இரண்டுகோஷ்டியாகவே 


செயல் பட்டு வந்தனர். ராமன்,பீமன் 


முதல் கோஷ்டி சோமன், காமன் 


இரண்டாவது கோஷ்டி. இந்த 


இரண்டு கோஷ்டிகளுக்கும் என்ன 


வேலை என்றால் எதிர்கோஷ்டியில் 


உள்ள இருவரும் இல்லாத போது 


இந்த இருவருக்கும்அந்தஇருவரைப் 


பற்றியே புறம் பேசுவது  ஒன்றுதான் 


அன்றாட வேலைகளுள் தலையாய 


ஒன்று. அப்படிப்பட்ட சூழலில் அந்த 


அறையில் என்ன உரையாடல் நடை 


பெறுகிறது என்று பார்ப்போமா ?     


ராமன் :- ஏண்டா பீமா ? நம்மசோமன் 


நடவடிக்கை எனக்கு ஒன்னும் 


அவ்வளவு திருப்திகரமா இல்லடா. 


பீமன் :- டே மச்சி. நான் எத்த பத்தி 


உன்னாண்ட கலாய்க்கலாம்னு 


 நினச்சுனு இருந்தனோ அத்தேயே 


நீயும் சொல்ற பாத்தியா. அதாண்டா 


ஒத்துமைன்றது.இன்னாசொல்ற. 


 ராமன்:- கரீட்டா சொன்னடா 


மாப்ளே. வரவர இந்த காமனும் 


பாரேன் அந்த ராமன் பயலோட 


சேந்துக்கினு  அடிக்கிற லூட்டி 


என்னால தாங்க முடியலடா சாமி. 


பீமன் :-  ஆமாட மச்சி. நம்ம சோமன் 


பய அவன் ஆபீஸ்ல வேல பாக்ர ஒரு 


வட நாட்டுப்பொம்பளையோடஎப்பப் 


பாத்தாலும்மவன் சிரிச்சுக்கினே 


கீரான்டா.நான்இன்னா 


 டவுட்டா நினிக்றேன்னா இவன் 


அவளை செட்-அப் பண்ணிட்டு  கீப் 


மாத்ரி வச்சுருக்கானோன்னு என்கு 


ரெண்டு நாளா ஒரே டவுட்டாவே 


கீதுப்பா.  ஆமா நீ இன்னா நினிக்கிரே 


இத்த பத்தி.. உக்கும்..                                 


 ராமன் :-மாப்ளே எந்த நாய் எந்த 


நாய் பின்னாலே சுத்னா  நமக்கு 


இன்னாடா.பேசாம அவன் மாமாக்கு 


ஒரு மொட்டக் கடுதாசு 


போட்றலாம்னு  நான் நினிக்கிறேன். 


நீ  இன்னாடா சொல்றே அத்த பத்தி. 


பீமன்:- சபாஷ்டா மச்சி. என்கு 


ரொம்ப நல்லாவே தெரியும்டா நீ 


அப்டிதான் ஜகா வாங்குவேன்னு. 


இங்க பாரேன் எப்படி   நான் 


வெள்ளை பேப்பரும் 


கவருமா வந்துக்கீன்னு .                       


 ராமன் :- டே மாப்ளே இன்னாடா   


 ஒரே அதிசயமாக் கீது. நான் இன்னா 


சொய்போறேன்னு நீ பேப்பர் 


வாங்கிக்குனு  வந்த பாரு. டே 


மாப்ளே மெய்யாலுமே நீ கிரேட் 


தாண்டா. சரி சரி கொண்டாடா இப்ப 


இப்ப ..உடனயே எழுதி அவனை 


கலாய்ச்சுருவோம்.  குடும்ப 


உறவைக் கெடுத்ருவோம்டா 


மாப்ளே. ஹ..ஹா..ஹ..ஹா..



பீமன்:- டே மச்சி மெய்யாலுமே நீ 


சொல்றமாறியே சென்ஜ்ருடா..... 


செத்தாண்டா அவன் இன்னிக்கி 


ஹி..ஹி...ஹி...                                               


ராமன் & பீமன் (இருவரும் சேர்ந்து 


எக்காளமிட்டு சிரிக்கின்றனர் )       


அன்பர்களே !! இப்படிப்பட்ட புறம் 


பேசித்திரிபவர்கள் இவர்கள் மட்டும் 


அல்ல.இந்த நாட்டின் ஒவ்வொரு 


சந்துகளிலும் தெருக்களிலும் 


வீதிகளிலும் வலம் வந்து 


கொண்டுதான் இருக்கிறார்கள்.அந்த 


நய வஞ்சகர்கள் மத்தியில் நீங்கள் 


மாட்டிகொண்டு முழிக்காமல் நல்ல 


நண்பர்களாகப் பார்த்து தேர்ந்து 


எடுத்து அவர்களொடு மட்டும் 


ஆழமான நடப்பு கொள்ளுங்கள். 


இதற்காகவே திருவள்ளுவர் 


நட்பாராய்தல் என்றொரு 


அதிகாரமே எழுதி உள்ளார்.


அதுதான் உங்களது 


முன்னேற்றத்துக்குச் சிறந்த வழி 


வகுக்கும்.                                                   



 மீண்டும் நாளை வேறு ஒருகுறளும் 


அதன் விளக்கங்களோடு உங்களை 


சந்திக்கிறேன். அதுவரை உங்கள் 


அனைவரிடமும் இருந்து நன்றி 


பாராட்டி விடை பெறுகிறேன். 



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் .                                                     



 மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment