Sunday, September 29, 2013

அறிவிலிகளின் (அறிவு அற்றவர்களின்)கூட்டத்தினுள் அறிஞர்கள் போகார் !! (போக மாட்டார்கள்) வள்ளுவர் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு!!   



இனம் ஒன்றாக,மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!     


நம் வெற்றிப்பாதையில் நரிகள்   


வந்தால் விருந்து வைப்போம்         


விண்ணுக்கு!!                                                      


தமிழ்இனம்காக்க வாழ்ந்திடுக !!       


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !! 


தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவினில் உரையாடும் பொழுது!!





              தினம் ஒரு திருக்குறள்.               


அதிகாரம்    :-  அவை அறிதல்.               


குறள் எண்  :-   72௦.


அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்                                                      தங்கணந்தர் 


அல்லார்முன் கோட்டி கொளல்... ... ... 



விளக்கம் :-  தம் இனத்தவர் 


அல்லாதவர்களின் கூட்டத்தின்முன் 


ஒரு பொருள் பற்றி பேசுவது என்பது 


தூய்மை இல்லாத முற்றத்தில் 


சிந்திய அமிழ்தம் போன்றது.இது 


வான்புகழ் வள்ளுவர் அளித்த 

குறளும் அதன் விளக்குமும் ஆம்.



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             


பொந்துமணி :- நெஞ்சு 


பொறுக்குதில்லையே !! நெஞ்சு 


பொறுக்குதில்லையே !! இந்த           


நிலைகெட்ட மனிதரை நினைந்து 


விட்டால் நெஞ்சு 


பொறுக்குதில்லையே !! நெஞ்சு 


பொறுக்குதில்லையே !!                       


அந்துமணி :-  யோவ் !! பொந்து !! 


இன்னாயா !! காலங்காத்தாலே 


என்ன தத்துவப் பாட்டெல்லாம் ? 


உம்..ஒன்னும் விளங்கலையே !! 


விவரமாச் சொல்லு தம்பி!!               


பொந்து :-  அண்ணே அந்து. இப்ப 


நான் பாடின பாட்டு, பதிக்கப்பட்ட 


தமிழனுக்காக. விளக்கம் எல்லாம் 


சொல்லிட்டு கடைசியிலேயும் ஒரு 


தத்துவப் பாட்டு ஒன்னு பாடுவேன். 


அந்து:-அந்தப் பாட்டு யாருக்கு தம்பி!!


பொந்து:- அந்தப் பாட்டு, பாதிப்பை, 


உள்ளக் குமுறலை,உணர்ச்சியில் 


தன்மான எண்ணங்களை 


உண்டாக்கிய, சீற்றம் கொண்ட 


சிங்கத்துடன் உலவிடும் உண்மைத் 


தமிழனுக்கு,தமிழ் இனத்துக்கு, தமிழ் 


இனத்தின் ஒட்டு மொத்தத் 


தலைவனை, முத்தமிழ் அறிஞனை, 


முதுபெரும் தமிழக அரசியியலின் 



சுடர் விளக்கினை பகுத்தறிவுப் 


பகலவன் தந்தை பெரியாரின் 


அருமைச் சீடனை, பேரறிஞர் 


அண்ணாவின் முழுமுதல் தம்பியை 


அரசியலில் உண்மை சாக்ரடீசை 


கலைஞர் கருணாநிதி அவர்களை, 


இந்திய சினிமாவின் நூற்றாண்டு 


கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது 


தமிழ் இனமானத் தலைவனை 


அவனமாப்படுத்தின அரக்க குணம் 


கொண்ட ஆளும் ஆட்சியாளர்களின் 


நீசத்தனமான  எண்ணம் கொண்ட 


அந்த சிறுமதிபடைத்தஅவர்களுக்கு, 


புத்தி புகட்டிடும் வண்ணம் எனது 


கடைசி பாடல் அமைந்து இருக்கும் 


என் அந்து அவர்களே !!                           


அந்து:- டேய் !! தம்பி !! பொந்து!! 


உன்னை நினைச்சா எனக்கு 


ரொம்பப் பெருமையாய் இருக்குடா!! 


இனத்துக்கு, இனத்தலைவனுக்கு 


ஒரு இழுக்கு எனகேள்விப்பட்டதும் 


துடிக்குது பாத்தியா உன் உள்ளத்து 


உணர்சிகள். அதற்காக உன்னைய 


என் மனசாரப் பாராட்டாமல் இருக்க 


முடியலைடா தம்பி. நம்ம 


திருவள்ளுவர் என்ன 


சொல்லியிருக்கார் தெரியுமாடா 


தம்பி !!                                                               


பொந்து :- சொல்லுங்க அண்ணே!! 


நீங்க எனக்கு சொன்னாத்தானே 


தெரியும் !!


அந்து :- தம்பி !! 


அறிவில்லாதவர்களின் கூடிடும் 


கூட்டத்துக்குஉண்மைஅறிவாளிகள் 


போகவே மாட்டார்கள்.போகவும் 


கூடாது. ஒருவேளை அப்படி 


போனாங்கன்னு வச்சுக்க. அது 


விலை மதிப்பில்லாத, யாருக்கும் 


அவ்வளவு எளிதில் கிடைத்திடாத 


அமுதத்தை சாக்கடையில் கொண்டு 


போய் கொட்டியதர்குச் சமம்னு 


திருவள்ளுவர் சொல்லி இருக்கார்ட 


தம்பி. அதனாலே நீ ஒன்னும் மனசு 


வருத்தப் பட்டுக்கிடாதேடா!!


தலைவர் கலைஞர் அவர்கள் அந்த 


நீசர்கள் எடுத்த விழாவிற்குப் 


போகாமல் இருந்ததுதான் 


அவருக்குப் பெருமையடா தம்பி!!   


பொந்து:- ரொம்பச் சரியாச் 


சொன்னது அண்ணன் தான். சரிஇப்ப 


நான் அந்த கடைசியில் பாட 


வேண்டிய பாடலை பாடுறேன் 


அண்ணே!!                                                       


அந்து :- பாடுறா, பாடுறா, என்அன்புத் 


தம்பி !!                                                               


பொந்து :- உலகே மாயம் !! வாழ்வே 


மாயம் !! நிலை எது நாம் காணும் 


சுகமே மாயம் !! ( ஒரு நீதிக்கு, 


நேர்மைக்கு, உண்மைக்கு, 


சத்தியத்திற்கு,உண்மை அன்னைத் 


தமிழுக்கு, அப்படி தீங்கு செய்து 


அதனால் அவர்கள், அந்த நீசர்கள் 


காணும் சுகமே மாயம்) காணும் 


சுகமே மாயம் !!                                             


அந்து :-  சூப்பர்டா தம்பி. இனிமே நீ 


வாழ்கையில நிச்சயம் முன்னுக்கு 


வந்துருவடா!! எனக்கு நேரம் ஆச்சு. 


இன்னைக்கு நிறைய வேலை 


கிடக்குடா இன்னைக்கு 


திங்கள்கிழமை அல்லவே.                 


பொந்து :- சரியாச் சொன்ன 


அண்ணே !! நீ போயிட்டு வா. நானும் 


கொஞ்சம் வேலை பார்க்கணும். 


நாளைக்கு பாப்போம் அண்ணே !! 


நன்றி !!வணக்கம் !!                                     


வாழ்வோம் நாம் அனைவரும் 


வளமுடன் !!



அன்பன் மதுரை T.R. பாலு.




No comments:

Post a Comment