Sunday, September 15, 2013

மனிதர்களை எடை போடுவது எப்படி ? வள்ளுவர் தரும் விளக்கம் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு!!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப்பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!



தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :- தெரிந்து தெளிதல்.


குறள் எண் :-  5௦4.


குணம்நாடிக் குற்றமும் நாடி                                                                        அவற்றுள் 

மிகைநாடி மிக்க கொளல்... ... ... ... ... 



விளக்கம் :-  ஒரு மனிதனிடம் 


இருக்கக்கூடிய நல்ல குணங்கள் 


ஆராய்ந்து பிறகு அவரிடம் உள்ள 


குற்றங்கள்,குறைகள், 


இவைகளையும் ஆராய்ந்து 


இந்த இரண்டு நிலைகளுள் மிகுதி 


நிறைந்தவை எவை என்றும் 



ஆராய்ந்து எது மிகுந்திருக்கிறது 



என்பதை தெரிந்து அதன் பிறகு 



அவரைப்பற்றி தெளிந்து 


கொண்டு நாம் அந்த மனிதரை 



அணுக வேண்டும்/தொடர்புகள் 



கொள்ள வேண்டும்.



இது வள்ளுவன் நமக்கு அருளிய 



குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

No comments:

Post a Comment