Monday, September 2, 2013

செல்வத்தை இழந்தவனின் நிலை என்ன இந்தப் பூவுலகில் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு !!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!


தனித் தமிழில் மட்டுமே பேசுக!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ் பேசிடும்சகோதர,சகோதரிகள் 


நடுவினில்உரையாடும் போது !!



தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம் :- மானம்.

குறள் எண் :- 964.


தலையின் இழிந்த மயிரனையர் 

                                                        மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை... ... ... ... ... ...


விளக்கம் :-  மனிதர்கள் தாங்கள் 


உயர்வுக்கு உரிய நிலையில் இருந்து 


(வீடு, வாசல்,தோட்டம், கையில் 


ரொக்கப் பணம்,வங்கியில் 


லட்சக்கணக்கில் பணம் இருப்பு) 


பின்னர் தாழ்ந்திடும் போது ( இவை 


அனைத்தும் விதி வசத்தால் 


இழந்து தவித்திடும் போது) நமது 


தலையில் இருந்து விழுந்து தாழ்வு


நிலைதனை அடைந்த மயிரைப் 


போலவே உலகினரால் மக்கள் 


பேசப்படுவார்,கருதப்படுவார். 


எனவே உனது நிலைதனை தாழ்வு 


பெறாமல் காப்பாற்றிக்

கொள்ள வேண்டியது மனிதனின் 


கடமை.

இது வள்ளுவர் தரும் குறளும் அதன் 

விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

செல்வபுரம். உண்மையிலேயே 


செல்வச்செழிப்பு மிகுந்த பசுமை 


சூழ்ந்த நான்குபுறமும் 


மலைகளால் சூழப்பட்ட ஒரு 


அழகான கிராமம்.அந்த ஊரின் 


தலைவர் தர்மலிங்கம்.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை 


நஞ்சை நிலங்கள்,தென்னந்


தோப்புக்கள்,வாய்க்கால் 

நீர் நிலைகள் தோட்டங்கள் 


எனமிகவும் வசதிகளோடு 


அரண்மனையைப் போன்ற  


மாபெரும் மாளிகை என்னும் 


பங்களா,ஒவ்வொரு ரகத்திலும் 


கார்கள், வேலை ஆட்கள், அழகான 


மனைவி, அன்பான குழந்தைகள் 


என்று வாழ்ந்துவந்தார்.

பெயருக்கு ஏற்றபடி நல்ல தர்ம 


சிந்தனை நிறைந்தவர்,ஏழைகளுக்கு 


உதவிடும்மனம் உடையவர்  அந்த 


சூழலில் அவர் வீதியில்நடந்துவரும் 


போது எல்லோரும் எழுந்து நின்று 


அவரை வணங்கி முதலாளிஎன்றும் 


எஜமான் என்றும் போற்றி வந்தனர். 


அப்போது உள்ள ஒரு உரையாடல் 


பாரீர்:-


சுந்தரம்:- ஏலே சிங்காரம். என்ன 


இருந்தாலும் நம்ம ஐயாதர்மலிங்கம் 


முதலாளி இருக்காகளே, அவக 


நடந்து வர்றதே ஒரு அழகுதண்டா. 


அப்படியே லெட்சுமி தேவியே நேரில் 


வருவது போல ஒரு உணர்வுலே


எனக்கு. நீ என்னலே சொல்லுதே.


சிங்காரம் :- அட ஆமாலே சுந்தரம். 


உம்..நம்மளும் இந்த ஊரிலேதான் 


இருக்கோம்.இருந்தாலும் 


ஐயாவோட புகழ் என்ன 


செல்வாக்கு என்ன அவரோட மதிப்பு 


என்ன.எல்லாம் இப்படி பிறந்து வாழ 


யோகம் செஞ்சிருக்கோணும்.சும்மா 


எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு 


போறார்னு கருப்பு கோட்டை 


மாட்டிக்கிட்டு நிக்கிற தேங்காய்மூடி 


வக்கீலா இல்லாம நம்ம முதலாளி 


பிரஸ்டீஜ் பத்மநாபன் மாதிரி இல்லே 


வாழ்றாரு.


( காலம்மாறுகிறது.கோலம்மாறு


கின்றது விதி விளையாடுகிறது 


தர்ம லிங்கத்தின் நிலையும் ஒரே 


அடியாக  தரை மட்டம் ஆகிறது. வீடு 


வாசல் தோட்டம் கார் எல்லாம் 


சர்வமும் காலி.இப்ப அன்றாடும் 


சாப்பாட்டுக்கே வழிஇல்லாத நிலை. 


ஏதோ ஓரளவு படிச்சிருந்ததாலே 


நாலு கடைகளுக்கு கணக்கு எழுதிக் 


கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் 


வருவாயில் ஊருக்கு கடைசியில் 


உள்ள ஒரு புறம்போக்கு மனையில் 


ஒரு குடிசை வீட்டில் தனது கடைசிக் 


கால வாழ்கையைநடத்திக்கொண்டு 

வாழ்கிறார். இப்ப, அதே தர்மலிங்கம் 

வீதியில் நடந்து செல்கிறார். 


அப்போது  இந்த சமூகம் அவரை 


எப்படி விமர்சனம் செய்கிறது 


பாருங்கள் அன்பர்களே :-


சுந்தரம்:- 


ஏலேசிங்காரம். பாத்தியாலே 


நம்ம பெருசோட நிலையை. அந்தக் 

காலத்திலேயே கையிலே பணம் 


இருக்கும் போது நம்மளை எல்லாம் 


கிழம் திரும்பினாச்சும் பாத்திருக்கும்.


அம்புட்டு பணத் திமிர்லே. அதான் 

ஆண்டவனுக்கு அடுக்கலை ஓட்டத் 

தரிசுட்டான். இப்ப சோத்துக்கே 


சிங்கி அடிக்கார்லே பெருசு.

சிங்காரம் :- யோவ். எனக்கு 


அன்னைக்கே தெரியும்யா. இந்த 


ஆளு இந்த நிலைக்கு 


வருவாருன்னு. எப்படா இவரு கீழே 


விழுவாருன்னு பாத்துகிட்டே இல்ல 


இருந்தேன். ரகத்துக்கு ஒரு கார். 


வீடு  முழுக்க நிக்கும்லே. இப்பப் 


பாரு ரோட்டிலே நடந்து போறதை. 


எல்லாம் பணம் இருந்த திமிரு. 


அதான் ஆண்டவன் சுத்தமா 


அல்லாத்தையும் பிடுங்கிட்டு 


இந்த ஆளை ரோட்லே நடக்க 


வச்சிருக்கான்.பணம் கையிலே 


இருக்கும்போது என்ன 


திமிர்.ஆணவம். அதான் ஆண்டவன் 


வச்சான் ஆப்பு.


(சுந்தரமும் சிங்காரமும் வாய்விட்டு 


சிரித்து மகிழ்கின்றனர்)


அன்பர்களே !! இதுதான் உலகம்.

அதனால்தான் அந்தக் காலத்தில்

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் 

பாடல் எழுதிவைத்துவிட்டு போய்

விட்டார்.


"வாழ்ந்தாலும் ஏசும் !!

தாழ்ந்தாலும் ஏசும் !!

வையகம் இதுதானடா.

வீழ்ந்தாரைக் கண்டால் 

வாய் விட்டு சிரிக்கும்.

வாழ்ந்தாரைக் கண்டால் 

மனசுக்குள் வெறுக்கும் !!

இல்லாதான் கேட்டால் ஏளனம் 

செய்யும் !!

இருப்பவன் கேட்டால் நடிப்பென 

மறுக்கும்.


இதனை நாம் அனைவரும் 


படிப்பதோடு நின்று விடாமல் நமது 


நிலை தாழ்ந்துவிடாமல் கண்ணும் 

கருத்துமாக வாழ்ந்திட வேண்டும் 

என கேட்டு விடை பெறுகிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்,

மதுரை TR. பாலு.

No comments:

Post a Comment