Wednesday, September 11, 2013

ஒரு பெண்ணை சிறையில் வைத்து காப்பதால் மட்டும் அவளை காத்திட முடியுமா? வள்ளுவர் தரும் விளக்கம்





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு !!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப்பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு !!



தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :வாழ்க்கைத்துணைநலம்


குறள் எண் :- 57.


சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும்                                                                  மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை... ... ... ... ...


விளக்கம்:-


பெண்ணைக் காவல்வைத்து


காத்திடும்காப்புமுறைஎன்னபயனை


உண்டாக்கும்? தந்துவிடும்? நிறைவு,


இருப்பது,கிடைத்தது போதும் என்ற


பண்புகள்நிறைந்தமனநிறைவால்


தங்களைத்தாங்களேகாத்திடும்


காப்புமுறையே சிறந்தது. இது வான்


புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்றகுறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-




இந்த விளக்கம் தருகின்ற காலமும்


இடமும்எதுஎன்றால்சேர மன்னர்கள்


ஆண்ட காலத்தில் அந்த பூமியில்


நடைபெற்றதாகச் சொல்லப்படும்


கற்பனை நிறைந்த ஒரு காவியக்


கதை. வளம் கொழிக்கும் தென்னை


மரக்கூட்டங்களும் பாக்கு மரங்கள்


நிறைந்த தோப்புகளும்  மிளகுச்


செடிகளும் எங்கு பார்த்தாலும்


பச்சைப் பசேல் என்று பூமி அன்னை


தமது உடல் முழுவதும் பச்சைப்


பட்டு உடுத்தியது போன்ற ஒரு


அழகு நிறைந்த நாடு தான் சேரநாடு.


எங்கு நோக்கினும் பசுமை அதனால்


நாடு முழுதும் செல்வ வளமை


செழிப்புற்று இருந்தது. மகாகவி


பாரதியார் (இன்று 11-௦9-2௦13 அவர்


மறைந்த நாள்) தமது பாடலில் சேர


நாட்டினைப்பற்றி குறிப்பிடும்


போது என்ன சொல்கிறார் என்றால்:-




சிந்து நதியின் மிசை நிலவினிலே !!


சேரநன்னாட்டிளம் பெண்களுடனே !!


சுந்தரத்தெலுங்கினில்பாட்டிசைத்து!


தோணிகள் ஒட்டிவிளையாடி 


வருவோம் !!



இந்தியாவில்அத்தனை மாநிலங்கள்


இருந்தபோதிலும் மகாகவி பாரதி


பாடியதுசேரநாட்டுஇளம்பெண்களே


மிகவும் அழகிகள் என்று. அத்தகைய


சிறப்பு பெற்ற ஒரு மாபெரும் அழகி


தான் இந்தக் கதையில் வருகின்ற


ராணி கதா பாத்திரம். அவள் பெயர்


லலிதகுமாரி.அந்த நாட்டு


அரசன் ஹேமச்சந்திரன் அவனும்


அழகனே.அவன் பட்டத்து ராணிகள்


பலர். அவர்களுள் லலிதகுமாரி


என்றொரு பெண்.அவளோ பேரழகி.


அப்படி ஒரு  காலகட்டத்தில் அந்த


சேர நாட்டினை நோக்கி அவர்களது


எதிரிநாடு ஒன்று படையெடுத்து


வருவதாக ஒற்றர்கள் மூலமாக


தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றதன்


காரணமாக மன்னர் ஹேமச்சந்திரன்


படையெடுக்க முடிவு எடுத்தார்.


ஆனால் அங்கேதான் ஒரு சிறு


சிக்கல். அது என்னவென்றால்


தனது பட்டத்து ராணிகளுள் அவன்


சமீபத்தில் மணம் செய்துகொண்ட


பேரழகி லலிதகுமாரியை எவ்வாறு


காவல் காப்பது? ஏன் என்றால் போர்


முடிந்துமன்னர் ஹேமச்சந்திரன் தன்


நாட்டிற்கு திரும்புவதற்கு எப்படி


என்றாலும் 4௦ தினங்களுக்கு மேல்


ஆகுமே ? அதுவரை அவளை,அந்தப்


பேரழுகுக்கிளியை ஏனைய மற்ற


ஆண் காட்டுப்பூனைகளிடம் இருந்து


எப்படி காப்பாற்றுவது என்று


சிந்தித்த மன்னன் ஹேமச்சந்திரன்


இறுதியாக ஒரு முடிவு எடுத்தான்.


என்ன என்றால் மன்னரின் உண்மை,


நேர்மை,சத்தியம்,விசுவாசம், இவை


அனைத்தும்நிறைந்தமெய்காப்பாளர்


மெய்யப்பனை அழைத்தார் மன்னர்.


மெய்யப்பா, உனக்கு ஒரு பொறுப்பு


மிகுந்த வேலை ஒன்று தருகிறேன்.


அதில்கண்ணும் கருத்துமாக இருந்து


கடமைஆற்றவேண்டும்.எந்த 


சூழலிலும்கண்ணியம் தவறாமல் 


கடமை உணர்வுமட்டுமே கொண்டு 


கட்டுப்பாட்டோடுநடந்து 


கொள்வாயா ? எனக்கேட்டார்.


உடனே அதற்கு மெய்யப்பன், அரசே 


என்று நான் தாங்கள் இட்ட 


கட்டளையை செவிமடுக்காமல் 


இருந்தேன். தங்கள் உத்தரவு எனது 


பாக்கியம் என்று பதில் உரைத்தான். 


மனம் மகிழ்ந்த அரசர் 


ஹேமச்சந்திரன்,  தோழரே,


எதிரிநாட்டுக்கு  நான் படை எடுத்துச் 


செல்கிறேன்போர்முடிந்து திரும்பிட 


ஏறத்தாழ4௦முதல்5௦தினங்கள்ஆகும் 


என எண்ணுகிறேன். அதுவரை என் 


அபிமான இளைய ராணி 


லலிதகுமாரியை உன் பாதுகாப்பின் 


கீழ் வைத்துவிட்டுச் செல்கிறேன். 


நான் போர் முடிந்து ஊர் திரும்பும் 


வரை லலிதகுமாரியை நீ 


கண்ணின் இமைபோல பாதுகாத்து 


வரவேண்டும்.இதுவேஅரசகட்டளை,


என்று சொன்னார் மன்னர். 


சொல்லிவிட்டு தனது ரதத்தில் ஏறி 


போருக்கு புறப்பட்டுச் சென்று 


விட்டார் அரசர் ஹேமச்சந்திரன்.


போர்..போர்..உக்கிரமமான 


போர்..ஒரு நாள் அல்ல ...இரு நாள் 


அல்ல ...முப்பது நாட்கள் நடந்தது. 


எதிரிகளின் படைகளை உடைத்து 


சுக்குநூறாக ஆக்கிவிட்டு 


வெற்றிக்கனியோடு மன்னர் ஊர் 


திரும்புகிறார். தனது வருகையை 


முன்கூட்டியே அறிவித்திடாமல்  


ரகசியமாக திடீரென்று ராணி 


முன்னால் போய் நின்றால் எப்படி 


இருக்கும் என மனமகிழ்வுடன் வந்த 


அரசர் ராணியை காவல் 


வைத்திருக்கும் அறைப் பக்கம் 


வந்து பார்த்தால் அங்கே அவருக்குப் 

பேரிடி காத்திருந்தது. காவலுக்கு 


நின்றிருக்க  வேண்டிய மெய்யப்பன் 


அங்கே காவல் காத்திட வில்லை. 


பூனைபோல நுழைந்த அரசர்அங்கே 


அந்த அறையினுள் அவர் கண்ட 


காட்சி அவரது உதிரத்தை 



உறைய வைத்திடும் விதமாக 


அமைந்து இருந்தது. ஆம். 


லலிதகுமாரியும் காவலுக்கு இருக்க 


வேண்டிய மெய்யப்பன் அங்கே 


இளவரசி லலிதகுமாரியோடு 


காதலுக்கு கைகொடுத்திடும் 


விதமாக இருவரும் 


ஒருவரைஒருவர் ஆரத்தழுவிக் 


கொண்டு காதலில் மெய்மறந்து 


காம உணர்வுகளின் உச்சக் 


கட்டத்தை நெருங்கிக் கொண்டு 


இருந்தனர்.அரசர் மனம் நொந்தார். 


வேதனையில் கண்கள் குளமாகின. 


வார்த்தை வெளிவர இயலாத 


சூழ்நிலை.காரணம்லலிதகுமாரியை 


காவல்வைத்துஅவளைக் 



காப்பாற்றிவிட முடியும் என்று  தான் 


எண்ணியஎண்ணம்எனும் கோட்டை 


இடிந்து தரைமட்டம் ஆனது கண்டு 


நொந்து நூலாக ஆகிப்போனார் 


அரசர்.


லலிதகுமாரியின் வயிற்றுப் 


பசியைத் தீர்த்திடவும் அவளை 


யாரும் கைப்பற்றிவிடக்கூடாது 


என்பதில் அக்கறை செலுத்திய 


மன்னர் அவளது சொந்த 


ஆசைகள்,தேவைகளுக்கு,உள்ளத்து 


உணர்வுகட்கு,அந்தக்காமப் பசிக்கு 


தீனி போட இயலாதவராக ஆனதன் 


விளைவு காவலன் காதலன் என்று 


மாறிவிட்டான். ஒருவேளை இந்தக் 


காட்சியை அய்யன் திருவள்ளுவர் 


பார்த்துத்தான்மேலேசொன்ன குறள் 


விளக்கத்தில்குறித்துள்ளகுறளை 


எழுதியிருந்தாரோ என்னவோ நான் 


அறியேன் அன்புத் 


தமிழ்நெஞ்சங்களே!!


           

        (கதை இத்துடன் முடிகிறது)




இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள 


வேண்டிய உட்கருத்து பெண்ணுக்கு 


அவளது தேவைகள் அனைத்தையும் 


ஆணாகப்பட்டவன்நிறைவேற்றிடா


வரைஎன்னதான்அவளை சிறை


வைத்துப் பாதுகாத்தாலும் 


அவள்சோரம் போவதைத்  தடுத்திட 


இயலாது என்பதுதான்.





மீண்டும் அடுத்தகுறள் விளக்கத்தில் 


உங்கள் அனைவரையும் நான் 


சந்திக்கிறேன்.




நன்றி !! வணக்கம் !!



அன்புடன், மதுரை T.R. பாலு.



No comments:

Post a Comment