Tuesday, September 3, 2013

இல்வாழ்க்கையில் தோல்வியை ஏற்றுக் கொள்பவனே வெற்றியாளன்- வள்ளுவர் சிந்தனை !!(புதுப்பிக்கப்பட்ட மறுபதிப்பு)



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


எனது அன்புத் தமிழ் உள்ளங்கள் 


அனைவருக்கும் வணக்கம்.இன்று 


நான் தரும் குறளும் அதன் 


விளக்கமும் யாதெனின்:-           


தினம் ஒரு திருக்குறள்             

அதிகாரம் :-ஊடலுவகை.

குறள் எண் :-  1327.

ஊடலில் தோற்றவர் வென்றார்                           அதுமன்னும்கூடலில் காணப் படும்.. .. .. .. .. .. .. ..


விளக்கம் :-  ஊடலில் தோற்றவரே 


வெற்றி பெற்றவர் ஆவார். அந்த 


உண்மை, ஊடல் முடிந்தபின் "கூடி 


மகிழும் நிலையில் "காணப்படும். 


இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-

ஆண் :- ஏங்க !!எங்கேயாவது 


நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு 


இருக்கிறீர்களா? இல்லை 


யாராச்சும் சொல்லித்தான் 


இருக்காங்களா? 


பெண் :-என்னாத்தை?


ஆண் :-அட அதாங்க நம்ம வான் 


புகழ் வள்ளுவர் மேலேசொன்ன 


குறளில் சொன்னதுபோல 


தோத்தவங்களை ஜெயித்தவங்க 


என்று.                               


பெண்:- எனக்கு தெரியாதுங்க !!


ஆண்:- அட ஆமாங்க!கணவன் 


மனைவி இவங்க இருவருக்குள் 


வரும் விவாதங்களில் 


சச்சரவுகளில் (இதற்கு பெயர் 


“ஊடல்”) கணவன் மனைவியுடன் 


மோதவிரும்பாமல் சரி சரிநீ 


சொல்ற மாதிரியே நான் 


நடந்துக்கிறேன் என தோல்வியை 


ஒத்துக்கொள்கிறான் என 


வைத்துகொள்வோம்.அவன் 


ஜெயித்து விடுகிறான். 


பெண்:- அது எப்படிங்க ?


ஆண் :-அட ஆமாங்க  அதன் பிறகு 


இரவில் இருவருக்கும் இடையில் 


ஏற்படும் கூடலில் உறவின் 


பிணைப்பில் கணவன் முதலில் 


இன்பத்தை அடைகிறான் 


அல்லவா? ஆகவே கணவன் தான் 


வெற்றி பெறுகிறான்.பகலில்  


கணவன் ஊடலில் தோல்வியை 


ஒப்புகொண்டாலும் கூட இரவில் 


மனைவியுடன் கூடி மகிழ்ந்திடும் 


பொழுது எப்படி முதலில் இவன் 


இன்பத்தை நுகர்கிறான் 


பார்த்தீர்களா ?


பெண் :சீ..போங்க..எனக்கு..கேக்கவே 


வெக்கமா இருக்குங்க.


ஆண் :- வள்ளுவ பெருந்தகை 


எவ்வளவு நேர்த்தியாகநாசூக்காக  


சொல்லி உள்ளார்என்பதனை  


படித்து ரசியுங்கள் நேயர்களே.


நன்றி !!  வணக்கம் !!.


அன்புடன் மதுரை T.R..பாலு

No comments:

Post a Comment