Thursday, September 19, 2013

எதற்கு நாம் பயப்பட வேண்டும்--வள்ளுவர் தரும் அறிவுரை !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!


இதை உரக்கச் சொல்வோம்


உலகுக்கு !!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு!!



தமிழர் இனம் காக்க வாழ்ந்திடுக !!



தனித்தமிழில் மட்டும் பேசிடுக !!



ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !!



தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 



நடுவில் உரையாடும் பொழுது !!


தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்    :-   அறிவுடைமை.


குறள் எண் :-     428.


அஞ்சுவ தஞ்சாமை பேதமை                                                                            அஞ்சுவது 

அஞ்சல் அறிவார் தொழில்... ... ... ...



விளக்கம்  :-   நாம் நமதுவாழ்வினில் 


பயப்படுவதற்கு   உண்டான 


அஞ்சத்தக்கவற்றை கண்டு 


அஞ்சாமல் இருப்பது/பயப்படாமல் 


இருப்பது என்பது அறியாமையே 


ஆகும். 


 பயப்படுவதற்கு என்று உண்டான/


அஞ்சத்தக்கவற்றைக் கண்டு 


அஞ்சுவதே/பயப்படுவதே 


அறிவுஉடையவரின் தொழிலாகும். 


இது வான் புகழ் வள்ளுவர் நமக்கு 


அளித்த குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-  


பொதுவாக இந்தக் கலிகாலத்தில் 


நாம் நம்மில் அநேகர் 


பயப்படவேண்டிய விஷயங்களுக்கு 


பயப்படாமல் வாழ்ந்து வருதலே 


நமக்கு வாழ்வில் பல வகையான 



துன்பங்கள்வருவதற்குநமக்கு நாமே 


காரணகர்த்தாக்களாக ஆகி 


விடுகிறோம் என்பதே 


உண்மையாகும்.

எப்போது நாம் பயப்படவேண்டிய 


செயல்களுக்கு பயந்து நடந்திட 


முனைகிறோமோ அப்போதே நாம் 


இனிமேல் அச்செயல்களைச் செய்து 


விடாமல் இருந்திட முயல்வதற்கு 


வழிகாட்டும் பாதையாக அதுஅங்கே 


அமைந்துவிடுகிறது. எவன் நாம் 


செய்யும் செயல்களை பார்க்கிறான் 


என எண்ணி அப்படிப்பட்ட பாவச் 


செயல்களை செய்திடத் 


துணிகிறோமோ 


அது ஒன்றே போதுமானது நாம் 


பாவக்குழியில் விழுந்துவிட நாமே 


காரணகர்த்தாக்களாக 


ஆகிவிடுகிறோம் 


என்பதே உண்மை ஆகும்.  நாம் 


செய்யும் ஒவ்வொரு செயலையும் 


மேலே உள்ள எல்லாம் வல்ல 


இறைவன்நம்மைப் பார்த்துக்



கொண்டு இருக்கிறான் என்று 


எண்ணினாலே போதுமானது.


நிச்சயம் நாம் அதுபோன்றதொரு 


செயல்களை செய்திடத் துணிவது 


இல்லை என்ற மன உறுதிப்பாடை 


அது  நமக்கு தந்து விடுகிறது 


அன்பர்களே !! எனவே நாம் 



நமது வாழ்க்கையில் இனிமுதற்


கொண்டாவது அஞ்சுவதற்கு அஞ்சி 


நடந்திட முயற்சிதனை   நாம் 


மேற்கொள்வோமாக என உறுதி 

எடுத்துக்கொள்வோம் அன் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !!


நன்றி  !!  வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.  பாலு.



No comments:

Post a Comment