Monday, September 23, 2013

எது உண்மையான /தலையான/ நிலையான குணம் கொண்ட செல்வம் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!





தினம் ஒரு திருக்குறள் !!

அதிகாரம்    :-   கேள்வி.

குறள் எண்  :-   411.




செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம்                                                         அச்செல்வம் 

செல்வத்து ளெல்லாந் தலை... ... ... ... ... ...



விளக்கம்  :-   செவியால் 


கேட்டறியும் செல்வம், 


 செல்வங்களுள் ஒன்றாகப் 


போற்றப்படும் செல்வமாகும். அந்த 


செல்வம், செல்வங்கள் 


எல்லாவற்றிலும் தலையானதே 


ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் 


நமக்கு அளித்த குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


செல்வபுரம். ஆம் அன்பர்களே. 


இயற்கை வளங்கள் அனைத்தையும் 


ஒட்டு மொத்தக் குத்தகைக்கு 


விட்டுச் சென்றது போல எங்கு 


பார்த்தாலும் அந்த ஊரில் 


இலக்குமி தேவியின் கடைக்கண் 


பார்வை கிடைத்திட்டதாலே 


செல்வப் பூரிப்பும் வளங்களும் 


அருளும் ஒருங்கே சேர்ந்தது 



போல் அந்த ஊர், செல்வம் நிறைந்து 


வளம் இணைந்து காணப்பட்டது. 


அந்த ஊரில் உள்ள அத்தனை 


செல்வந்தர்களிலேயேயும்  மிகவும் 


பெரிய,மிட்டா,மிராசுதாராக 


விளங்குபவர் செல்வந்தர் 


செண்பகராமன். அவ்வளவு 


செல்வம் கணக்கில்லாதபடி அவரது 


வாழ்க்கையில் செழித்துக் 


காணப்பட்டது.


ஆனால்அவ்வளவுசெல்வவளங்கள் 


அவரிடம் இருந்தும் என்ன 


பிரயோஜனம்.அவரது இல்லத்தரசி/


மனைவி செல்லம் ஒரு பிறவிச் 


செவிடு. இவர் ஒன்று கேட்டால் 


மனைவியாகப்பட்ட அவள் செல்லம் 


வேறு ஒரு பதில் சொல்வாள்.


அவர்கள் இருவரின் இடையில் 


நடைபெரும்  உரையாடலை 


நீங்களும் சற்று செவிகுளிரக் 


கேட்டுத்தான் பாருங்களேன்.



செண்பகராமன்:- ஏம்மா !! செல்லம் !!


அடியே செல்லம்.என் ஞானத்திரு 


விளக்கே !! செல்லம்.(சற்றே உரத்த 


குரலில்)


செல்லம் :- என்னங்க.யாரைக் கூப்பி-


டுரீங்கோ.வேலைக்காரன்வேலனை


-த்தானே ?


செண்பக:- அட!! போதுமடி !! நான் 


உன்னாண்ட உசிரைக் கொடுத்துக் 


கத்துனது போதாது அந்தப் 


பயலையுமாகூப்பிட்டுச் சீரழியனும்.


செல்லம்:-  ஓ! சரி !!சரி !!இன்னைக்கு 


சீயக்காய்தேச்சுக்குளிக்கவெந்நீர் 


வைக்கச் சொல்றீயளா !!


செண்பக:- ஆமாடி !! ஆமா !! நல்லா 


கொதிக்கிற வென்னீர எம்மேலே 


ஊத்து. பேசாம மேலோகத்துக்கு 


போயிருவேன். உம்..நான் போன 


ஜென்மத்துல என்ன பாவம் 


செஞ்சனோ தெரியலை.உன்கிட்டே 


மாட்டிகிட்டு இந்தப் படாத பாடு 


பட்டுக்கிட்டு முழிச்சுட்டு இருக்கேன்.


செல்லம் :- (அவரது வாய் அசைவை 


வைத்துஇவளாகஒருமுடிவுஎடுத்துப் 


பேசுவது அவளின் வாடிக்கை) சரி !! 


சரி !! இன்னைக்கு முருங்கைக்காய் 


சாம்பார் வைக்கச் சொல்லுதீயளா?


செண்பக :- ஆமாடி !!(வெறுப்புடன்) 


அந்த சாம்பாரை நல்லா 


கொதிக்கவச்சு என் தலையிலே 


ஊத்துன்னு சொல்லுறேன்.


செல்லம்::- ஓ!!சரி!!சரி!! ஊருக்குப் 


போகப் போறீயளா ? எந்த ஊருக்கு !!


செண்பக:- உம்..மேலோகத்துக்கு. 


உன்கிட்ட கிடந்து நான் சனியன் 


சீரழியிரதுக்கு பேசாம


செத்துப்போயிரலாம்னு இருக்கேன்.


செல்லம்:- செட்டியாருக்கு என்ன 


ஆச்சு?நேத்துக் கூட தெருவில அவர 


பாத்தேனே செத்துப்போயிட்டாரா.


அடப் பாவமே !!


செண்பக:- இல்லடி அவரு சாவலடி. 


நான்தான் தினம்தினம் உன்கிட்ட 


மூச்சுக் கொடுத்து,மூச்சுக் கொடுத்து 


செத்துக்கிட்டு இருக்கேன். உம்!!


உனக்குப் பாக்காத வைத்தியமும் 


இல்ல.போகாத டாக்டரும் இல்ல. 


ஏன்தான் உன்னையப் போயி அந்த 


ஆண்டவன் என்னோடுசேர்த்து 


முடிச்சுப் போட்டு வச்சானோ 


எனக்கு தெரியலை. என் பிராணன் 


போவுது.


செல்லம்:- ஓ !!பீரோவில இருந்து 


என்னங்க எடுத்துத் தரனும். 


சட்டையா இல்ல வேட்டியா 


சொல்லுங்க.கேக்குறேன்ல !!


செண்பக:- இல்லடி.இல்ல.நான் இப்ப 


கட்டியிருக்குற வேட்டியை 


அப்டியேகிழிச்சுக்கிட்டு கூடிய 


சீக்கிரம் பைத்தியக்காரனா 


அலையப் போறேன் போத்தா!! போ !!


பேசாம உள்ளே !! என் உசிரை இப்ப 


நீ எடுக்காத.போ!!


செல்லம் :- சரி!!சரி!! போயிட்டு 


வாரேன்அப்படீன்னுசொல்லுதீயளா?


செண்பக:-  ஆமாடி!! ஆமா!! கூடிய 


சீக்கிரம் இந்த உலகத்தை விட்டே 


போயிரப்போறேன். ஆண்டவன் 


எனக்கு இவ்வளவு செல்வத்தை 


அள்ளி அள்ளித் தந்தாலும் என்ன 


அவன் நல்லாவே பழிவாங்கிட்டான்.


உன்னையை கண்ணாலம் கட்டி 


வச்சு.அத்தனை செல்வம் என்கிட்டே 


இருந்தும் ஒரு மதிப்பும் எனக்கு 


இல்லடி. இப்பத்தான் தெரியுது 


எல்லா செல்வத்துலேயும் பெரிய 


செல்வம் காது தான்.உம்.. அதான்


உன்ட்ட கிடையாதே. அட ஆண்டவா!


அடுத்த ஜென்மம்னு ஒன்னு 


இருந்து அதுவும் மனுஷ ஜென்மமா 


இருந்தா, யப்பா முருகா!! தயவு 


செஞ்சு உன்ட்டகெஞ்சிக்கேக்கிறேன்.


இது போலசெவிட்டுப்பொணத்தை


மட்டும் எனக்குப் பொண்டாட்டியா 


கட்டிவச்சிராதே முருகா. நீ வாழ்க!!


( இந்த உரையாடல் இத்துடன் முடிவு 


பெருகிறது அன்பர்களே !! 


பார்த்தீர்களா !! செவிச் செல்வம் 


என்பது மனிதனின் வாழ்வில் 


எவ்வளவு முக்கியம் என்று.


அதனால்தான் நமது வள்ளுவர் 


இந்த செவிச் செல்வத்தை 


எல்லாவிதமான செல்வங்களுள் 


தலையானது என சொல்லிவிட்டுச் 


சென்று இருக்கிறார்.)


கொசுறு :- இதுல பாருங்க மனைவி 


செவிடா இருக்கிறதுல நமக்கு ஒரு 


சௌரியமும் கூட இருக்குதுங்க.அது 


என்னான்னு கேட்டீங்கன்னா நாம 


சிரிச்சுக்கிட்டே அவள  அவ 


முன்னாடியே ,அட மூதேவி !!


சனியனே!! ஏண்டி என் பிராணன


வாங்குற!! அப்படி இப்படீன்னு 


சகட்டு மேனிக்கு அவள வச்சுகிட்டே 


அவ எதிரிலேயே நம்ம மனசு குளிர 


திட்டலாம்லே.அந்த சுகம் வேற 


யாருக்கு கிடைக்கும். செவிட்டுப் 


பொம்பளைய கட்டிகிட்டவனுக்கு 


தானே. அட என்ன நான் சொல்றது?



நன்றி!! வணக்கம் !!


மீண்டும் அடுத்த குறள் 


விளக்கத்தில் உங்கள் 


அனைவரையும் சந்திப்போம்.


அன்புடன் மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment