Friday, September 27, 2013

சொல்லிடலாம் எளிதாக எல்லோராலும் !! ஆனா சொன்னதுமாதிரி செய்ய முடியிறது ரொம்ப கஷ்டம் !!--வள்ளுவரின் கண்ணோட்டத்தில் !!




                          தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  வினைத்திட்பம்.



குறள் எண் :-  664.



சொல்லுதல் யார்க்கும் எளிய                                                                    அரியவாம் 


சொல்லிய வண்ணம் செயல்... ... ... ...



விளக்கம் :- இந்தச் செயலை 


இவ்வாறு செய்து முடிக்கலாம்என்று 


சொல்லுவது எல்லோருக்கும் 


எளியது. ஆனால் அவ்வாறு 


சொல்லியபடி செய்து முடிப்பது 


என்பது மிகவும் அரியனவாம்.             



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-   


அது 2௦11ம் ஆண்டு. மே மாதம். 


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 


களம் அதிகமான சூடு பிடித்த நேரம் 


அது. தமிழகத்தில் அதுவரை 


எப்போதும் இல்லாத அளவுக்கு 


மின்தடை எல்லா இடங்களிலும் 


ஏறத்தாழ 2 மணி நேரம் முதல் 3 


மணி நேரம் வரை மின்சாரம் 


இல்லாமல் மக்கள் கடந்தமுறை 


ஆட்சியில் இருந்த திராவிட 


முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது 


தாங்கொனாத வெறுப்பின் 


விளிம்பில் நின்று கொண்டிருந்த 


நேரம் அது. இதுதான் தக்க சமயம் 


என்று கணக்குப் போட்டு தேர்தல் 


களத்தில் குதித்தது தி.மு.க. வின் 


பரம்பரை எதிர்க்கட்சியான 


அ.இ.அ.தி.மு.க. தனது தேர்தல் 


கொள்கை அறிவிப்பினில் முதலில் 


இடம் பெறச் செய்தஅறிவிப்பு  என்ன 


என்றால் " நாங்கள் ஆட்சிக்கு 


வந்தால், வந்த மூன்று (3) 


மாதங்களுக்குள்மாநிலத்திற்குத்


தடை  ஏதும் இல்லாத மின்சாரம் 


வழங்குவோம். அதுமட்டும் இல்லை 


மக்களே !! மாநிலத்தை மின்மிகு 


மாநிலமாக மாற்றி அண்டை 


மாநிலங்களுக்கும் உபரி மின்சாரம் 


வழங்குவோம். இது அ.இ.அ.தி.மு.க. 


வின் முதல் தேர்தல் வாக்குறுதி. 


ஆனால் நடந்தது என்ன ? அதுவரை3 


மணி நேர மின்சார வெட்டு என்பது 


பிள்ளை,குட்டி,பேரன்,பேத்தி என 


அதிகமாக ஆக்கி 14 மணி நேரம் 


முதல் சில இடங்களில் 16மணி 


நேரம் வரையில் கூட மின்தடையில் 


சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டு 


மக்கள் மிக மிக சிரமத்தினை 


அனுபவிக்க வேண்டியதாயிற்று. 


அ.இ.அ.தி.மு.க. வினரால் மின்தடை 


இல்லாத மாநிலமாக ஆக்குவோம் 


என சொல்லிடுவது என்பது மிக 


எளிதான செயலாக ஆனது. ஆனால் 


சொல்லியபடி செய்து முடித்திட 


முடியாமல் பாவம் ஆளும்கட்சி 


இப்ப்போது திரு திரு வென 


முழித்துக் கொண்டு இருக்கிறது. 


இதுதான் இன்றைய நிலைமை.நான் 


கூட சில நேரம் வள்ளுவர் எல்லாப் 


புலவர்களைப்போலத்தானே 


செய்யுள் இயற்றி அதனை இந்த 


உலகிற்கு அர்ப்பணித்து உள்ளார். 


இவருக்கு மட்டும் என்ன தெய்வப் 


புலவர் என்ற சிறப்பு விகுதிப் பட்டம் 


என்று எண்ணியது உண்டு. ஆனால் 


நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி 


தமிழகத்திற்கு ஒரு நிலைமை இது 


போலவரும் அப்போது தேர்தல் 


நடக்கும் நேரம் வரும். ஆளும் 


கட்சியாக துடிக்கும் கட்சி இதுபோல 


நிறைவேற்றிட முடியாத 


வாக்குறுதிகளை அள்ளித் 


தெளிக்கும். ஆனால் சொல்லியபடி 


செயலை செய்து முடிக்காத நிலை 


வந்து சேரும் என்று இரண்டாயிரம் 


ஆண்டுகட்கு முன்பாகவே ஒரு 


தீர்க்கதரசினமான ஒரு கருத்தை 


வள்ளுவப் பெருந்தகை அப்போதே 


வெளியிட்டதன் காரணமாக நான் 


இப்போது வெட்கித் தலை 


குனிகிறேன் ஏன் அவ்வாறு நான் 


திருவள்ளுவர்மேல் ஒரு தவறான 


அபிப்பிராயம் கொண்டு இருந்தேன் 


என்று. 


திருவள்ளுவர் என்னை 


மன்னிப்பாராக !!                                           


நன்றி !! வணக்கம் !!


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment