Tuesday, September 24, 2013

ஆண்மை என்பது சராசரி மனிதனிடம் !! ஆனால் பேராண்மை ? அது யாரிடம் உள்ளது? வள்ளுவர் தரும் விளக்கம்.






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு!!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக,


புதுவேல்எடுப்போம்விடிவுக்கு!!


நம்வெற்றிப்பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு!!




வீரர்கள்வாழும் திராவிட நாட்டை


வென்றவர் கிடையாது !!


வேலும் வாளும் தாங்கிய மறவர்


வீழ்ந்ததும் கிடையாது !!





குள்ளநரிக்கூட்டம் வந்து 


குறுக்கிடும்!!


நல்லவர்க்குத் தொல்லைதந்து 


மடக்கிடும் !!--நீ


எள்ளளவும் பயம்கொண்டு 


மயங்காதிரு !!--அவற்றை 


எமனுலகுக்கு அனுப்பிவைக்கத் 


தயங்காதிரு !!






தமிழ்இனம்காக்க வாழ்ந்திடுங்கள்!!



தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!



ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!



தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள்


நடுவினில் உரையாடும் பொழுது!!





தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  பிறனில் விழையாமை.



குறள் எண் :-   148.



பிறன்மனை நோக்காத பேராண்மை                                                சான்றோர்க்கு


அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு... ... ...



விளக்கம் :-




அடுத்தவருடைய மனைவியை


விரும்பி நோக்காத (பார்க்காத)


குணமே பேராண்மை எனப்படுவது


அது சான்றோர்க்கு அறம் மட்டும்


அன்று.அது ஒன்றே நிறைந்த


ஒழுக்கமும் ஆகும். இது வள்ளுவர்


நமக்கு அளித்த குறளும் அதன்


விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-




பொதுவாகவே ஆண்டவன்


ஸ்ருஷ்டித்த, உருவாக்கிய ,


படைப்புகளுள் ஒன்றான


மனிதப் படைப்பினில் மட்டுமே


இந்த அடிப்படை குணம் அது


ஆண்களுக்கு மட்டுமே உண்டு.


அது என்னவென்றால், தனது


மனைவி எவ்வளவு பேரழகியாக


இருந்திட்ட போதிலும்,அமைந்துள்ள


போதிலும், எல்லா ஆண்மகன்களும்


அடுத்தவனுடைய மனைவியை


பார்ப்பது,பார்த்து இரசிப்பது,


இவளை,இந்த அழகியை


மனைவியாக எவன் ஒருவன்


அடைந்திட்டானோ என


 எண்ணித்தனது  உள்ளத்தில்


காம ரசம் சுரக்க நோக்குதல்


என்பது இந்தக் கலியுகத்தில்


தவிர்க்க முடியாத ஒன்றாகவே


ஆகிவிட்டது. ஆனால் ஒரு தத்துவப்


பேராசிரியர் என்ன சொல்லி



இருக்கிறார் என்று கேட்டால்


அழகினை ரசி, ஆனால் அடைந்திட


நினையாதே என.ஆனால் சொல்வது


என்பது வெகு சுலபம். அதனை நமது


நடைமுறை வாழ்க்கையில் அமல்


படுத்துவது என்பது மிக மிகக்


கடுமையானது அது ரொம்பக்


கொடுமையானது.  ஆகவே நான்


இங்கேவாழ்ந்திடும் ஆண்களுக்கு


விடுக்கும் அன்பு வேண்டுகோள் அது


என்னவென்றால் நீவிர் பேராண்மை


உடையவராக வேண்டும் என்றால்


அது நிச்சயமாக எவன் ஒருவன்


மாற்றான் மனைவியை நோக்காமல்


பார்க்காமல் இருக்கின்றானோ


அவனிடம் மட்டிலுமே அந்த குணம்


(பேராண்மைக்குணம்) உள்ளது


என்று வள்ளுவப் பெருந்தகை


சொல்லிச் சென்று உள்ளதை நாம்


அறிவினில் கொண்டு வாழ்ந்திட


வேண்டும் என்று வேண்டி விரும்பி


கேட்டுக்கொண்டு உங்களிடம்


இருந்து விடை பெறுகிறேன்.



மீண்டும் சந்திப்போம். அதன் பின்


சிந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன்,


மதுரை TR.பாலு.

No comments:

Post a Comment