Sunday, September 1, 2013

யாரை எங்கே வைக்க வேண்டும் !!--வள்ளுவரின் தீர்ப்பு !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம் 

உலகுக்கு!!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!



தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  தெரிந்து வினையாடல்.


குறள் எண்:-  517.



இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்... ... ... ... ... ... ... ... ... ...    


விளக்கம் :-  இந்தச் செயலை/இந்தத் 


தொழிலை இக்கருவியால் 


இன்னவன் முடிப்பான் என்று 


ஆராய்ந்த பிறகு அந்தச் செயலை/ 


அந்தத் தொழிலை அவனிடம் 


ஒப்படைக்க வேண்டும். இது 


வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன்விளக்கமும் 


ஆகும்.                                                              



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-       


(இந்தக் கட்டுரையில் இடம்பெறும் 


கதாபாத்திரங்கள்,சம்பவங்கள், 


அதில் சொல்லப்பட்டுள்ள 


விஷயங்கள் முழுக்க முழுக்க 


கட்டுரை ஆசிரியரின் சொந்தக் 


கற்பனையில் உருவானதே அன்றி 


வேறு யாரையும்/தனிப்பட்ட 


எவரையும் குறிப்பிடுவன அல்ல.)   



அந்த நாடு ஐந்து கண்டங்கள் என 


குறிப்பிடுவனவைகளில் மிகவும் 


குறைவான எழுத்துக்கள் உள்ள 


கண்டத்தில் உள்ள ஒரு தீப கர்ப்ப 


நாடு  ஆகும். அதன் தென்கடைக் 


கோடியில் உள்ள  தொன்மை மிக்க 


மொழி பேசப்படும் மாநிலம் ஆகும். 


அம்மாநில மக்கள் உலகத்தின் 


ஒவ்வொருமூலை  முடுக்குகளிலும் 


வாழ்ந்து வருகின்றனர். அந்த 


இனத்திற்கு என்று தனியே  ஒரு 


குணம் உண்டு. யாரையும் எளிதில் 


நம்பி ஏமாந்துவிடும்/இலவச 


அறிவிப்புகளை தேர்தலில்கேட்டால் 


அதற்கு மயங்கி விலை மதிப்பு மிக்க 


மக்களது ஒரே வலிமைமிக்க வாக்கு 


என்னும்ஆயுதத்தினைபலிகொடுத்தி


டக்கூட தயங்கிடாத குணம்தான் 


அது. சமீபத்தில் நடந்த தேர்தலில் 


அதுபோன்ற இலவசஅறிவிப்புகளில் 


தங்களது மதியை இழந்து 


ஆளத்தெரியாதோர்களிடம் 


ஆட்சியை ஒப்படைத்த 


 காரணத்தினால் இன்று அவர்கள் 


படும் அல்லலும் வேதனைகளும் 


வார்த்தையால் சொல்லிடஇயலாது. 


நன்கு ஆளத்தெரிந்த மூத்தவர் 


ஒருவரின் தலைமையை தவிர்த்த 


அந்த மாநில மக்களைப் பார்த்தால் 


உண்மையிலேயே மிகவும் 


பரிதாபமாகத்தான் இருக்கிறது. 


மானுட லட்சணங்களில் மொத்தம் 


உள்ளது 32. இவைகளில் மிகவும் 


முக்கியமானது 31 மற்றும் 32ஆவது 


லட்சணங்களே.அது என்னவெனில் 


31 தனக்கு என்று எதுவும் தெரியாது. 


32 என்ன என்று கேட்டால் 


தெரிந்தவர்கள் என்னசொன்னாலும் 


அதை கேட்டு நடக்கவும் தெரியாது. 


அப்படிப்பட்ட நபர்களிடம் இன்று 


ஆட்சியை அந்த மாநில மக்கள் 


ஒப்படைத்துவிட்ட காரணத்தினால் 


மாநிலத்தின் வளர்ச்சி முழுவதும் 


பாதிக்கப் பட்டு உள்ளது.   இம் ....


என்றால் சிறை வாசம் ஏன் என்றால் 


வனவாசம் கேள்விகள் கேட்டாலோ 


பொய் வழக்குகள்/நீதி மன்ற 


அவமதிப்பு வழக்குகள் என 


ஆள்வதைத் தவிர அந்த மாநில 


நிர்வாகம் வேறு ஏதோ ஒரு 


திசையை நோக்கி சென்று கொண்டு 


இருக்கிறது.  வள்ளுவர் மேலே 


சொன்ன குறளில் குறிப்பிட்டபடி 


யாரால் நாடு வளம்பெறும் யார் 


எதை சரியாகச் செய்து 


முடிப்பார்களோ அவர்களிடம் 


ஆட்சியை ஒப்படைக்காததன் 


விளைவு ? எல்லாமே பூஜ்யம் தான். 


கடவுளால் கூட அந்த மாநிலத்தைக் 


காப்பாற்ற முடியாது. எல்லாம் 


விதியின் விளைவு. கலிகாலத்தின் 


எதிரொலி அங்கே மிக நன்றாகவே 


கேட்டுக்கொண்டு இருக்கிறது. 


இதனை அறிந்த வள்ளுவர் எழுதிய 


மேலே சொன்ன குறளைப் 


படிக்கும்போது இப்படி 


இருக்கவேண்டும் என எழுதியதற்கு 


நேர் மாறாக அந்த மாநிலத்தில் 


இப்போது காரியங்கள் நடந்து 


கொண்டு உள்ளது. 


வேதனையாகத்தான் இருக்கிறது. 


தலை எழுத்தை யார்தான் மாற்றிட 


முடியும் ? நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment