Sunday, November 3, 2013

இனிமையாகப் பேசுங்கள் !! பழுத்த, சுவையுள்ள பழம் இருக்கும்போது பழுத்திடாத காயை நீ ஏன் தேடுகிறாய்? திருவள்ளுவர் தந்த அறிவுக்கண்ணைத் திறந்த குறள் அமுதம் !!உங்கள் அனைவரின் கனிவான கவனத்திற்கு !! நன்றி !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



இதை உரக்கச் சொல்வோம் 



உலகுக்கு !!                                                     



இனம் ஒன்றாக, மொழி 



வென்றாக,புது வேல் எடுப்போம் 



விடிவுக்கு !!     நம் வெற்றிப் 



பாதையில் நரிகள் வந்தால் விருந்து 



வைப்போம் விண்ணுக்கு !!                       



வீரர்கள் வாழும் திராவிட நாட்டை 



வென்றவர் கிடையாது !!                     



வேலும், வாளும், தாங்கிய மறவர் 



வீழ்ந்ததும் கிடையாது !!                         



குள்ள நரிக்கூட்டம் வந்து 



குறுக்கிடும் !!                                                 



நல்லவர்க்குத் தொல்லைதந்து 



மடக்கிடும் !! நீ                                             



எள்ளளவும் பயம்கொண்டு 



மயங்காதிரு !! அவற்றை 



எமன்உலகுக்கு அனுப்பிவைக்கத் 



தயங்காதிரு !!                                           



சத்தியமே இலட்சியமாய்க் 



கொள்ளடா !!                                                 



தலை நிமிர்ந்து உனைஉணர்ந்து 



கொள்ளடா !!                                               



எத்தனையோ மேடு பள்ளம் 



வழியிலே !!                                                     



உன்னை இடற வைத்துத் தள்ளப் 



பார்க்கும் குழியிலே !!                             



அத்தனையும் தாண்டி, காலை, முன் 



வையடா !! நீ அஞ்சாமல் 



கடமைகளைச் செய்வாயடா !!         



சத்தியமே இலட்சியமாய்க் 



கொள்ளடா!! தலை நிமிர்ந்து உனை 



உணர்ந்து கொள்ளடா !!




தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்   :- இனியவை கூறல்.         



குறள் எண்  :- 1௦௦.                                         




இனிய உளவாக இன்னாத கூறல்   


கனியிருப்பக் காய்கவர்ந் தற்று... ... ... 




விளக்கம் :-  இனிய சொற்கள் 



இருக்கும்போது அவற்றை விட்டு 



விட்டுக் கடுமையான சொற்களைக் 



கூறுதல், என்பது, கனிகள் 



இருக்கும்போதுகாய்களைப் 



பறித்துத் தின்பதைப் போன்றது. இது 



திருவள்ளுவர் நமக்கு அருளிய 



குறளும் அதன் விளக்கமும் ஆகும். 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-     



(இந்தக் கட்டுரையில் வரும் 



பெயர்கள்,நிகழ்வுகள்,சம்பவங்கள், 



இவை யாவும் கட்டுரை ஆசிரியரின் 



கனவுக் கற்பனையில் உதித்ததே 



தவிர, வேறு தனிப்பட்ட எவரையும் 



குறிப்பிடுவன அல்ல) 



அந்த ஊரின் பெயர் வருசநாடு.அதில் 



உயர்நிலைப்பள்ளி ஒன்றினில் 



தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி 



வருபவர்தான் இளமாறன்.                 



(இந்தக் கற்பனைக்கதையில் கதா 



நாயகனாக வருபவனும் நானே !! 



எனது வடபுல மொழி  சார்ந்த 



"பால கிருஷ்ணன் ' என்ற பெயரின் 






தூய்மையான, நேர்த்தியான, 



உண்மையான மொழி 



பெயர்க்கப்பட்ட பதிவுதான் இந்த " 



இளமாறன் " என்பது எனது அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !!)



பள்ளிக்கூடத்தினில் தூய தமிழில் 



பேசிடும் அவர் ஒரு சரியான 



முன்கோபி. அதைவிட அவர் 



பள்ளிக்கூடத்தில் எந்த அளவுக்கு 



கண்ணியமான வார்த்தைகளை 



பயன்படுத்தினாரோ அதற்கு நேர் 



மாறாக வீட்டினில் கடுமையான 



வார்த்தைகளையே பேசிடும் 



வழக்கம் உள்ளவர் இவர் ஒருவரே. 



அவர் வீட்டினில் எப்படிப் பேசுகிறார் 



என்பதனை நேயர்களின் 



கண்களுக்கு விருந்தாக, கனிவான 



கவனத்திற்கு இங்கே தருகிறேன்.   



படித்து இன்புறுங்கள் என் அன்புத் 



தமிழ்  உடன் பிறப்புகளே !!                                                 



வீட்டிற்குள் நுழைந்திடும்இளமாறன் 



தனது மனைவி புனிதாவைக் 


கூப்பிடுகிறார்.( எனது இந்தப்பூவுலக 



வாழ்க்கையில்எனக்காகவேஎங்கோ 



பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் 



சதை உள்ள மெழுகுவர்த்தி, என் 



உடலில் பாதி உயிரில் மீதி என 



இடம்பிடித்து வாழ்ந்து வரும் 



அன்பின் பிறப்பிடம், அறநெறியின் 



இருப்பிடம், பக்தியின் வடிவம், 



பாசத்தின் உண்மையான உருவம், 



எனது வாழ்க்கைத் துணைவியின் 



பெயரையே இங்கே நான் "புனிதா" 



என்று வைத்துள்ளேன்)



இளமாறன் :-  ஏய் !! அடியே மூதேவி!!



செவிட்டு முண்டமே !! எங்கடி 



போயித் தொலைஞ்சே !! இழவு !! 



உன்னைக் கூப்பிட்டு கூப்பிட்டு என் 



உசுரே போயிரும் போல இருக்கு . 



தடிக்கழுதை !!   



சீக்கிரம்வந்து தொலைடி கிறுக்குச் 



செருக்கி. திமிர் பிடிச்ச நாயே !!



பன்னி!!    



மனைவி புனிதா:- ஏங்க நீங்க ஒரு 



கண்ணியமான,  அதிலும் 



இனிமையான மொழியாம், தமிழ் 



மொழி, அதனை எதிர்கால இளம் 



தலைமுறையினருக்கு முறையாகச் 



சொல்லித்தரும் தமிழ் வாத்தியார். 



நீங்களே இப்படி தப்பா பேசலாமா?                                       



இளமாறன் :-  ஏய் !! இந்த பாருடி!! 



நான் பள்ளிக்கூடத்துலே, நான் 



வேலை செய்ற இடத்துலே எங்கயும்



தப்பாவோ  இல்ல தவறாவோ பேச 



மாட்டேண்டி. நீ என் பொண்டாட்டி. 



உன்ட்ட பேசாம வேற, நான் யார் 



கிட்டடி நான் பேசுவேன்.  சொல்லு.                           



புனிதா :-  ஏங்க, நீங்க, எங்க 



பேசினாலும் யார்கிட்ட பேசினாலும் 



தப்பு, தப்புத்தாங்க. தவறு என்பது 



தவறிச் செய்வது. தப்பு என்பது 



தெரிந்து செய்வது. தவறு செய்தவன் 



திருந்தப் பார்க்கணும்.தப்பு 



செய்தவன் வருந்தியாகணும். 




நல்ல நல்லபிள்ளைகளைநம்பிஇந்த 



நாடே இருக்குது தம்பி !! 



சின்னஞ்சிறு கைகளை நம்பி !!



ஒரு சரித்திரம் இருக்குது தம்பி  !!         



அப்படிங்கிற கவிஞரோட பாட்டை 



நீங்க கேட்டதே இல்லையா? 



உங்களை திருத்தவே என்னாலே  



முடியாதா.  திருவள்ளுவர் 



எழுதிய திருக்குறளை நீங்க உங்க 



மாணவர்களுக்குச் சொல்லி 



குடுக்கிறீங்களே !! அப்படி சொல்லிக் 



கொடுத்தால் மட்டும் போதாதுங்க !!



நீங்களும் உங்க வாழ்க்கையில 



அதுபோல நடந்து காட்டனுங்க !!



அதுல அந்தத்  திருக்குறளில் உள்ள 



அதிகாரங்களுள் 



"இனியவை கூறல்" அப்படீங்கிற   



அதிகாரத்துலே  என்ன சொல்லி 



இருக்காரு. பழம் இருக்கிறப்போ 



யாராச்சும் காயைத் திம்பாங்களா? 



அப்படீன்னு அய்யன் வள்ளுவர் 



சொல்லி இருக்காறா? இல்லையா? 



நீங்களே நினைச்சுப் பாருங்க மாமு !!



இளமாறன் :-  புனிதா !! நீ 



உண்மையிலேயே என் அறிவுக் 



கண்ணைத் தொறந்துட்டம்மா !! 



அந்தத் திருவள்ளுவர் மேல 



சத்தியமாச் சொல்றேம்மா !!   



இனிமே நான் என் வாழ்நாள் 



முழுவதும் நான் எந்தவிதமான 



கடுமையான/தீய சொற்களைப்பயன் 



படுத்தவே  மாட்டேம்மா !! இது 



அன்னைத் தமிழ்  மீது சத்தியம் !!         



(இத்துடன் நாட்டு நடப்பு விளக்கம் 



நிறைவு பெறுகின்றது )  



நன்றி !!  வணக்கம் !!                                 



அன்புடன். மதுரை TR. பாலு.

No comments:

Post a Comment