Wednesday, November 20, 2013

செல்வத்தின் சிறப்பு !! திருவள்ளுவர் தரும் விளக்கம் காணீர் !!







உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



             தினம் ஒரு திருக்குறள் !                 



அதிகாரம்   :-  பொருள் செயல்வகை. 



குறள் எண் :-   751.                                           



பொருளல் லவரைப் பொருளாகச்       

                                                             செய்யும் 


பொருளல்லது இல்லை பொருள்... ... 



வள்ளுவர் தரும் விளக்கம்:-



ஒரு பொருளாக மதிக்கத் தகாத 



எவரையும்,மதிப்புடைய ஒருவராகச் 



செய்யத்தக்கது,பொருள், அல்லாமல் 



சிறப்புடைய பொருள் வேறு எதுவும் 



இல்லை.                                                           




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-   



இராமநாதபுரம் மாவட்டம். அதில் 



உள்ள ஒரு சிற்றூர்தான் பாகனேரி. 



செல்வச் செழிப்புமிக்க 



செட்டியார்கள் அதிக 



எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் 



ஊர் அதுவே ஆகும். அந்த ஊரின் 



சமூகத் தலைவர்தான் திருவாளர். 



K.கருப்பஞ் செட்டியார். பெரும் 



பணக்காரர் அவர். அந்நாளிலேயே 



பல கோடிகளுக்கு மேல் சொத்து 



மதிப்பு உடையவர் இவர்.இவர்வீட்டு 



இருப்புபெட்டியில் ரொக்கம் மட்டும் 



எப்போதும் 5 கோடிகளுக்கு மேல் 



வைத்திருப்பவர். இவருடைய 



தொழில் லேவாதேவி (FINANCE) 



ஆகும்.  பண விஷயத்தில் மிகவும் 



கறாரான பேர்வழி இவர். ஒவ்வொரு 



பைசாவுக்கும் மிகுந்த மதிப்பு தந்து 



தனது வாழ்நாளைக் கழிப்பவரும் 



இவரே. இப்படிப்பட்ட நிலையில் 



இவர் ஒன்றும் படித்த பட்டதாரி 



அல்ல. பள்ளிக்கூடத்தின் பக்கம் 



மழைக்குக்கூட ஒதுங்கிடாதவர் 



இவரே.  நாலு வார்த்தை எந்தவித 



சிக்கலும் இல்லாமல் பேசக் கூட 



அறியாதவரும் இவரே!! ஏன் 



என்றால் இவர் வளர்ந்த விதம் 



அப்படி.  சரி !! பார்ப்பதற்காவது சற்று 



சுமாரான அழகு உள்ளவராஎன்றால் 



அதுவும் இல்லை. மிகவும் 



அசிங்கமான தோற்றமும், நன்கு 



சலவை செய்யப்பட்ட உடைகள்கூட 



இந்தப்பிறவியில் போட்டு 



மகிழ்வதற்கு இவருக்கு 



கொடுத்துவைத்திடவில்லை. 



எந்நேரமும் பணம்..பணம்..பணம்... 



அதை எப்படி வட்டிக்கு கொடுத்து 



இன்னும் பெரிய பணக்காரராக ஆக 



வேண்டும் என்பதே இவரது 



இலட்சியம் ஆகும். இதற்காக 



சரியாக தனது வயிற்ருக்குக் கூட 



உணவு சாப்பிடாமல் வாழ்ந்து 



வருகிறார் இவர். பொதுவாக 



பணத்தை சேமிப்பது ஒன்றே தனது 



வாழ்க்கையின் குறிக்கோள் என்று 



இருப்பவர்களுள் 1௦௦க்கு 95 நபர்கள் 



இப்படித்தான் வாழ்ந்து கொண்டு 



இருக்கிறார்கள். வாழ்கையின் 



யதார்த்தம் புரியாதவர்கள் அவர்கள். 



தாயின் கருவறையில் இருந்து 



வெளிவரும்போது நாம் எதையும் 



கையினிலோ அல்லதுபையினிலோ 



கொண்டு வந்தது இல்லை. 



அதேபோலத்தான் உயிரோடு நாம் 



வாழ்கின்றபோது இரண்டு 



கால்களோடு உலவும்/நடைபோடும் 



நாம் அந்த விலையில்லாத  உயிர் 



நம்மை விட்டுப் பிரிந்து 



இறந்தபிறகு எட்டு கால்களோடு 



சுடுகாடு செல்லுகின்றபோதும் 



எதையும் எடுத்துச் செல்வதும்  



கிடையாது. பூமியில் இருப்பது 



எத்தனை ஆண்டுகள்? என்பது 



படைத்த இறைவன் அன்றி வேறு 



யார் அறிவார்? அந்த இடைப்பட்ட 



காலத்திற்குள்ளாக இருப்பதைக் 



கொண்டு வரவுக்குள்ளாக, எவன் 



ஒருவன் தனது செலவுகளைச் 



செய்துகொண்டு எதிர்காலத்திற்கும் 



ஓரளவு சேமித்து வைப்பவன் 



எவனோ அவனே மனிதருள் 



மாணிக்கம் என்று, என்னை பெற்று, 



வளர்த்து, ஆளாக்கிய, என் அன்புத் 



தெய்வம், எனது ஆருயிர் தந்தை 



என்னிடம்அடிக்கடிசொல்லுவார்கள். 


அந்தக் காலத்தில் 1966 -1969 இந்த 



இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த 



"சக்கரம் " என்ற திரைப்படத்தில் 



இந்த பணம் என்ற பொருளைப் 



பற்றிய விரிவான, விளக்கமான ஒரு 



பாடல் இப்போது உங்கள் கனிவான 



பார்வைக்கு!!                                                 




காசேதான் கடவுளப்பா !!                   


அந்தக் கடவுளுக்கும் இது 


தெரியுமப்பா !!     


கைக்குகைமாறும்பணமே       


உன்னைக் கைப்பற்ற நினைக்குது 


மனமே !!                                                           


நீ தேடும்போது வருவதுண்டோ !! 


விட்டுப் போகும்போது 


சொல்வதுண்டோ !!                               



                              (காசேதான் கடவுளடா)      



தாயைத்தவிர தந்தையைத் தவிர 


காசால் எதையும் வாங்கிடலாம் !! 


தலையா பூவா போட்டுப்பார்த்து 


தலைவணங்காமல்வாழ்ந்திடலாம்!!


கல்லறைகூட சில்லறை இருந்தால் 


வாய்திறந்தே மொழி பேசுமடா!! 


இல்லாதவன் சொல் சபை ஏறாமல் 


ஏளனமாகப் போகுமடா !!                           


                             (காசேதான் கடவுளடா)



அளவுக்குமேலே பணம் 


வைத்திருந்தால் அவனும்திருடனும் 


ஒன்றாகும் !!                                             


வரவுக்கு மேலே செலவுகள் 


செய்தால் அவனும் குருடனும் 


ஒன்றாகும் !!                                                 


களவுக்குப் போகும் பொருளை 


எடுத்து வறுமைக்குத் தந்தால் 


தருமமடா !!                                           


பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு 


பூட்டி வைத்தால் அது கருமமடா !!       


                            (காசேதான் கடவுளடா) 


கொடுத்தவன் விழிப்பான் !!   


எடுத்தவன் முடிப்பான் !!               


அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே !! 


சிரித்தவன் அழுவதும் !!                       


அழுதவன் சிரிப்பதும் !!                         


பணத்தால் வந்த நிலைதானே !!     


கையிலும் பையிலும் ஓட்டம் 


இருந்தால்  கூட்டம் இருக்கும் 


உன்னோடு !!   


தலைகளை ஆட்டும் பொம்மைகள் 


எல்லாம் தாளங்கள் போடும் 


பின்னோடு !!                                               


காசேதான் கடவுளப்பா!!                           


அந்தக் கடவுளுக்கும் இது 


தெரியுமப்பா !!                                             


கைக்கு கைமாறும் பணமே !!       


உன்னைக் கைப்பற்ற நினைக்குது 


மனமே !!                                                          


நீ தேடும்போது வருவதுண்டோ !!    


விட்டுப் போகும்போது 


சொல்வதுண்டோ !!                                   



(பாடல் இத்துடன் முடிகிறது)



வாழ்க்கைக்கு பணம் மிகமிக 



அவசியம்தான். அதில் இருவேறு 



கருத்துக்களுக்கு  இடம் என்றுமே 



இருந்தது கிடையாது.  ஆனால் 



அந்தப் பணம் மட்டுமே வாழ்க்கை 



கிடையாது என்பதை நம்மில் 



எத்தனை நபர்கள் புரிந்துகொண்டு 



தங்களது வாழ்க்கைப் பாதையை 



அமைத்துக்கொண்டு 



செயல்படுகிறார்கள்? ஒரு சிலரே !! 



சரி !! அன்பர்களே !! இப்போதுகுறள் 



விளக்கத்தைப் பார்ப்போமா? நாலு 



வார்த்தை ஒழுங்காகப் பேசிடத் 



தெரியாதவர் அவர், பார்ப்பதற்கும் 



சீரானஅழகியதோற்றம்இல்லாதவர், 



படித்த அறிவு அறவே இல்லாதவர், 



பண்புடன் பழகிடத் துப்பு அற்றவர், 



சபை நாகரீகம் என்றால், அது எந்த 



அங்காடியில் கிடைக்கும் என்று 



கேள்வி கேட்கும் ஞானம் பெற்றவர், 



நல்லவரா ? வல்லவரா? இது 



போன்ற ஒரு சராசரி மனிதனுக்குத் 



தேவையான எந்தவிதமான 



அணிகலன்களுமே இல்லாத, சிறந்த 



குணங்களைக் கொண்ட   இந்தக் 



கட்டுரையின் நாயகர் மதிப்புமிகு 



K.கருப்பஞ்செட்டியார் அவர்களுக்கு, 



ஏன் இந்த சமூகத்தில் அவருக்கு 



இந்த அளவுக்கு மீறிய இவ்வளவு 



மதிப்பும்,மரியாதையும், எதனால் 



கிடைக்கிறது என்று நீங்கள் 



யோசித்துப்பார்த்தீர்களா 



நேயர்களே? 



எல்லாம்.என்ன.எல்லாம்.எல்லாமே



அந்தப்பணம்...பணம்...மட்டும்தான்..



இந்தப் பணத்தை விட்டுவிட்டால் 



வேறு எந்தப் பொருளாலும் 



அவருக்கு இந்த மரியாதையை, 



கௌரவத்தை, வழங்கிடும் என்பது 



கிடையவேகிடையாதேஅன்பர்களே



அதுதான் அந்தப் பணம் 



ஒன்றினால்தான் அவருக்கு இந்தச் 



சிறப்பு கிடைக்கிறது. இதனை இந்த 



உலகத்து மக்கள் எந்நாளும் 



நினைவில் வைத்துக்கொளல் 



வேண்டும் என்று வான்புகழ் 



வள்ளுவர் சொன்னதுதான் அந்த 



செல்வத்தின் சிறப்பு !! அன்பர்களே. 



மீண்டும் நாளை வேறு ஒரு 



அதிகாரத்திலிருந்து மற்றும் ஒரு 



குறள் விளக்கத்தில் உங்கள் 



அனைவரையும் நான் சந்திக்கிறேன். 



அதுவரை அனைவரிடமும் இருந்து 



நன்றி பாராட்டி விடைபெறுகிறேன் 



அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!! 



நன்றி !! வணக்கம் !!                             



அன்புடன்.  மதுரை T.R.பாலு. 

No comments:

Post a Comment