Friday, November 8, 2013

தமக்கு கெடுதல் செய்தவருக்கும் நன்மையே செய்திடுக !! வள்ளுவர் வாக்கு (தமிழ் இனத் தலைவர் திரு மு.கருனாநிதி அவர்கள் போல வாழ்ந்திடுக --இது அடியேன் தரும் நாட்டு நடப்பு விளக்கம்!!)






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



இதை உரக்கச் சொல்வோம் 



உலகுக்கு !!                                                 



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!   



நம் வெற்றிப் பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு!!                                         




அச்சம் என்பது மடமையடா !!   



அஞ்சாமை திராவிடர் உடமையடா !!



ஆறிலும் சாவு !! நூறிலும் சாவு !! 



தாயகம் காப்பது கடமையடா !!   



குள்ளநரிக்கூட்டம் வந்து 



குறுக்கிடும் !!                                                 



நல்லவர்க்குத் தொல்லைதந்து 



மடக்கிடும்!! நீ                                               



எள்ளளவும் பயம் கொண்டு 



மயங்கதேடா !!                                           



அவற்றை எமன்உலகுக்கு அனுப்பி 



வைக்கத் தயங்காதேடா !!                     





வேப்பமர உச்சியில் நின்னு !!



பேய் ஒன்னு ஆடுதுன்னு !!                       



விளையாடப்போகும்போதுசொல்லி 



வைப்பாங்க !! உந்தன்                                 



வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி 



வைப்பாங்க !!                                             



வேலையற்ற வீணர்களின் !!         



மூளையற்ற வார்த்தைகளை !! 



வேடிக்கையாகக்கூடநம்பிவிடாதே!!



நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து !! 



வெம்பிவிடாதே!!நீவெம்பிவிடாதே!! 




              தினம் ஒரு திருக்குறள்.             




அதிகாரம்  :-  இன்னா செய்யாமை. 



குறள் எண்:-   314.                                         




இன்னாசெய்தாரை ஒருத்தல் அவர் 

                                                                 நாண 


நன்னயம் செய்து விடல்... ... ... ... ... ... 





விளக்கம் :-  கெடுதல் செய்தவரை 



தண்டிப்பது என்பது, அவரே வெட்கம் 



படும்படியாக, அவருக்கு நல்லுதவி 



செய்து, அவர் செய்த தீமையையும், 



நாம்அவருக்குச்செய்தநன்மையை, 



இவை இரண்டையுமே மறந்து 



விடுவதே ஆகும். இது வான் புகழ் 



வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 



குறளும் அதன் விளக்கமும் ஆகும்.     




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



(இந்தக் கட்டுரையில் வரும் 



பெயர்கள், நிகழ்வுகள், சம்பவங்கள் 



இவையாவும் கட்டுரை ஆசிரியரின் 



" கனவுக் கற்பனையில் " உருவான 



ஒன்றே அன்றி, வேறு எந்தத் தனி 



நபரையோ, அல்லது 



இயக்கத்தையோ பற்றி/நினைத்து 



குறிப்பிடுவன அல்ல.)                           




அது ஒரு உலகின் தொன்மையான 



மொழி பேசிடும் மாநிலம். அதன் 



பெயர் " மகிழ்நாடு  ".  அந்நாட்டு 



மக்களின் பொதுவான,இயல்பான 



குணம் என்ன என்றால், 



வந்தாரை வாழ வைக்கும் 



நல்லமனம் படைத்தவெள்ளைநிறம் 



உள்ள எண்ணங்களைக் கொண்ட, 



எளிதில் யாரையும் நம்பி ஏமாந்து 



போகும் அறிவு படைத்தவர்களே !!



அந்த நாட்டின் மக்கள். ஜனநாயகம் 



தழைத்து  ஓங்கச் சிறப்பு செய்திடும் 



நாடும் அதுவே. இந்தக் கதை 



நடைபெற்றதாகச் சொல்லப்படும் 



கால கட்டம் இன்றிலிருந்து 



ஏறத்தாழ 1௦௦௦ ஆண்டுகள் பின்பாக 



நடைபெற்றதாக கட்டுரை 



ஆசிரியர், கற்பனையில், காலவரம்பு 



நிர்ணயம் செய்து இருக்கிறார்.அந்த 



நாட்டினில் ஒரு மாபெரும் அறிவுப் 



புரட்சிஒன்றுநடைபெற்றஆண்டு 967 



ஆம் அன்பர்களே !!  அதுவரையிலும் 



இந்த மகிழ்நாடு உட்பட ஏறத்தாழ 23 



மாநிலங்களை தன்னகத்தே 



கொண்டுள்ள, அந்த மாநிலம்  



உள்ளிட்ட அத்துணை 



மாநிலங்களிலும் ஏகபோக 



ஆட்சியை நடத்திக்கொண்டு இருந்த 



அந்த ஒட்டு  மொத்த நாட்டின் பெயர் 



" வந்தியா " என்பதே ஆகும். 



கிட்டத்தட்ட 2௦ ஆண்டுகளுக்கு முன் 



947ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14ல் 



அமெரிக்கர்களின் கொடுங்கோல் 



ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 



அதன் பின்னரே அந்நாட்டு மக்கள் 



சுதந்திரக் காற்றினை சுவாசிக்கத் 



தொடங்கினார்கள் என்பது வரலாறு 



நமக்குக் கூறிடும் உண்மை. அந்த 



சுதந்திரம் பெற்று அதன் பின்னர் 2௦ 



ஆண்டுக்காலம் அந்த நாட்டினை 



ஆட்சிசெய்து வழிநடத்திச் சென்ற 



பாங்கிரஸ் தேசியக் கட்சி ஏனைய 



மாநிலங்களில் தோல்வியைத் 



தழுவியதுபோலவேமகிழ்நாட்டிலும் 



பரிபூரண தோல்வியடைந்தது. 



காரணம், எங்கு பார்த்தாலும் 



வறுமை, வேலையில்லாத் 



திண்டாட்டம், விலைவாசி உயர்வு 



இதுபோன்ற, இத்யாதி, இத்யாதி, 



காரணங்கள்தான் கட்சி படு 



தோல்வியைத் தழுவிட மூல 



காரணம் என்றால் அது மிகையான 



சொல் அல்ல என் அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே.  மகிழ்நாட்டில் எப்படி 



பாங்கிரஸ் எனும் தேசிய கட்சி 



தோல்வி அடைந்தது? ,  அது எப்படி 



என்றால் அனைத்துஎதிர்கட்சிகளும் 



அதுவரை கூட்டணி என்று எதுவும் 



தங்களுக்குள் அமைத்துக் 



கொள்ளாமல் ஒவ்வொரு கட்சியும் 



அவர்கள் தனித்தனியே போட்டி 



இட்டு தேர்தல்களில் பங்கு எடுத்துக் 



கொண்டதே காரணம்.  (இதுதான் 



முதன்முதலாக கூட்டணி என்றால் 



என்ன ? அது எதிர்கட்சிகளுக்கு 



எவ்வளவு நன்மை பயக்கும் 



என்பதை இந்த அரசியல் உலகுக்கு 



முதன்முதலாக வெளிச்சம்போட்டுக் 



காட்டியதே இந்த கூட்டணி என்று 



சொன்னால், அதுதான் உண்மை !!)



இந்த சூட்ஷுமத்தை அறிந்து அந்த 



நாட்டின் மூத்த அரசியல் அறிஞர் 



கூஜாஜி என்பவர் அறிந்துவைத்த 



காரணத்தினால் அவர் ஒவ்வொரு 



கட்சித் தலைமையையும் தனித் 



தனியாக சந்தித்து இந்த 



உண்மையை அவர்களிடம் விளக்கி 



சொன்னதன் விளைவு, ஒரு மெகா 



கூட்டணி ஒன்று அமைத்தார். 



அதுவரை சிந்திகிடந்த, மற்றும், 



சிதறிக்கிடந்த மக்களின் வாக்கு 



வங்கி ஒட்டுமொத்தமாக 



முதுபெரும்தலைவர் மூதறிஞர் 



கூஜாஜி அவர்களால் 



உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு 



கிடைத்திட்ட காரணத்தினால் 



அங்கே பாங்கிரஸ் என்ற தேசியக் 



கட்சி படு தோல்வியை சந்தித்தது 



மட்டும் அல்ல என் அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே !! அதல பாதாளத்தில் 



வீழ்ந்து மண்ணைக் கவ்வியது 



என்று சொல்லுவதே சாலச் 



சிறந்தது ஆகும். 



(தயவு செய்து வாசகர்கள் 



அனைவரும் என்னை அருள்கூர்ந்து 



மன்னிப்பீர்களாக!! கட்டுரை நான் 



நினைத்ததைவிடவும் மிக மிக 



நீளமாக உருவெடுத்துவிட்டதால் 



நீங்கள் அனைவரும் எனக்கு 



அருள்கூர்ந்து ஒரு சிறிய விளம்பர 



இடைவேளை தந்து எனக்கு எனது 



ஏனைய மற்ற பிற அலுவல்களைக் 



கவனிக்க நல்லதொரு வாய்ப்பினை 



பெற்றுத்தந்திட, வழங்கிட, 



வேணுமாய் வேண்டி 



விரும்பிக் கேட்டுக்கொண்டு 



மீண்டும் நாளை இதே இடத்தில் 



இதே நேரத்தில் நாம் அனைவரும் 



சந்திப்போம். அதுவரை உங்கள் 



அனைவருக்கும் நன்றியுடன் 



வணக்கம் கூறி விடைபெறுவது 



உங்களன்புத் தமிழ் மொழி பேசும் 



உடன்பிறவா சகோதரன் மதுரை 



T.R.பாலு. வணக்கம் நேயர்களே!!)



(இந்தக்கட்டுரையின் தொடர்ச்சி 



நாளை வெளிவரும்) 



                                              (தொடரும்.........)

No comments:

Post a Comment