Wednesday, November 6, 2013

அடுத்தவனின் மனைவியை அடைய விரும்புவனைப் போல அறிவிலிகள் (முட்டாள்கள்) உலகினில் வேறு எவரும் இல்லை--இது வான்புகழ் அய்யன் திருவள்ளுவரின் அருள் வாக்கு !! உங்கள் கனிவான கவனத்திற்கு







உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!



இதை உரக்கச் சொல்வோம் 



உலகுக்கு !!                                                     



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!     



நம் வெற்றிப் பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!                                             



              தினம் ஒரு திருக்குறள்.                            


அதிகாரம்:பிறனில் விழையாமை.   



குறள் எண்:- 142.                                           



அறன்கடை நின்றாருள் எல்லாம்         

                                                     பிறன்கடை  


நின்றாரின் பேதையார் இல்... ... ... ... ... 




விளக்கம் :-  அறத்தைவிட்டு 



தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் 



பிறன் மனைவியை விரும்பி 



அவனுடைய வாயிலில் சென்று 



நின்றவரைப் போல் அறிவிலிகள் 



(அறிவு என்பது அறவே 



இல்லாதவர்கள்,முட்டாள்கள்) வேறு 



எவரும் இல்லை. இது வான்புகழ் 



திருவள்ளுவர் நமக்கு அருளிய 



குறளும் அதன் விளக்க்கமும்ஆகும். 



நமது நாட்டு நடப்பு விளக்கம்:- 



இந்தக் குறளுக்கு நாட்டு நடப்பு 



விளக்கம் எழுதும் அளவிற்கு 



உயர்ந்த பொருள் ஏதும் இல்லாத 



காரணத்தினால், மேலே சொன்ன 



திருவள்ளுவர் தந்த விளக்கமே 



போதுமானது. மீண்டும் நாளை 



சந்திப்போமா? 



நன்றி !!வணக்கம்!!



அன்புடன்.  மதுரை T.R.பாலு. 

No comments:

Post a Comment