Friday, November 29, 2013

பகைவர்கள் செய்திடும் அக்கிரமங்களைப் பொறுத்துக்கொள் !! முடிவு காலம் வரும்போது பகைவரின் தலை தானே கீழே வீழும்...வள்ளுவர் தரும் விளக்கம்.






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 




தினம் ஒரு திருக்குறள்.                           



அதிகாரம்   :-  காலம் அறிதல்.               



குறள் எண் :-  488.                                           



செறுநரைக் காணின் சுமக்க 

                                                          இறுவரை 

காணின் கிழக்காம் தலை... ... ... ... ... ... 




வள்ளுவர் தரும் விளக்கம் :-                    



பகைவரைக் கண்டால் பொறுத்துச் 



செல்ல   வேண்டும்.   அந்தப் 



பகைவருக்கு முடிவுகாலம் என்று 



ஒன்று வரும். அந்தநாள்வரும்போது 



அந்தப்பகைவரின்தலை,கீழேவிழும். 




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



(இந்தக் கட்டுரையில் வரும்/



குறிப்பிடப்படும்-நிகழ்வுகள்/



சம்பவங்கள், பெயர்கள்,குறிப்புகள் 



இவை எல்லாம் கற்பனையே தவிர 



வேறு எந்தத் தனிப்பட்ட நபரையோ 



அல்லது அமைப்புகளையோ 



குறிப்பிடுவன அல்ல என்பதனைப் 



பணிவோடு தெரிவித்துக் கொள்ள 



கடமைப்பட்டு உள்ளோம். முழுக்க, 



முழுக்க இந்தக் கட்டுரையில் வரும் 



அனைத்து சம்பவங்களும் கட்டுரை 



ஆசிரியரின் கனவினில்வந்தஒன்றே 



தவிர, யாரையும்/எவரையும் பற்றிக் 



குறிப்பிடுவன அல்ல,அல்ல............. 



அல்லவே அல்ல.)



                                                             



அந்த நாட்டின் பெயர் எழுத்து 4.         



அதில் உள்ள இந்தக் கதை 



நடைபெறுவதாகக் கதாஆசிரியரின் 



கற்பனையில் உருவான அந்த 



தொன்மையான மொழி பேசிடும் 



மாநிலத்தின் பெயர் அதில் வரும் 



எழுத்து 5. அந்த மாநிலத்தின் 



தலைநகர் அதன் பெயரில் வரும் 



எழுத்து 3. அந்தத் தலைநகருக்குள் 



உள்ள ஒரு சிற்றூர்அதுதான் மெட்டி. 



அந்த சிற்றூர்தனில் வாழ்ந்து 



வருபவர்தான் திரு மு. அன்புநிதி 



அகவை 9௦ தாண்டினாலும் கூட 



இளைஞனைப் போல அதே சுறுப்பு. 



சென்றமுறை நடைபெற்ற 



பஞ்சாயத்து தேர்தலில் இவரது 



அரசியல் எதிர்க்கட்சி தலைவர் 



பெயர் J. ஜெயந்தன். பல சதிவேலை 



செய்து அந்த மெட்டி டவுண் 



பஞ்சாயத்து தேர்தலில் உள்ளூரில் 



உள்ள நாடக நடிகர் அஜயகாந்த் 



இவர் ஒரு சிறிய நற்பணி மன்றம் 



அமைத்து இருந்தார். அவருக்கு 



என்று ஒரு கணிசமான வாக்கு 



வங்கி அந்த சிற்றூரில் இருந்தது. 



அவரையும் J. ஜெயந்தன் தனது 



கூட்டணியில் சேர்த்து 



வெற்றிபெற்று பின் இப்போது எந்த 



நடிகரின் வாக்குகளைப் பெற்று 



ஆட்சி அமைத்திடும் வாய்ப்பினைப் 



பெற்றாரோ, அவர் மீதே பல பொய் 



வழக்குகள் போட்டு இப்போது அவர் 



பல நீதிமன்றங்களின் வாசலில் 



தவம் இருக்க வேண்டியதாக 



ஆயிற்று. சரி அன்பர்களே !! 



இப்போது நாம் கட்டுரையின் 



தலைப்பு சம்பந்தமான 



விசயத்திற்குள் செல்வோமா ?




(இதன் தொடர்ச்சி நாளை வெளி 


வரும்அதுவரை நாமும் 


தொடர்வோம்.)                      (தொடரும்)

Monday, November 25, 2013

விலைமாதரிடம் உள்ள விசேஷ குணங்களும்--அவளோடு தொடர்பு கொள்பவரது நிலைகளும் !! வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்    :- வரைவின் மகளிர்.         


 

குறள் எண் :- 92௦.                                           



இருமனப் பெண்டிரும் கள்ளும்             


                                                  கவறும்             


திருநீக்கப் பட்டார் தொடர்பு... ... ... ...     



வள்ளுவர் தரும் விளக்கம் :-                 



இரண்டு வகையான மனம் உடைய 



பொதுமகளிரும்   (விலைமாதர்கள்,



விபச்சாரிகள்) கள்ளும், சூதும் ஆகிய 



இந்த மூன்று வகை  தீமைகளும், 



திருமகளால் நீக்கப்பட்டவருடைய 



உறவாகும்/தொடர்பாகும்  என்பதே 



உண்மை நிலை.  இது வான்புகழ் 



வள்ளுவர் நமக்கு அருளிய 



திருக்குறளும் அதன் விளக்கமும்



ஆகும்.                                  




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-           



இங்கே இரண்டு பொதுமகளிர் 



ஒருவரோடு ஒருவர் உரையாடுவது 



போன்ற காட்சி அமைப்பு.  (நேரலை) 



இதில் லலிதாவிற்கு வயது  4௦.           



கலாவிற்கு வயது 25.                  



லலிதா:-  ஏண்டி கலா. 



கலா:- என்னக்கா !! எதுக்குக் 



கூப்டீங்க ?                                                       



லலிதா :-  ஆமா !! என்னடி !! நம்ம 



வியாபாரம் (?) ரொம்பவும் மந்தமா 



இருக்கேடி !! இப்படி இருந்தா நாம 



எப்படிடி தொழில் (?) நடத்துறது?



கலா:-  ஆமாக்கா !! நீங்க சொல்றது 



ரொம்ப ரொம்ப கரெக்ட்தான். ஆனா 



நாம " செய்ற வேலையை "  எப்படி 



அக்கா?வியாபாரம்னு சொல்றீங்க? 



லலிதா:- ஏண்டி !! நான்சொல்றதிலே 



என்ன தப்பு ? ஒரு வகையில பாத்தா 



நாமளும்வியாபாரியும்ஒன்னுதான்



அப்டீங்கிறது உனக்குத் தெரியுமா? 



இல்ல !! தெரியாதா ?



அங்க என்னடி பாக்குற ? தெரியுமா ?



இல்ல தெரியாதா ?                                                   



கலா:- நீ என்னக்கா சொல்ற ? 



ஒன்னும் புரியலியே !! சத்தியமா 



எனக்கு ஒன்னும் தெரியாதுக்கா.                                



லலிதா:- அடி..போடி..மண்டு..உனக்கு 



ஒருமண்ணும்தெரியாது..தொழில்ல 



உன்னைய விட நான் 15 வருஷம் 



சீனியர். அதாச்சும் தெரியுமா?இல்ல.. 



அதுவும் தெரியாதா?                 



கலா:- அது தெரியும்க்கா.ஆனா இந்த 



வியாபாரியும் நாமளும் ஒன்னு 



அப்டீன்னு சொல்றீங்களே, அதான் 



எனக்கு புரியலை.                                     



லலிதா :-  சொல்றேன்டி. நல்லா நீ 



கேட்டுக்கடி. நான் சொன்ன ரெண்டு 



இடத்லேயும் (வியாபாரி &விபசாரி) 



இந்த இரண்டு பேருக்கும் ஏகப்பட்ட 



ஒற்றுமை இருக்குதுடி.                               




1)  இரண்டு பேருக்கும் பேரிலேயே 



ஒற்றுமை. பெயர் ரெண்டுக்குமே 



நாலு எழுத்துதான்.                                     



கலா :- அடடா..என்னே அற்புதமான 



கண்டுபிடிப்பு.  வாஸ்கோடகாமா 



கெட்டான் போங்க அக்கா  !!                                 



2)  தேடி வர்ற வாடிக்கையாளர்கள் 



கிட்ட நல்லா சிரிச்சுப் பேசினாதான் 



அடுத்த தடவையும் வேற எங்கயும் 



போகாம இரண்டு இடத்துலேயும் 



 "சரக்கை" வாங்கிக்க இங்கே 



மட்டும் வருவானுக.                                 



கலா:- உம்...அப்புறம்..                                 



லலிதா :- 3 )  ரெண்டு பேர்கிட்டேயும் 



ஒழுங்கான கணக்குவழக்குங்கிறது  



நிச்சயமா இருக்கவே இருக்காது.   



கலா:- பலே !! பலே !! உம்..அப்புறம்.   



லலிதா:-4)ரெண்டுஇடத்துலேயும்ஒரு 


டிப்பார்ட்மெண்ட் ரெய்டு வருதுன்னு 



வச்சுக்க. பயத்திலே ரெண்டு பேரும்



நடுநடுங்கிடத்தான் செய்யணும்.   



கலா:- சூப்பர் !!சூப்பர் !!                               



லலிதா:-5)  ஏதாவது குறை,குற்றம் 



இந்த ரெண்டு பேர் கிட்டேயும் 



இருந்தா, இருந்தா என்ன இருந்தா 



இருக்கத்தான்  செய்யும்.



அத யாராலும் தடுக்கவே முடியாது. 



அந்தக்குறை,குற்றத்துக்கு 



ஏதாவது அபராதம் போட்டாங்கன்னு 



வச்சுக்க. இந்த ரெண்டு பெரும் இதே 



தொழில்ல (?) தான் சம்பாரிச்சு 



அபராதத்தொகையை  அத்த 



கட்டவேண்டும். வேற வழி இல்லடி.             



கலா :- யக்கா !! சத்தியமா 



சொல்றேன். நீங்க இங்க இருக்க 



வேண்டிய ஆளே இல்லக்கா.உம்.. 



அப்புறம்.                                                         



லலிதா :- என்னைய வேற எங்கடி 



போகச்சொல்ற ?. ஆமா. 



தெரியாமத்தான் நான் கேக்கிறேன் 



ஏண்டி, நான் என்ன பாட்டி வடை 



சுட்ட கதையையா சொல்றேன் ?. 



உம்..அப்றம்..உம்..அப்புறம்அப்டீன்னு 



கேட்டுகிட்டே இருக்க. என்னாடி 



கூட்டத்தையே காணோம்னு 



கேட்டாஏதாச்சும் சரியான பதில் 



தெரிஞ்சா சொல்லு. இல்ல மூடிட்டு 



போ வேண்டியதுதானே.  உக்கும்.                     



கலா :- என்னக்கா கோச்சுக்கிற . 



அக்கா நான் தெரியாமத்தான் 



கேக்குறேன். நடக்கறது என்ன 



மாசம்னு உங்களுக்குத் தெரியாதா? 



இல்ல தெரியாத மாதிரி 



நடிக்கிறீங்களா ?                                       



லலிதா:-  ஏய் !! கலா !! சொல்லுடி. 



எனக்கு நிஜமாவேத் தெரியலைடி.



தெரியாமத்தான் கேக்கிறேன். 



சொல்லுடி காரணத்தை.                         



கலா :- பொதுவா நம்ம " வர்கத்தை " 



சேர்ந்த மக்களுக்கு ஏண்டா இந்த 



கார்த்திகை,மார்கழிமாசம் 



எதுக்குடா வருதுன்னுதானே 



நினைக்கிறோம் ? 



லலிதா :- ஏண்டி ? ஏன் அப்படி நாம 



நினைக்கிறோம் ? சொல்லு.                   



கலா ":-  யக்கா !! நான் கேக்றேன்னு 



தப்பா எடுத்துகிட்டு என்னையை 



நீங்க கோச்சுக்க மாட்டீங்களே ?   



லலிதா :-ஏண்டி கலா ?  நான் 



உன்கிட்ட அப்படியாடி வித்யாசம் 



பாத்தா பழகுறேன். நீ என்னோட 



கூடப்பிறக்காத சகோதரி மாதிரிடி. 



சும்மா கேளுடி தைரியமா !!                 



கலா :-  இல்ல அக்கா !! (சற்றே 



தயங்கியவாறே) அப்ப நீங்க என்ன 



சொன்னீங்கன்னா தொழில்ல 



என்னையை விட 15 வருஷம்சீனியர் 



அப்டீன்னு நீங்க தானே யக்கா 



சொன்னீங்க.                                                   



லலிதா :-  ஆமாடி..இப்பவும் 



சொல்றேன்..நான் 15 வருஷம் 



சீனியர்தான் உன்னையை விட. 



அதுல உனக்கு என்னடி சந்தேகம் ? 



 கலா :-  இல்ல இது ஒரு ரொம்ப 



ரொம்ப சின்ன விஷயம். இது எப்டி 



உங்களுக்குத் தெரியாமப் 



போச்சுன்னு தான் நினைக்கிறேன். 



லலிதா :-அடியேய் !! ரொம்பவும் பிகு 



பண்ணாமல் விஷயத்தை இப்ப நீ 



சொல்லப்போறியா ? இல்லையா ?                       


கலா :- இதோ சொல்லிட்றேன். 



இல்ல அக்கா நம்ம்மகிட்டே 



ரெகுலரா வர்ற கஸ்டமர்ல 



பாதிப்பேருக்கு மேல கார்த்திகை 



மாசம் மாலை போட்டு 



மலைக்குபோயி விரதம் இருந்து 



சாமி கும்பிட்டு தை மாசம் முதல் 



வாரம்தானே அக்கா இங்கே வந்து 



அம்மனைத் தரிசிக்க வருவாங்க. 



அத சொன்னேன்.                                       



 லலிதா:-  சூப்பர்.சூப்பர். குருவை 



மிஞ்சுன சிஷ்யை அப்டீன்னு 



சொன்னா அது நீதாண்டி. சரி அது 



கிடக்கட்டும்.  ஆமா நம்ம பாகனேரி 



சிங்காரம் செட்டியார் 4 நாளைக்கு 



முன்னாடி உன்ட்ட வந்தார்ல அப்ப 



என்னடி உன் ரூம்ல ஒரே சத்தமா 



இருந்துச்சு. அவரு கண்ணுக்கு 



எங்கள எல்லாம் தெரியுமா என்ன. 



எப்படியும் மாசத்துக்கு மூனு தரம் 



உன்கிட்டதானே வருவாரு. நீ 



கொடுத்து வச்சவடி. விஷயத்தை 



சொல்லு. என்ன அவர்கிட்ட 



எதாச்சும் தகறாரா ?                                   



கலா :- இல்லக்கா !! எப்ப வந்தாலும் 



மறக்காம நம்ம மாமிட்ட அவரு 



தனியா கப்பம் கட்டி இருந்தாலும் 



நம்ம கையிலே ஆயிரம் ரூபாய்க்கு 



குறையாம குடுப்பதுதான் அவர் 



வழக்கம். கடந்த 5 வருஷமா அப்டி 



இருந்த மனுஷனுக்கு என்ன 



நினைச்சாரோ தெரியலை அக்கா.  



நாலு நாளைக்கு முன்பு  வந்தப்ப 



பாவி வெறும் 1௦௦ ரூபாயை தர்றான் 



கேடுகெட்ட பிச்சைக்காரப்பய. 



அதான் அவன் மூஞ்சிலே விட்டு 



எறிஞ்சுட்டேன். அதான் ஒரே 



சண்டை. வேற ஒன்னும் இல்ல 



அக்கா.                                                                 



லலிதா :- சும்மா சொல்லக்கூடாதுடி. 



போன வாரம் வரை  சிங்காரம் 



செட்டியாரை, கொடைவள்ளல்,தர்ம 



துரை, அப்படி இப்படின்னு  புகழ்ந்து 



தள்ளினே. இப்ப என்னடான்னா 



இப்படி பிச்சைக்காரப்பயன்னு 



சொல்றே. உன்னைய ஒன்னும் 



புரிஞ்சுக்கவே முடியலைடி.                   



கலா :-  யக்கா நம்ம மக்களைப் 



பொறுத்தவரை எப்பவுமே 



நம்மளுக்கு ரெண்டு மனசுதான். 



காசுகொடுத்தா நல்லவருவல்லவரு 



இல்லாங்காட்டி கெட்டவரு துரோகி 



இது தெரிஞ்ச ஒன்னு தானே . நாம 



இப்படி ரெண்டு மனசுக்காரிகதான் 



அப்டீன்னு திருவள்ளுவரே ஒரு 



குறள்ல சொல்லிருக்காருக்கா. 



அதத்தான் நம்ம மதுரை T.R.பாலு 



சார் இந்தக் கட்டுரையில சொல்லி 



இருக்கார் நீங்க பாக்கலையா.           



லலிதா :-  ஆமா ..ஆமா.. 



பாத்தேன்..பாத்தேன்..அவரைப்போய் 



பேசிக்கிட்டு.                                                     



கலா :-  ஏன் ? அக்கா ... அவரை 



இப்படி நீ சலிச்சுக்குற.                               



லலிதா :- இல்லடி. எத்தனை தரம் 



ஒரு நாளைக்கு நம்ம தெருவைத் 



தாண்டி போறாரு. நம்ம வீட்டை 




ஒருதரமாச்சும் பாத்துருக்கார இல்ல 



உள்ள வந்துதான் இருக்கிறாரா. 



மனசுல பெரிய உத்தமர்னுதான் 



நினைப்பு. சுத்தக் கஞ்ஜாம்பட்டி. 



அவரைப் போயி பேசிக்கிட்டு. சரி சரி 



என்ஆளு அழகர்சாமிவந்துட்டாருடி. 



நான் போயிட்டு வாரேன். அப்புறமா 



நாம பேசிக்கலாம்.                                                           



அன்பர்களே !!நமது நாட்டு நடப்பு 



குறள் விளக்கம்  இத்துடன் நிறைவு 



பெறுகிறது. மீண்டும் அடுத்த நாட்டு 



நடப்பு விளக்கத்தில் உங்கள் 



அனைவரையும் சந்திக்கிறேன். 



நன்றி !! வணக்கம் !!                                     



அன்புடன். மதுரை T.R.பாலு.                                                       

Wednesday, November 20, 2013

செல்வத்தின் சிறப்பு !! திருவள்ளுவர் தரும் விளக்கம் காணீர் !!







உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



             தினம் ஒரு திருக்குறள் !                 



அதிகாரம்   :-  பொருள் செயல்வகை. 



குறள் எண் :-   751.                                           



பொருளல் லவரைப் பொருளாகச்       

                                                             செய்யும் 


பொருளல்லது இல்லை பொருள்... ... 



வள்ளுவர் தரும் விளக்கம்:-



ஒரு பொருளாக மதிக்கத் தகாத 



எவரையும்,மதிப்புடைய ஒருவராகச் 



செய்யத்தக்கது,பொருள், அல்லாமல் 



சிறப்புடைய பொருள் வேறு எதுவும் 



இல்லை.                                                           




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-   



இராமநாதபுரம் மாவட்டம். அதில் 



உள்ள ஒரு சிற்றூர்தான் பாகனேரி. 



செல்வச் செழிப்புமிக்க 



செட்டியார்கள் அதிக 



எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் 



ஊர் அதுவே ஆகும். அந்த ஊரின் 



சமூகத் தலைவர்தான் திருவாளர். 



K.கருப்பஞ் செட்டியார். பெரும் 



பணக்காரர் அவர். அந்நாளிலேயே 



பல கோடிகளுக்கு மேல் சொத்து 



மதிப்பு உடையவர் இவர்.இவர்வீட்டு 



இருப்புபெட்டியில் ரொக்கம் மட்டும் 



எப்போதும் 5 கோடிகளுக்கு மேல் 



வைத்திருப்பவர். இவருடைய 



தொழில் லேவாதேவி (FINANCE) 



ஆகும்.  பண விஷயத்தில் மிகவும் 



கறாரான பேர்வழி இவர். ஒவ்வொரு 



பைசாவுக்கும் மிகுந்த மதிப்பு தந்து 



தனது வாழ்நாளைக் கழிப்பவரும் 



இவரே. இப்படிப்பட்ட நிலையில் 



இவர் ஒன்றும் படித்த பட்டதாரி 



அல்ல. பள்ளிக்கூடத்தின் பக்கம் 



மழைக்குக்கூட ஒதுங்கிடாதவர் 



இவரே.  நாலு வார்த்தை எந்தவித 



சிக்கலும் இல்லாமல் பேசக் கூட 



அறியாதவரும் இவரே!! ஏன் 



என்றால் இவர் வளர்ந்த விதம் 



அப்படி.  சரி !! பார்ப்பதற்காவது சற்று 



சுமாரான அழகு உள்ளவராஎன்றால் 



அதுவும் இல்லை. மிகவும் 



அசிங்கமான தோற்றமும், நன்கு 



சலவை செய்யப்பட்ட உடைகள்கூட 



இந்தப்பிறவியில் போட்டு 



மகிழ்வதற்கு இவருக்கு 



கொடுத்துவைத்திடவில்லை. 



எந்நேரமும் பணம்..பணம்..பணம்... 



அதை எப்படி வட்டிக்கு கொடுத்து 



இன்னும் பெரிய பணக்காரராக ஆக 



வேண்டும் என்பதே இவரது 



இலட்சியம் ஆகும். இதற்காக 



சரியாக தனது வயிற்ருக்குக் கூட 



உணவு சாப்பிடாமல் வாழ்ந்து 



வருகிறார் இவர். பொதுவாக 



பணத்தை சேமிப்பது ஒன்றே தனது 



வாழ்க்கையின் குறிக்கோள் என்று 



இருப்பவர்களுள் 1௦௦க்கு 95 நபர்கள் 



இப்படித்தான் வாழ்ந்து கொண்டு 



இருக்கிறார்கள். வாழ்கையின் 



யதார்த்தம் புரியாதவர்கள் அவர்கள். 



தாயின் கருவறையில் இருந்து 



வெளிவரும்போது நாம் எதையும் 



கையினிலோ அல்லதுபையினிலோ 



கொண்டு வந்தது இல்லை. 



அதேபோலத்தான் உயிரோடு நாம் 



வாழ்கின்றபோது இரண்டு 



கால்களோடு உலவும்/நடைபோடும் 



நாம் அந்த விலையில்லாத  உயிர் 



நம்மை விட்டுப் பிரிந்து 



இறந்தபிறகு எட்டு கால்களோடு 



சுடுகாடு செல்லுகின்றபோதும் 



எதையும் எடுத்துச் செல்வதும்  



கிடையாது. பூமியில் இருப்பது 



எத்தனை ஆண்டுகள்? என்பது 



படைத்த இறைவன் அன்றி வேறு 



யார் அறிவார்? அந்த இடைப்பட்ட 



காலத்திற்குள்ளாக இருப்பதைக் 



கொண்டு வரவுக்குள்ளாக, எவன் 



ஒருவன் தனது செலவுகளைச் 



செய்துகொண்டு எதிர்காலத்திற்கும் 



ஓரளவு சேமித்து வைப்பவன் 



எவனோ அவனே மனிதருள் 



மாணிக்கம் என்று, என்னை பெற்று, 



வளர்த்து, ஆளாக்கிய, என் அன்புத் 



தெய்வம், எனது ஆருயிர் தந்தை 



என்னிடம்அடிக்கடிசொல்லுவார்கள். 


அந்தக் காலத்தில் 1966 -1969 இந்த 



இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த 



"சக்கரம் " என்ற திரைப்படத்தில் 



இந்த பணம் என்ற பொருளைப் 



பற்றிய விரிவான, விளக்கமான ஒரு 



பாடல் இப்போது உங்கள் கனிவான 



பார்வைக்கு!!                                                 




காசேதான் கடவுளப்பா !!                   


அந்தக் கடவுளுக்கும் இது 


தெரியுமப்பா !!     


கைக்குகைமாறும்பணமே       


உன்னைக் கைப்பற்ற நினைக்குது 


மனமே !!                                                           


நீ தேடும்போது வருவதுண்டோ !! 


விட்டுப் போகும்போது 


சொல்வதுண்டோ !!                               



                              (காசேதான் கடவுளடா)      



தாயைத்தவிர தந்தையைத் தவிர 


காசால் எதையும் வாங்கிடலாம் !! 


தலையா பூவா போட்டுப்பார்த்து 


தலைவணங்காமல்வாழ்ந்திடலாம்!!


கல்லறைகூட சில்லறை இருந்தால் 


வாய்திறந்தே மொழி பேசுமடா!! 


இல்லாதவன் சொல் சபை ஏறாமல் 


ஏளனமாகப் போகுமடா !!                           


                             (காசேதான் கடவுளடா)



அளவுக்குமேலே பணம் 


வைத்திருந்தால் அவனும்திருடனும் 


ஒன்றாகும் !!                                             


வரவுக்கு மேலே செலவுகள் 


செய்தால் அவனும் குருடனும் 


ஒன்றாகும் !!                                                 


களவுக்குப் போகும் பொருளை 


எடுத்து வறுமைக்குத் தந்தால் 


தருமமடா !!                                           


பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு 


பூட்டி வைத்தால் அது கருமமடா !!       


                            (காசேதான் கடவுளடா) 


கொடுத்தவன் விழிப்பான் !!   


எடுத்தவன் முடிப்பான் !!               


அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே !! 


சிரித்தவன் அழுவதும் !!                       


அழுதவன் சிரிப்பதும் !!                         


பணத்தால் வந்த நிலைதானே !!     


கையிலும் பையிலும் ஓட்டம் 


இருந்தால்  கூட்டம் இருக்கும் 


உன்னோடு !!   


தலைகளை ஆட்டும் பொம்மைகள் 


எல்லாம் தாளங்கள் போடும் 


பின்னோடு !!                                               


காசேதான் கடவுளப்பா!!                           


அந்தக் கடவுளுக்கும் இது 


தெரியுமப்பா !!                                             


கைக்கு கைமாறும் பணமே !!       


உன்னைக் கைப்பற்ற நினைக்குது 


மனமே !!                                                          


நீ தேடும்போது வருவதுண்டோ !!    


விட்டுப் போகும்போது 


சொல்வதுண்டோ !!                                   



(பாடல் இத்துடன் முடிகிறது)



வாழ்க்கைக்கு பணம் மிகமிக 



அவசியம்தான். அதில் இருவேறு 



கருத்துக்களுக்கு  இடம் என்றுமே 



இருந்தது கிடையாது.  ஆனால் 



அந்தப் பணம் மட்டுமே வாழ்க்கை 



கிடையாது என்பதை நம்மில் 



எத்தனை நபர்கள் புரிந்துகொண்டு 



தங்களது வாழ்க்கைப் பாதையை 



அமைத்துக்கொண்டு 



செயல்படுகிறார்கள்? ஒரு சிலரே !! 



சரி !! அன்பர்களே !! இப்போதுகுறள் 



விளக்கத்தைப் பார்ப்போமா? நாலு 



வார்த்தை ஒழுங்காகப் பேசிடத் 



தெரியாதவர் அவர், பார்ப்பதற்கும் 



சீரானஅழகியதோற்றம்இல்லாதவர், 



படித்த அறிவு அறவே இல்லாதவர், 



பண்புடன் பழகிடத் துப்பு அற்றவர், 



சபை நாகரீகம் என்றால், அது எந்த 



அங்காடியில் கிடைக்கும் என்று 



கேள்வி கேட்கும் ஞானம் பெற்றவர், 



நல்லவரா ? வல்லவரா? இது 



போன்ற ஒரு சராசரி மனிதனுக்குத் 



தேவையான எந்தவிதமான 



அணிகலன்களுமே இல்லாத, சிறந்த 



குணங்களைக் கொண்ட   இந்தக் 



கட்டுரையின் நாயகர் மதிப்புமிகு 



K.கருப்பஞ்செட்டியார் அவர்களுக்கு, 



ஏன் இந்த சமூகத்தில் அவருக்கு 



இந்த அளவுக்கு மீறிய இவ்வளவு 



மதிப்பும்,மரியாதையும், எதனால் 



கிடைக்கிறது என்று நீங்கள் 



யோசித்துப்பார்த்தீர்களா 



நேயர்களே? 



எல்லாம்.என்ன.எல்லாம்.எல்லாமே



அந்தப்பணம்...பணம்...மட்டும்தான்..



இந்தப் பணத்தை விட்டுவிட்டால் 



வேறு எந்தப் பொருளாலும் 



அவருக்கு இந்த மரியாதையை, 



கௌரவத்தை, வழங்கிடும் என்பது 



கிடையவேகிடையாதேஅன்பர்களே



அதுதான் அந்தப் பணம் 



ஒன்றினால்தான் அவருக்கு இந்தச் 



சிறப்பு கிடைக்கிறது. இதனை இந்த 



உலகத்து மக்கள் எந்நாளும் 



நினைவில் வைத்துக்கொளல் 



வேண்டும் என்று வான்புகழ் 



வள்ளுவர் சொன்னதுதான் அந்த 



செல்வத்தின் சிறப்பு !! அன்பர்களே. 



மீண்டும் நாளை வேறு ஒரு 



அதிகாரத்திலிருந்து மற்றும் ஒரு 



குறள் விளக்கத்தில் உங்கள் 



அனைவரையும் நான் சந்திக்கிறேன். 



அதுவரை அனைவரிடமும் இருந்து 



நன்றி பாராட்டி விடைபெறுகிறேன் 



அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!! 



நன்றி !! வணக்கம் !!                             



அன்புடன்.  மதுரை T.R.பாலு.