Friday, April 25, 2014

ஆழி சூழ்ந்த இவ்வுலகில் உலகமகாபாவி என்பவன் யார் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  பிறனில் விழையாமை.



குறள் எண் :-  142.



அறன்கடை நின்றாருள் எல்லாம் 


                                                பிறன்கடை 


நின்றாரின் பேதையார் இல்... ... ...         



விளக்கம் :-  பிறருடைய 


மனைவிக்காக அவளது இல்லத்தின் 


முன்பாக, அவளிடம் தேகசுகம் 


வேண்டி காத்துக்கிடப்பவனே 


பாவிகளுள் மகாபாவியாவன்.         


இது வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.                                                           



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-           


கந்தையா :-  டேய் இராமையா 


உனக்கு சேதி தெரியுமாடா ?                 


இராமையா :-  என்னடா சொல்லு. 


சொன்னாத்தானே சேதி தெரியும்.   


கந்த:-  நம்ம பாலையா இருக்கானே 


அந்தப் பய, அவன் வீட்டுக்கு 


எதிர்வீட்டிலே குடியிருக்கிற நம்ம 


பயில்வான்புண்ணியகோடியின்   


பொண்டாட்டி, இருக்காளே குமுதா, 


அவளைத் தானும் விரும்புவதாகச் 


சொல்லிஅவளோட கையப் புடிச்சு 


இழுத்துஇருக்கானாம். அவளோட  


வீட்டுக்கே போயி நின்னு..         


இராமை:- உம் !! அப்புறம் !!                       


கந்த:-  அப்புறம் என்ன அப்புறம். 


உடனே அவ புருசன் பயில்வான் 


புண்ணியகோடிகிட்டே ஓடிப்போயி 


இப்படி இப்படி விசயம்னு 


சொல்லிபுட்டாடா. உடனே அவன் 


நம்ம பாலையாவை மரத்துலே கட்டி 


வச்ச உரி உரின்னு தோலை உரிச்சு 


தலைகீழா வச்சு உப்புக்கண்டம் 


போட்டுட்டானாம்.   


இராமை:-  பிறவு ?                                         


கந்த:-  பிறவு என்ன பிறவு. ஊர்கூடி 


அவனோட உச்சந்தலையிலே பச்ச 


குத்திட்டானுங்கடா !! 


பச்சைகுத்திட்டானுங்கடா !!அவனது 


நெத்தியிலேயும் அதோடகூட சேத்து 


இராமை :-  என்னனு பச்சை குத்தி 


இருக்கானுங்க?                                             


கந்த:- " உலக மகாபாவி "  என்று 


இவனுக்கு பட்டம்வேற 


தந்துட்டானுங்க.                                         


இராமை:-   எல்லாம் தலை எழுத்து 


யாரும் அழிக்க முடியாது. அது ஏன் !!


அதை எழுதிய பிரம்மதேவன்கூட 


அதை அழிக்க முடியாது.சரிடா நான் 


போயிட்டு வாரேன்.அப்புறம் 


சந்திக்கிறேன்.                                               



நன்றி !! வணக்கம் !!                               



அன்புடன். மதுரை T.R. பாலு.

Sunday, April 20, 2014

அமைச்சர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ? வ்ள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :- அமைச்சு.


குறள் எண் :-  638.



அறிகொன்று அறியான் எனினும் உறுதி 


உழையிருந்தான் கூறல் கடன்... ... ... 



விளக்கம் :-  அறிவுரை சொல்வாரின் 


அறிவுரையையும்கேளாமல் அழித்து, தானும் 


அறியாதவனாக, ஒரு அரசன் இருந்தாலும், 


அமைச்சர்,அரசனுக்கு,உறுதியானவற்றை 


எடுத்துக்கூறுதல் ஒரு நல்ல அமைச்சரின் 


தலையாயகடமையாகும்.  



இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 



சென்ற குறளும், அதன் விளக்கமும் ஆகும்.





நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


இந்த குறளுக்கு உதாரணம் சொல்வதென்றால் 


அதற்கு மாண்பு மிகு தமிழக முதலமைச்சர் 


அம்மையார் அவர்களை விட்டால், அகிலம் 


முழுதும் தேடினாலும் வேறு யாரும் கிடைக்கவே


மாட்டார்கள் என்பது கல்லிலே பொறித்த ஒரு 


சொல்லே ஆகும்.அவர்களுக்கு என்று சுயமாக 


சிந்தித்து, மக்களுக்கு நல்லது செய்திடும் 


திட்டங்களை தேர்ந்தெடுக்கும் ஆற்றலும் 


இல்லை.மாண்புமிகு அம்மையார் அவர்களுக்கு 


அறிவுரை, ஆலோசனை, இவைகளைச் சொல்லி 


அறவழி நடந்திடச் செய்திடும் அறிவு உள்ள 


அமைச்சர்களும் எவரும் இல்லை. எல்லா 


அமைச்சர்களும் தலையாட்டி 


பொம்மைகளாகவும், தலை வணங்கும் 


அடிமைகளாகவும் இருப்பதுதான் நம் 


தமிழகத்தின் தலை எழுத்து. ஆண்டவன்தான் 


இந்த நாட்டைக் காப்பாற்றிட வேண்டும்.




நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

Monday, April 14, 2014

யாரைப்பார்த்து நாம் பயம்கொள்ள வேண்டும் ? திருவள்ளுவர் காட்டிடும் வழி இது !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  உட்பகை.


குறள் எண் :-  882.




வாள்போல் பகைவரை அஞ்சற்க 

                                                     அஞ்சுக 

கேள்போல் பகைவர் தொடர்பு... ... ...



விளக்கம் :- வாள் போல வெளியில் 


தெரியும் பகைவர்களைக்கண்டுநாம் 


அஞ்சிடத் தேவையில்லை.ஆனால் 


அதே நேரம் நமது உற்றார்,உறவினர் 


போல நம் கூடவே இருந்துகொண்டு 


பகைவரோடுதொடர்பு கொண்டுள்ள 


உண்மைப் பகைவர்களைக் கண்டு 


நாம் அஞ்சிடல் மிகஅவசியமானது.         


இது வான் புகழ் திருவள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-           


கருப்புச்சாமி :-  ஏண்டா 


வெள்ளைச்சாமி சவுக்கியமா ?


வெள்ளை:- சவுக்கியத்துக்கு என்ன 


அண்ணே குறைச்சல். தேர்தல்வருது 


இல்ல. சும்மா அல்லா 


கட்சிக்காரங்களும் பணத்தை 


தண்ணியா செலவுபண்ண 


இருக்கிறப்போ எனக்கு என்ன 


அண்ணே குறைச்சல். சும்மா ராஜா 


மாதிரி ஜம்முனு இருப்பேன் இன்னும் 


ஒரு மாசம் வரைக்கும்.                           


கருப்பு:- அட..இங்கபார்ரா..நம்ம 


அண்ணே வெள்ளைச்சாமிகாட்டுலே 


ஒரே அடைமழைதான் போ..         


வெள்ளை :- என்னா அண்ணே 


திடீர்னு எம்மேல இம்புட்டு கரிசனம் 


சும்மா பொத்துக்கிட்டு வருது. சும்மா 


சொல்லுன்னே.                                         


கருப்பு :- இல்லடா நம்ம இவர்.. 


இருக்கார்ல..இவர்... ஏன்னடா சாமி 


பேர் ஞாபகத்துக்கு வரமாட்டேங்கு. 


ஆம்...நம்ம விசயகாந்து இருக்காரே 


விசயகாந்து ....அவர் இப்ப 


கெட்டுப்போனதுக்கு என்ன 


காரணம்னு நம்ம வள்ளுவர் 


சொல்லிருக்கர்ல அத்த நீ 


படிச்சியால.  


வெள்ளை  :- எதுலன்னே ? 


கருப்பு :- அடபோட முட்டாப்பயலே 


நம்ம மதுரை TRபாலு சார்தான் நம்ம 


மாதிரி முட்டாப் பசங்களுக்காக 


தினசரி ஒரு குறள் எழுதிட்டு 


வர்றாரே அதுலேதாண்டா என் 


டுபுக்கு. 


வெள்ளை  :- ஆமாண்ணேபடிச்சேன். 


ஆனா ஒன்னும் புரியலையே 


அண்ணே. 


கருப்பு:- உனக்கும் உன்னிய மாதிரி 


நம்ம நாட்டுலே இருக்குற ரொம்ப 


பேருக்கு புரிஞ்சிருந்தா ஏண்டா 


நீங்கல்லாம் வந்து ஒரு நடிகைக்கு 


ஒட்டு போட்டு முதலமைச்சர் 


பதவிலே குந்த வச்சு 


இருப்பீங்களாடா தக்குறிப்பயலே ? 


வெள்ளை :- சரிண்ணே அதான் 3 


வருசத்துக்குமுந்தி தப்பு 


பண்ணிட்டோம் இப்ப வர இருக்குற 


பாராளுமன்றத் தேர்தல்ல முத்தமிழ் 


அறிஞர் தலைவர் கலைஞர் அவங்க 


கட்சிக்குத்தானே அண்ணே 


உதயசூரியன் சின்னத்துலே 


முத்திரை குத்தி ஒட்டு 


போடுவோம்னு நேத்தைக்கு 


உன்கிட்ட சொல்டோம்ல.உக்கும். 


பிறவு என்ன செய்யச் சொல்றே ?   


கருப்பு  :- எங்குட்டோ புத்தியா 


புளைச்சுக்கிடீங்கனா சரிதான். 


அவரு நம்ம மதுரை பாலு சார் எழுதி 


இருக்குற குறள் விளக்கத்துலே 


கத்தி வச்சுட்டு இருக்குற எதிரிய 


பாத்து நாம பயப்படா வேணாம். 


நம்ம எதிரியோடு கூட்டு வச்சுக்கினு, 


நம்ம கூடவே குந்திக்கினு, கூடவே 


சாபிட்டுக்கினு, தண்ணி 


அடிச்சுக்கினு, சிகரட் புடுச்சுக்கினு, 


பான்பராக் போட்டுக்கினு, 


இருக்கானுவளே அவனுகளைப் 


பாத்து பயப்படுன்னு வள்ளுவர் 


சொல்லி இருக்கார்டா என் 


புண்ணாக்குப் பயலே . 


வெள்ளை :ஒ..அத்த..சொல்லுதீகளா 


அண்ணே ஆமாண்ணே குறள்ளே 


சொன்ன மாதிரி நம்ம விசயகாந்து 


நடந்து இருந்தார்ன்னு சொன்னா 


துரோகிப்பய பண்ருட்டி 


ராமச்சந்திரன் கட்சியை இந்தமாதிரி 


காட்டிகொடுத்து இருப்பானா இல்ல 


ஏழு,எட்டு M.L.A.க்களை அந்தஅம்மா 


கட்சிக்கு கூட்டிப்போயி ...ய 


காம்பிக்க ஏற்பாடு செஞ்சிருப்பானா? 


எல்லாம் நம்பி மோசம் 


போயிட்டாருல்ல நம்ம விசயகாந்து. 


அத்த சொன்னேன். சரிடா தம்பி 


எனக்கு வயத்துக்கு சரியில்லே 


நேத்து ராவுலே 15 புரோட்டா 


துண்டது ஒரே கடபுடன்னு 


இருக்குலே வயறு. அப்டியே போயி 


கம்மாக்கரைபக்கம் ஓரமா 


ஒக்காந்து இறக்கிவச்சா கொஞ்சம் 


பாரம் குறையும். வரட்டாலே. 


கருப்பு:- ஆமா அண்ணே எனக்கும் 


கடபுடா கேஸ்தான். நானும் உன்கூட 


வரட்டாண்ணே. 


வெள்ளை :- ஏலே எங்க நைனா 


இன்னா சொல்லிருக்கார்ன்னு 


உனக்குதெரியுமாலே..தெரியாது..எப்


படி தெரியும்..சொல்றேன்... நல்லா 


கேட்டுக்க. கொல்லைக்குப் 


போனாலும் கூட்டு உதவாதுன்னு 


இப்ப புரியுதா நம்ம தம்பி 


தங்கக்கம்பி விசயகாந்து ஏன் 


கெட்டுப்போனார்னு. வரட்டாடா 


தம்பி.                                                       


கருப்பு :- சரிண்ணே நானும் வாறன். 


நீ தெக்காலே போயி குந்து  நான் 


வடக்காலே போயி குந்துறேன். 


பை...சீரியோ...                      


இத்துடன் நமது நாட்டு நடப்பு 


விளக்கம் நிறைவு பெறுகிறது.             


நன்றி !! வணக்கம் !!                             


அன்புடன் மதுரை T.R.பாலு. 

Sunday, April 13, 2014

இல்வாழ்க்கை !! அது எதற்குச் சமமானது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  இல்வாழ்க்கை.



குறள் எண் :-  5௦.




வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் 

                                                           வானுறையும் 


தெய்வத்துள் வைக்கப் படும்... ... ... ... ...   



விளக்கம் :-  பூமியில் வாழ வேண்டிய முறைப்படி 


வாழ்ந்துவரும்ஒருவன்,தேவலோகத்தில்வாழும் 


தெய்வத்தை போல் என்னத்தக்கவன் ஆவான்.


இது திருவள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



Monday, April 7, 2014

உயிர்களைக் கொல்லாதே !! திருவள்ளுவர் தரும் அறிவுரை !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  புலால் மறுத்தல்.


குறள் எண் :-  26௦.


கொல்லான் புலாலைமறுத்தானைக் 

                                                          கைகூப்பி 

எல்லா உயிர்களும் தொழும்... ... ... 


விளக்கம் :-  ஒரு உயிரைக்கூட 


கொள்ளாமல், 


புலால் உண்ணாமல் வாழ்கின்ற 


ஒருவனை உலகத்தில் உள்ளஎல்லா 


உயிர்களும் கைகூப்பி 


வணங்கும்.  இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிய திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.                     


நன்றி !! வணக்கம் !!                             


அன்புடன் மதுரை T.R. பாலு.

Sunday, April 6, 2014

பிறர் மனையை (மனைவியை) பார்க்காதே !! திருவள்ளுவர் தரும் சான்றிதழ்.!!






பிறர் மனையை (மனைவியை) 


பார்க்காதே !! திருவள்ளுவர் தரும் 


சான்றிதழ்.!!




தினம் ஒரு திருக்குறள்.                       




அதிகாரம்:-பிறனில் விழையாமை .



குறள்எண் :-  149. 



அனைவருக்கும் வணக்கம். இன்று 



நான் உங்கள் சிந்தனைக்கு தரும் 



குறளும் அதன் விளக்கமும் 




என்னவென்றால்:-




நலக்குரியார் யாரெனின் நாம 


                                            நீர்வைப்பின் 



பிறர்குரியாள் தோள் தோயாதார்.. .. 



 

எவ்வளவு அர்த்தம் உள்ளடக்கிய 





குறள் இது! மனிதன் இப்படித்தான் 





வாழ வேண்டும் என்ற தத்துவத்தை 




உணர்த்தும் குறள்மேலேசொன்னது. 




அதாவது இதன் விளக்கம் 




என்னவென்றால் கடலால் 





சூழப்பட்ட இந்த உலகத்தில் வாழும் 




மனிதர்களுள் உண்மையில் 




நல்லவர் யார் என்று கேட்டால் 






அடுத்த நபருக்கு உரிய பெண்ணை 






எவர் ஒருவர் 






மெய்யாலும்மனதாலும்கையாலும்






அவளது தோள்களை தொடாமல் 






இருக்கிறாரோ அவரே அகிலம் 






புகழும் உத்தமர் என்று வள்ளுவர் 






கூறியுள்ளபடி வாழ்ந்திடுவோம்!






மீண்டும் நாளை வேறொரு குறள் 






விளக்கத்தில் 




சந்திப்போமா நேயர்களே!





நன்றி!வணக்கம்!! 





அன்புடன். மதுரை T.R.பாலு.

நமக்கு கெடுதல் செய்தவற்கும் நன்ன்மையையே செய்திட வேண்டும் !! திருவள்ளுவர் காட்டும் வழி இது !!







                     தினம் ஒரு திருக்குறள்.           



அதிகாரம்  :-  இன்னா செய்யாமை.



குறள் எண்:-  314.                                          


இன்னாசெய் தாரை ஒருத்தல் 

                                                       அவர்நாண நன்னயம் செய்து விடல்... ... ... ... ... ...   



விளக்கம் :-  நமக்கு தீங்கு செய்த 


ஒருவரைத் தண்டித்தல், தீங்கு 


செய்த அவரே வெட்கப்படும்படியாக 


அவருக்கு நல்லது செய்துவிட்டு, 


அவர் நமக்கு செய்த தீங்கினையும், 


நாம் அவருக்குச் செய்த நன்மை 


இவை இரண்டினையும் மறந்து 


விடுவதே ஆகும். 



இது அய்யன் திருவள்ளுவர் 


நமக்கு அருளிய திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.                       



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-               


இந்தக் குறளுக்கு, இன்றையதினம் 


மிகச்சிறந்த உதாரணமாக இந்த 


செந்தமிழ் நாட்டினிலே முத்தமிழ் 


அறிஞர் கலைஞர் அவர்களை 


விடுத்து வேறு யார் இருக்கிறார்கள்?


அவருக்கு அம்மையார் அவர்கள் 


செய்த தீங்குகள் 


கணக்கிலடங்காதது. 2௦௦1ம் ஆண்டு 


அம்மையார் அவர்கள் 


முதலமைச்சராகப் 


பொறுப்பேற்றவுடன் செய்த முதல் 


காரியம் என்ன தெரியுமா 


அன்பர்களே !! தோழியர் 


சசிகலாவின் துர்போதனை கேட்டு 


சென்னையில் போக்குவரத்து 


சிக்கலை தீர்த்திட வேண்டி 


பதினான்கு இடங்களில் மேல்பாலம் 


கட்டியதால் சென்னைவாழ் மக்கள் 


நிம்மதி அடைந்தனர். ஆனால்இவை 


அனைத்தும் தெரிந்தும் தெரியாதது 


போல கலைஞர்  மேம்பாலம் 


கட்டியதில் ஊழல் என்று ஒரு பொய் 


வழக்கு பதிவு செய்து நடு இரவில் 


காவல்துறையே அவரது வீட்டின் 


பூட்டியபூட்டைஉடைத்து (திருடர்கள் 


செய்திடும் வேலையை இங்கே 


காவலர்கள் செய்து உள்ளனர்) 


அவ்வளவு பெரிய வயதுஉள்ளவரை 


குண்டு கட்டாகத் தூக்கிக்கொண்டு 


வந்து நடுரோட்டில் வீசியகொடுமை, 


இதை விட வேறு என்ன தீங்கு 


செய்திட முடியும். அப்படி செய்து 


இருந்தாலும்கூட 2௦௦6 ம் ஆண்டு 


அடுத்து முதல்வர் பதவி 


ஏற்றுக்கொண்ட தலைவர் கலைஞர் 


அவர்கள் இந்த சம்பவம், அது தந்த 


விழுப்புண்கள், இது எதனையும் 


நினைவினில் கொள்ளாமல், 


எதிர்கட்சித் தலைவருக்குத் 


தேவையான பூனைப்படை 


பாதுகாப்புத் தந்து அம்மையார் 


அவர்களுக்கு துளியும் எதிரிகளிடம் 


இருந்து எந்தவிதமான பாதிப்பும் 


வந்துவிடாமல் கண்ணின் 


மணிபோல பாதுகாத்து நன்மையே 


புரிந்தார் தலைவர் கலைஞர் 


அவர்கள். இவர்தான் வள்ளுவர் வழி 


நடந்திடும் உண்மைத் தமிழ் இனத் 


தலைவர் ஆவார். 



வாழ்க அவர்  புகழ் வாழ்க !!



கார் உள்ளளவும், கடல் நீர் 


உள்ளளவும், வான் உள்ளளவும், 


வான் நிலவு உள்ளளவு வரையிலும் 


பல்லாண்டு பல்லாண்டு பல 


நூறாண்டுகள் வாழியவே!!                   



நன்றி !! வணக்கம் !!                                   


அன்புடன் மதுரை T.R. பாலு.