Sunday, April 6, 2014

நமக்கு கெடுதல் செய்தவற்கும் நன்ன்மையையே செய்திட வேண்டும் !! திருவள்ளுவர் காட்டும் வழி இது !!







                     தினம் ஒரு திருக்குறள்.           



அதிகாரம்  :-  இன்னா செய்யாமை.



குறள் எண்:-  314.                                          


இன்னாசெய் தாரை ஒருத்தல் 

                                                       அவர்நாண நன்னயம் செய்து விடல்... ... ... ... ... ...   



விளக்கம் :-  நமக்கு தீங்கு செய்த 


ஒருவரைத் தண்டித்தல், தீங்கு 


செய்த அவரே வெட்கப்படும்படியாக 


அவருக்கு நல்லது செய்துவிட்டு, 


அவர் நமக்கு செய்த தீங்கினையும், 


நாம் அவருக்குச் செய்த நன்மை 


இவை இரண்டினையும் மறந்து 


விடுவதே ஆகும். 



இது அய்யன் திருவள்ளுவர் 


நமக்கு அருளிய திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.                       



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-               


இந்தக் குறளுக்கு, இன்றையதினம் 


மிகச்சிறந்த உதாரணமாக இந்த 


செந்தமிழ் நாட்டினிலே முத்தமிழ் 


அறிஞர் கலைஞர் அவர்களை 


விடுத்து வேறு யார் இருக்கிறார்கள்?


அவருக்கு அம்மையார் அவர்கள் 


செய்த தீங்குகள் 


கணக்கிலடங்காதது. 2௦௦1ம் ஆண்டு 


அம்மையார் அவர்கள் 


முதலமைச்சராகப் 


பொறுப்பேற்றவுடன் செய்த முதல் 


காரியம் என்ன தெரியுமா 


அன்பர்களே !! தோழியர் 


சசிகலாவின் துர்போதனை கேட்டு 


சென்னையில் போக்குவரத்து 


சிக்கலை தீர்த்திட வேண்டி 


பதினான்கு இடங்களில் மேல்பாலம் 


கட்டியதால் சென்னைவாழ் மக்கள் 


நிம்மதி அடைந்தனர். ஆனால்இவை 


அனைத்தும் தெரிந்தும் தெரியாதது 


போல கலைஞர்  மேம்பாலம் 


கட்டியதில் ஊழல் என்று ஒரு பொய் 


வழக்கு பதிவு செய்து நடு இரவில் 


காவல்துறையே அவரது வீட்டின் 


பூட்டியபூட்டைஉடைத்து (திருடர்கள் 


செய்திடும் வேலையை இங்கே 


காவலர்கள் செய்து உள்ளனர்) 


அவ்வளவு பெரிய வயதுஉள்ளவரை 


குண்டு கட்டாகத் தூக்கிக்கொண்டு 


வந்து நடுரோட்டில் வீசியகொடுமை, 


இதை விட வேறு என்ன தீங்கு 


செய்திட முடியும். அப்படி செய்து 


இருந்தாலும்கூட 2௦௦6 ம் ஆண்டு 


அடுத்து முதல்வர் பதவி 


ஏற்றுக்கொண்ட தலைவர் கலைஞர் 


அவர்கள் இந்த சம்பவம், அது தந்த 


விழுப்புண்கள், இது எதனையும் 


நினைவினில் கொள்ளாமல், 


எதிர்கட்சித் தலைவருக்குத் 


தேவையான பூனைப்படை 


பாதுகாப்புத் தந்து அம்மையார் 


அவர்களுக்கு துளியும் எதிரிகளிடம் 


இருந்து எந்தவிதமான பாதிப்பும் 


வந்துவிடாமல் கண்ணின் 


மணிபோல பாதுகாத்து நன்மையே 


புரிந்தார் தலைவர் கலைஞர் 


அவர்கள். இவர்தான் வள்ளுவர் வழி 


நடந்திடும் உண்மைத் தமிழ் இனத் 


தலைவர் ஆவார். 



வாழ்க அவர்  புகழ் வாழ்க !!



கார் உள்ளளவும், கடல் நீர் 


உள்ளளவும், வான் உள்ளளவும், 


வான் நிலவு உள்ளளவு வரையிலும் 


பல்லாண்டு பல்லாண்டு பல 


நூறாண்டுகள் வாழியவே!!                   



நன்றி !! வணக்கம் !!                                   


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment