Friday, April 25, 2014

ஆழி சூழ்ந்த இவ்வுலகில் உலகமகாபாவி என்பவன் யார் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  பிறனில் விழையாமை.



குறள் எண் :-  142.



அறன்கடை நின்றாருள் எல்லாம் 


                                                பிறன்கடை 


நின்றாரின் பேதையார் இல்... ... ...         



விளக்கம் :-  பிறருடைய 


மனைவிக்காக அவளது இல்லத்தின் 


முன்பாக, அவளிடம் தேகசுகம் 


வேண்டி காத்துக்கிடப்பவனே 


பாவிகளுள் மகாபாவியாவன்.         


இது வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.                                                           



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-           


கந்தையா :-  டேய் இராமையா 


உனக்கு சேதி தெரியுமாடா ?                 


இராமையா :-  என்னடா சொல்லு. 


சொன்னாத்தானே சேதி தெரியும்.   


கந்த:-  நம்ம பாலையா இருக்கானே 


அந்தப் பய, அவன் வீட்டுக்கு 


எதிர்வீட்டிலே குடியிருக்கிற நம்ம 


பயில்வான்புண்ணியகோடியின்   


பொண்டாட்டி, இருக்காளே குமுதா, 


அவளைத் தானும் விரும்புவதாகச் 


சொல்லிஅவளோட கையப் புடிச்சு 


இழுத்துஇருக்கானாம். அவளோட  


வீட்டுக்கே போயி நின்னு..         


இராமை:- உம் !! அப்புறம் !!                       


கந்த:-  அப்புறம் என்ன அப்புறம். 


உடனே அவ புருசன் பயில்வான் 


புண்ணியகோடிகிட்டே ஓடிப்போயி 


இப்படி இப்படி விசயம்னு 


சொல்லிபுட்டாடா. உடனே அவன் 


நம்ம பாலையாவை மரத்துலே கட்டி 


வச்ச உரி உரின்னு தோலை உரிச்சு 


தலைகீழா வச்சு உப்புக்கண்டம் 


போட்டுட்டானாம்.   


இராமை:-  பிறவு ?                                         


கந்த:-  பிறவு என்ன பிறவு. ஊர்கூடி 


அவனோட உச்சந்தலையிலே பச்ச 


குத்திட்டானுங்கடா !! 


பச்சைகுத்திட்டானுங்கடா !!அவனது 


நெத்தியிலேயும் அதோடகூட சேத்து 


இராமை :-  என்னனு பச்சை குத்தி 


இருக்கானுங்க?                                             


கந்த:- " உலக மகாபாவி "  என்று 


இவனுக்கு பட்டம்வேற 


தந்துட்டானுங்க.                                         


இராமை:-   எல்லாம் தலை எழுத்து 


யாரும் அழிக்க முடியாது. அது ஏன் !!


அதை எழுதிய பிரம்மதேவன்கூட 


அதை அழிக்க முடியாது.சரிடா நான் 


போயிட்டு வாரேன்.அப்புறம் 


சந்திக்கிறேன்.                                               



நன்றி !! வணக்கம் !!                               



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment