Sunday, April 20, 2014

அமைச்சர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ? வ்ள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :- அமைச்சு.


குறள் எண் :-  638.



அறிகொன்று அறியான் எனினும் உறுதி 


உழையிருந்தான் கூறல் கடன்... ... ... 



விளக்கம் :-  அறிவுரை சொல்வாரின் 


அறிவுரையையும்கேளாமல் அழித்து, தானும் 


அறியாதவனாக, ஒரு அரசன் இருந்தாலும், 


அமைச்சர்,அரசனுக்கு,உறுதியானவற்றை 


எடுத்துக்கூறுதல் ஒரு நல்ல அமைச்சரின் 


தலையாயகடமையாகும்.  



இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 



சென்ற குறளும், அதன் விளக்கமும் ஆகும்.





நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


இந்த குறளுக்கு உதாரணம் சொல்வதென்றால் 


அதற்கு மாண்பு மிகு தமிழக முதலமைச்சர் 


அம்மையார் அவர்களை விட்டால், அகிலம் 


முழுதும் தேடினாலும் வேறு யாரும் கிடைக்கவே


மாட்டார்கள் என்பது கல்லிலே பொறித்த ஒரு 


சொல்லே ஆகும்.அவர்களுக்கு என்று சுயமாக 


சிந்தித்து, மக்களுக்கு நல்லது செய்திடும் 


திட்டங்களை தேர்ந்தெடுக்கும் ஆற்றலும் 


இல்லை.மாண்புமிகு அம்மையார் அவர்களுக்கு 


அறிவுரை, ஆலோசனை, இவைகளைச் சொல்லி 


அறவழி நடந்திடச் செய்திடும் அறிவு உள்ள 


அமைச்சர்களும் எவரும் இல்லை. எல்லா 


அமைச்சர்களும் தலையாட்டி 


பொம்மைகளாகவும், தலை வணங்கும் 


அடிமைகளாகவும் இருப்பதுதான் நம் 


தமிழகத்தின் தலை எழுத்து. ஆண்டவன்தான் 


இந்த நாட்டைக் காப்பாற்றிட வேண்டும்.




நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment