Monday, April 14, 2014

யாரைப்பார்த்து நாம் பயம்கொள்ள வேண்டும் ? திருவள்ளுவர் காட்டிடும் வழி இது !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  உட்பகை.


குறள் எண் :-  882.




வாள்போல் பகைவரை அஞ்சற்க 

                                                     அஞ்சுக 

கேள்போல் பகைவர் தொடர்பு... ... ...



விளக்கம் :- வாள் போல வெளியில் 


தெரியும் பகைவர்களைக்கண்டுநாம் 


அஞ்சிடத் தேவையில்லை.ஆனால் 


அதே நேரம் நமது உற்றார்,உறவினர் 


போல நம் கூடவே இருந்துகொண்டு 


பகைவரோடுதொடர்பு கொண்டுள்ள 


உண்மைப் பகைவர்களைக் கண்டு 


நாம் அஞ்சிடல் மிகஅவசியமானது.         


இது வான் புகழ் திருவள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-           


கருப்புச்சாமி :-  ஏண்டா 


வெள்ளைச்சாமி சவுக்கியமா ?


வெள்ளை:- சவுக்கியத்துக்கு என்ன 


அண்ணே குறைச்சல். தேர்தல்வருது 


இல்ல. சும்மா அல்லா 


கட்சிக்காரங்களும் பணத்தை 


தண்ணியா செலவுபண்ண 


இருக்கிறப்போ எனக்கு என்ன 


அண்ணே குறைச்சல். சும்மா ராஜா 


மாதிரி ஜம்முனு இருப்பேன் இன்னும் 


ஒரு மாசம் வரைக்கும்.                           


கருப்பு:- அட..இங்கபார்ரா..நம்ம 


அண்ணே வெள்ளைச்சாமிகாட்டுலே 


ஒரே அடைமழைதான் போ..         


வெள்ளை :- என்னா அண்ணே 


திடீர்னு எம்மேல இம்புட்டு கரிசனம் 


சும்மா பொத்துக்கிட்டு வருது. சும்மா 


சொல்லுன்னே.                                         


கருப்பு :- இல்லடா நம்ம இவர்.. 


இருக்கார்ல..இவர்... ஏன்னடா சாமி 


பேர் ஞாபகத்துக்கு வரமாட்டேங்கு. 


ஆம்...நம்ம விசயகாந்து இருக்காரே 


விசயகாந்து ....அவர் இப்ப 


கெட்டுப்போனதுக்கு என்ன 


காரணம்னு நம்ம வள்ளுவர் 


சொல்லிருக்கர்ல அத்த நீ 


படிச்சியால.  


வெள்ளை  :- எதுலன்னே ? 


கருப்பு :- அடபோட முட்டாப்பயலே 


நம்ம மதுரை TRபாலு சார்தான் நம்ம 


மாதிரி முட்டாப் பசங்களுக்காக 


தினசரி ஒரு குறள் எழுதிட்டு 


வர்றாரே அதுலேதாண்டா என் 


டுபுக்கு. 


வெள்ளை  :- ஆமாண்ணேபடிச்சேன். 


ஆனா ஒன்னும் புரியலையே 


அண்ணே. 


கருப்பு:- உனக்கும் உன்னிய மாதிரி 


நம்ம நாட்டுலே இருக்குற ரொம்ப 


பேருக்கு புரிஞ்சிருந்தா ஏண்டா 


நீங்கல்லாம் வந்து ஒரு நடிகைக்கு 


ஒட்டு போட்டு முதலமைச்சர் 


பதவிலே குந்த வச்சு 


இருப்பீங்களாடா தக்குறிப்பயலே ? 


வெள்ளை :- சரிண்ணே அதான் 3 


வருசத்துக்குமுந்தி தப்பு 


பண்ணிட்டோம் இப்ப வர இருக்குற 


பாராளுமன்றத் தேர்தல்ல முத்தமிழ் 


அறிஞர் தலைவர் கலைஞர் அவங்க 


கட்சிக்குத்தானே அண்ணே 


உதயசூரியன் சின்னத்துலே 


முத்திரை குத்தி ஒட்டு 


போடுவோம்னு நேத்தைக்கு 


உன்கிட்ட சொல்டோம்ல.உக்கும். 


பிறவு என்ன செய்யச் சொல்றே ?   


கருப்பு  :- எங்குட்டோ புத்தியா 


புளைச்சுக்கிடீங்கனா சரிதான். 


அவரு நம்ம மதுரை பாலு சார் எழுதி 


இருக்குற குறள் விளக்கத்துலே 


கத்தி வச்சுட்டு இருக்குற எதிரிய 


பாத்து நாம பயப்படா வேணாம். 


நம்ம எதிரியோடு கூட்டு வச்சுக்கினு, 


நம்ம கூடவே குந்திக்கினு, கூடவே 


சாபிட்டுக்கினு, தண்ணி 


அடிச்சுக்கினு, சிகரட் புடுச்சுக்கினு, 


பான்பராக் போட்டுக்கினு, 


இருக்கானுவளே அவனுகளைப் 


பாத்து பயப்படுன்னு வள்ளுவர் 


சொல்லி இருக்கார்டா என் 


புண்ணாக்குப் பயலே . 


வெள்ளை :ஒ..அத்த..சொல்லுதீகளா 


அண்ணே ஆமாண்ணே குறள்ளே 


சொன்ன மாதிரி நம்ம விசயகாந்து 


நடந்து இருந்தார்ன்னு சொன்னா 


துரோகிப்பய பண்ருட்டி 


ராமச்சந்திரன் கட்சியை இந்தமாதிரி 


காட்டிகொடுத்து இருப்பானா இல்ல 


ஏழு,எட்டு M.L.A.க்களை அந்தஅம்மா 


கட்சிக்கு கூட்டிப்போயி ...ய 


காம்பிக்க ஏற்பாடு செஞ்சிருப்பானா? 


எல்லாம் நம்பி மோசம் 


போயிட்டாருல்ல நம்ம விசயகாந்து. 


அத்த சொன்னேன். சரிடா தம்பி 


எனக்கு வயத்துக்கு சரியில்லே 


நேத்து ராவுலே 15 புரோட்டா 


துண்டது ஒரே கடபுடன்னு 


இருக்குலே வயறு. அப்டியே போயி 


கம்மாக்கரைபக்கம் ஓரமா 


ஒக்காந்து இறக்கிவச்சா கொஞ்சம் 


பாரம் குறையும். வரட்டாலே. 


கருப்பு:- ஆமா அண்ணே எனக்கும் 


கடபுடா கேஸ்தான். நானும் உன்கூட 


வரட்டாண்ணே. 


வெள்ளை :- ஏலே எங்க நைனா 


இன்னா சொல்லிருக்கார்ன்னு 


உனக்குதெரியுமாலே..தெரியாது..எப்


படி தெரியும்..சொல்றேன்... நல்லா 


கேட்டுக்க. கொல்லைக்குப் 


போனாலும் கூட்டு உதவாதுன்னு 


இப்ப புரியுதா நம்ம தம்பி 


தங்கக்கம்பி விசயகாந்து ஏன் 


கெட்டுப்போனார்னு. வரட்டாடா 


தம்பி.                                                       


கருப்பு :- சரிண்ணே நானும் வாறன். 


நீ தெக்காலே போயி குந்து  நான் 


வடக்காலே போயி குந்துறேன். 


பை...சீரியோ...                      


இத்துடன் நமது நாட்டு நடப்பு 


விளக்கம் நிறைவு பெறுகிறது.             


நன்றி !! வணக்கம் !!                             


அன்புடன் மதுரை T.R.பாலு. 

No comments:

Post a Comment