Friday, May 9, 2014

காலம் அறிந்து செயல்படுபவர் எப்படி பொறுமையாக இருப்பார்கள்--வள்ளுவர் தரும் விளக்கம் !!




தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  காலம் அறிதல். 


குறள் எண் :- 486.
 


ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பெருந் தகைத்து... ... ... ...
 


விளக்கம் :-   ஊக்கம் மிகுந்தவன்


 (காலத்தை எதிர்பார்த்து) அடங்கி இருத்தல்


 என்பது, போர் புரியும் ஆட்டிகடா, தனது


 பகையைத் தாக்குவதற்காகப் பின்னே 


கால் வாங்குதலைப் போன்றது ஆகும். இது 


வான்புகழ்வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும். நமது 


நாட்டு நடப்பு விளக்கம் :-

லிங்கப்பா :- வாடா கண்ணுச்சாமி என்ன

சவுக்கியமா இருக்கியாடா ? கண்ணு:-  


ஆமாங்க அண்ணே லிங்கப்பா !! நான் 


சவுக்கியம். நீங்க சவுக்கியமா ?

சொல்லுங்க அண்ணே !!                         


லிங்க:- ஏண்டா தம்பி !! இன்னைக்கு நம்ம 


மதுரை TR.பாலு சார் எழுதி இருக்கிற 


தினம் ஒரு திருக்குறள் படிச்சியாலே !!         


கண்ணு :-  ஆமா படிச்சேன் அண்ணே. அதுக்கு 


உதாரணமா நம்ம தமிழ் நாட்டிலே யாரை 


சொல்லலாம்னு யோசிச்சுக்கினு இருக்கேன். 


லிங்க :-  ஏண்டா கைப்புண்ணுக்கு என்ன 


கண்ணாடியாலே வேணும் ? இதுக்கு 


உதாரணமா நம்ம தமிழ் இனத் தலைவர் 


முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைத்தவிர 


வேறு யாரைலே சொல்ல முடியும். அவர்தான் 


தனக்கு உள்ள அத்தனை எதிர்ப்புகளையும் 


தனது நெஞ்சினில் தாங்கிக்கொண்டு 


எதிரிகளை சந்திப்பதற்கு இப்போது அமைதி 


காத்துக்கொண்டு இருப்பதுதான் அந்தக் 


குறளின் நிலையான ஆட்டுக்கடா பின்னோக்கி 


செல்வதற்கு இணையானது. என்ன சரியாலே 


நான் சொல்றது ?                               


கண்ணு :-  அண்ணே ரொம்பச் சரியாகச் 


சொன்னீங்க அண்ணே. அண்ணே தினசரிநம்ம 


மதுரை T.R.பாலு சார் எழுதுற அந்த தினம்ஒரு 


திருக்குறள் படிச்சாத்தான் அன்னைக்கு நமக்கு 


பொழுது விடிஞ்சாப்புல இருக்கு அண்ணே. 


சரிங்க அண்ணே நான் போயிட்டு வாறன். 


நன்றி !! வணக்கம் !!                               


அன்புடன். மதுரை T.R.பாலு.

1 comment:

  1. அய்யா..உங்க பணி தொடரட்டும்..வாழ்த்துக்கள்

    ReplyDelete