Sunday, May 25, 2014

சிறந்த மனைவி என்பவள் எப்படி இருந்திட வேண்டும் ? திருவள்ளுவர் கூறும் அறிவுரை !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  வாழ்க்கைத் துணைநலம்.

குறள் எண் :-  51


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் 

                                                                         கொண்டான் 

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை... ... ... ... ... ... ...


விளக்கம் :- 


குடும்பத்திற்கு ஏற்றபண்புடையவளாகவும் 


கணவனது வருவாய் அறிந்து வாழ்க்கை 


நடத்துபவளாகவும்இருப்பவளே சிறந்த மனைவி 


ஆவாள். இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.


நமது நட்டு நடப்பு விளக்கம் :-


போக்குவரத்து நெரிசலின்தாயாகவிளங்கிவரும் 


மாநிலத் தலைநகர் சென்னையில் வசித்துவரும் 


ஒருசிறியகுடும்பத்தைப்பற்றியசெய்தித்தொகுப்பு 


இப்போதுநீங்கள்நேரலையில்காணபோகிறீர்கள்.


திருஞானம் :- ( இவர் ஒருபட்டமேற்படிப்புமுடித்து 


சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி 


ஒன்றினில் ஆங்கிலத்துறைவிரிவுரையாளராகப் 


பணிபுரியும்நல்ல மனிதர். இவரதுமனைவிபெயர் 


வடிவுக்கரசி.  வீட்டினை நிர்வகிக்கு மனைவி. 


நல்லமாதரசி.கற்புக்கரசி.சென்னை மாநகரில் 


இதுபோல பெண், லட்சத்தில் ஒன்றுதான் 


நாம் காண இயலும்.)



திருஞானம் :-  வடிவு..வடிவு.. எங்கம்மா 


போயிட்டே ?


வடிவு:- இதோ வந்துட்டேங்க. என்னங்க ?


திரு:-  நமக்குக் கல்யாணம் நடந்து இன்றோடு 


மூன்று மாதம் முடிவடைந்துவிட்டது.  கொஞ்சம் 


தாமதமான திருமணம்தான்நம்இருவருக்கும்.


எனக்கு நாற்பது உனக்கு 36. உம்... என்னோட 


மூணு தங்கைகளையும் கரைசேர்த்ததற்குப் 


பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்வேன் 


என்ற எனது வைராக்கியத்தால் வந்தது 


இந்தத் தாமதித்த திருமணம். வாங்குற சம்பளம் 


அதில் பாதிக்குமேல் தங்கைகளின் திருமணக் 


கடனுக்கும் வட்டிக்கும் கட்டவே சரியாப் 


போயிருது. மீதியை வச்சுத்தான் நாம இந்த 


சென்னையில் வாழ்ந்திட வேண்டியுள்ளது. 


இன்னைக்குதேதி21.என்னோட மோட்டார்


சைக்கிளுக்கு இன்னைக்கு சாலைவரியும் 


இன்சூரன்ஸ் பணமும் கட்டியாக வேண்டும். 


என்கிட்டே பணம் எதுவும் இல்லை. உன்ட்ட 


எதாவது பணம் நீ சேர்த்து வச்சு இருக்கியா 


வடிவு. கேக்கவே எனக்கு சங்கடமாகத்தான் 


இருக்கு. நானே உனக்கு அளந்து அளந்துதான் 


பணம் தாரேன் குடும்பச் செலவுக்கு.


அப்படி இருக்கும்போது உன்கிட்டே எப்படி பணம் 


இருக்க முடியும். பேசாம வண்டிய வித்துவிட 


வேண்டியதுதான்.


வடிவு :- ஏங்க..நீங்க இப்படி பிரிச்சுப் பேசுறீங்க.


நீங்க வேற, நான் வேறா ? என்ட்ட கேக்காமல் 


வேறு யார்கிட்டே நீங்க கேப்பீங்க. ஆமா இந்த 


ரெண்டுக்கும் சேத்து எவ்வளவு தேவைப்படும் ?


திரு:- ஒரு நாலாயிரம் ரூபாய் இருந்தா அதுவே


போதும் வடிவு. ஆமா..உன்கிட்டே ஏது அவ்வளவு 


பணம் ?.


வடிவு :- நீங்க கொடுக்கிற பணத்துலே கொஞ்சம் 


கொஞ்சமா சேத்துவச்சிருக்கேங்க. இந்தாங்க 


5,௦௦௦ ரூபாய். இப்பதைக்கு இத வச்சு செலவு 


பண்ணுங்க. வர்ற 1௦ம் தேதி சீட்டுப்பணம்எனக்கு 


1௦,௦௦௦ வரும் அத வச்சு சிக்கனமா செலவு செய்து 


நாம சந்தோஷமா குடும்பம் நடத்துவோமாங்க.


என்னங்க..நான் பாட்டுக்குப் பேசிட்டே 


இருக்கேன்.


திரு :- வடிவு. என்ன பேசச் சொல்லுறே என்னால 


என்ன பேச முடியும் ? எல்லாம் நான் செய்த பூர்வ 


புண்ணியம்தான் நீ எனக்கு இல்லத்தரசியாவந்து 


சேர்ந்தது. திருவள்ளுவர் சொன்ன மாதிரி நீ ஒரு 


சிறந்த மனைவியே.அதில் சந்தேகமே இல்லை.


முதல்லஉன்கையகொடு.அதைக்காலாநினைச்சு 


நான் கும்பிட்டுக்கிறேன்.


வடிவு : -ஏங்க.. பெரிய பெரிய வார்த்தை எல்லாம் 


பேசிகிட்டு. சீக்கிரம் ஆபீஸ் போயிட்டு வாங்க. 


நாளைசனிக்கிழமை நாம் வரதராஜப்பெருமாள் 


சந்நிதானம் போயி அவரை சேவிச்சுட்டு வந்தா 


எப்போதும் நம்ம குடும்பம் செழிப்பாகவே 


இருக்கும்.என்னங்க. நான் சொல்றது சரியா ?



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது. மீண்டும் அடுத்த பதிவினில் நாம் 


சந்திப்போம்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை T.R. பாலு,

No comments:

Post a Comment