Monday, May 12, 2014

நமக்கு கெடுதல் செய்த ஒருவரை எப்படி நாம் தண்டிக்க வேண்டும் ? வள்ளுவர் காட்டும் வழி !!






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  இன்னா செய்யாமை .


குறள் எண் :-  314.



இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர்நாண 


நன்னயம் செய்து விடல்... ... ... ... ... ... ...


விளக்கம் :-  தனக்குத் துன்பம் செய்த ஒருவரை 


தண்டித்தல் என்பது எவ்வாறு என்றால் நமக்குத் 


துன்பம் செய்தவரே நாணும்படியாக அவருக்கு 


நாம் ஒரு நல்லதை செய்தபின் அவர் செய்த 


கெடுதலையும் அவருக்கு செய்த நன்மையையும் 


இவை இரண்டையும் மறந்து விடுதலே ஆகும்.


இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :- (நேரலையில்)



அய்யனார் :-  தம்பிபீதாம்பரம்.என்னஇருந்தாலும் 


நம்ம பாலுத்தம்பி உண்மையிலேயே ரொம்பப் 


பெரிய மனசுக்காரன்தாண்டா.


பீதாம்பரம் :-  எப்படிட அவ்வளவு சரியாகச் 


சொல்றே. அப்படி பாலு சார் என்ன செஞ்சாரு நீ 


இந்த அளவுக்குப் புகழ்கின்ற மாதிரி ?


அய்யனார் :-  தம்பி பீதாம்பரம் போன மாசம்நம்ம 


பாலுத்தம்பிக்கு பதிவுத் தபால் ஆயுள் காப்பீட்டுக் 


கழகத்திலே இருந்து வந்திருந்தது. அப்ப 


பாலுத்தம்பி தேர்தலில் ஓட்டுபோட அவர் 


மதுரைக்கு போயி இருந்தாரு.


பீதாம்பரம் :- அட...அதுதான் எனக்குத் தெரியுமே !!


அய்யனார் :- அதுக்குஅப்புறம் நடந்தது 


என்னன்னு உனக்கு தெரியுமா ?


பீதாம்பரம் :-  அதாங்க தெரியாது.


அய்யனார் :-  ஆம்.  இப்ப சொல்றேன் 


கேட்டுக்கோ.நம்ம ராமுத் தம்பிதானே இந்தக் 


கெடுதலை பாலுத்தம்பிக்கு செஞ்சது. அப்படி 


இருந்தாலும் நேத்து நம்ம ராமுவுக்கு ஒருபதிவுத் 


தபால் வந்தது. அவர் யார்கிட்டேயோ பண உதவி 


கேட்டது நேத்து செக் பதிவுத் தபாலில் அனுப்பி 


இருக்காரு. நேத்து நம்ம ராமு வேற ஆபீஸ் 


வேலையா ஊருக்குப் போயி இருந்தாரில்ல. 


அதனாலே பாலுத்தம்பி அந்தப் பதிவுத் தபாலை 


இவரே கையெழுத்தை போட்டு அந்தத் தபாலை 


வாங்கி ராமுவோட மேசைமேலே வச்சுருக்காரு 


பாரு. உண்மையிலேயே அவருக்குப்பெரிய 


மனசுதாண்டா. 


பீதாம்பரம் :- அடடா..அடடடா...உண்மையிலேயே 


நம்ம பாலு சார் உயர்ந்த மனுசன்தாம்ப்பா


அய்யனார் :- அதுமட்டும்இல்ல.இன்னைக்குவரை


அவருக்கு ராமுசெஞ்சிருக்கிற கெடுதலையோ, 


அல்லதுஇவர்  செஞ்சிருக்கிறநன்மையையோ 


யாரிடமும் சொல்லிக்காம மவுனமா இருந்தாரு 


பாரு அந்த இடம்தான் நம்ம மதுரை TR பாலு சார் 


இமயத்தின் உசரத்துக்கு 


உயர்ந்துட்டாருப்பா பீதாம்பரம்.


பீதாம்பரம் :- அண்ணே நீங்க சொல்றதுநூத்துக்கு 


நூறு கரெட்டுத்தான் அண்ணே.


அய்யனார் :-  சரிடா தம்பி பீதாம்பரம் எனக்கு 


அடையாறு வரைக்கும் போகனும். நான் வரட்டா.


பீதாம்பரம் :-  சரிண்ணே நானும் தாம்பரம் 


வரைக்கும் போயி என்னோட மாமியாரைப் 


பார்க்கணும். நானும்வரேண்ணே !!

நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை TR பாலு. 




No comments:

Post a Comment