Monday, May 19, 2014

காதுகளால் கேட்கும் திறனே உலகின் மிகப்பெரிய செல்வமாகும் !! வள்ளுவரின் பார்வையில் !!









தினம் ஓரு திருக்குறள் .


அதிகாரம் :-  கேள்வி.

குறள் எண் :-  911.


செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் 

                                                                                அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந்  தலை ... ... ... ...



விளக்கம் :-


செல்வங்களில்செல்வமாவது,காதால்


கேட்டறியும் கேள்விச் செல்வமே 


ஆகும்.அச்செல்வமே,எல்லாச் செல்வங்களிலும் 


முதன்மையானது. இதுதிருவள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற திருக்குறளும்அதன்விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


பூஞ்சோலை. பெயருக்கு ஏற்றபடி பூக்களும், 


பூவின் மலராத மொட்டுக்களும், நிறைந்துள்ள 


ஒரு ஊர் அது. அங்கு  உள்ள எல்லா செடி, 


கொடிகள் எல்லாமே  பூத்துக்குலுங்குகின்ற 


கிராமம் அது. அங்குள்ள கிராம நூலக மன்றம்.  


நேரம் பகல்  11 மணி.


கிராம மக்கள் அமைதியாக, நூல்கள், 


செய்தித்தாள்முதலியவற்றைப் 


படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.


குண்டூசி விழுந்தால் சப்தம் கேட்கும் என்று 


சொன்னால்பார்த்துக்கொள்ளுங்கள்.  அப்போது 


அங்கு வந்து சேர்ந்தனர் அந்த ஊர் பஞ்சாயத்துத் 


தலைவர் புண்ணியகோடி முதலியாரின் இரண்டு 


மகன்கள். ஒருவன் பெயர் பூங்காவனம், மற்று 


ஒருவன் பெயர் புஷ்பவனம். பள்ளிக் கடைசி 


வகுப்புவரைபடித்துஉள்ளனர்.அவர்கள்இருவரும் 


நூலகத்தினுள்நுழைகின்றனர்.அப்போது 


நூலகத்தில் வாசித்துக்கொண்டு இருந்தவர்கள் 


வாய் முணுமுணுக்கிறது. உம்..இனி..நாம படிச்சா 


மாதிரித்தான். அவர்கள் இருவருமே பிறவிச் 


செவிடர்கள்.


பூங்காவனம் :-  ஹ..ஹ..ஹா..ஹா.. (சத்தம் 


போட்டுசிரித்தபடியே)  ஏண்டா தம்பி 


புஷ்பவனம்..எல்லோர்வாயிலும் 


கொழுக்கட்டையாடா வச்சிருக்கானுவ.


கொஞ்சம் கெட்டுச் சொல்றா.                                          


புஷ்பவனம் :- என்ன அண்ணே சொன்னே சரியா 


காதுலே விழலே. கொள்ளிக்கட்டையா 


சொன்னே ?


பொதுநபர்:- உக்கும். விளங்கினமாதிரித்தான்.   


பூங்காவனம் :-  தம்பி.. என்னடா நாம்பாட்டுக்கு 


பேசிட்டே இருக்கேன் நீ ஒண்ணுமே பதில் பேச 


மாட்டேன்னுரே. என்னடா அண்ணே மேலே 


எதுனாச்சும் கோவமாடா ?சொல்றா என் 


பாசக்காரத் தம்பி.                                                                   


புஷ்பவனம் :- இல்ல அண்ணே நீ ஒரு செவிடு 


இல்ல அதான் நாம் பேசுறது எதுமே உன்காதுலே 


விழமாட்டேங்குது.                                                               


பூங்காவனம் :- பாவம்டா தம்பி உன்னையச் 


சொல்லி என்ன செய்ய. நீயோ ஒரு பிறவிச் 


செவிடு. சரி அத்த விடுறா. மணி இப்ப 11.1/2ஆச்சு. 


இன்னைக்கு ஆத்தா என்ன சாப்பாடுன்னு 


சொல்லுச்சா ?


புஷ்பவனம் :- யாரை அண்ணே கேக்குறே ? 


அத்தையைப் பத்தியா ? அவங்க 


நாளைக்குத்தானே சேலத்துலே இருந்து நம்ம 


ஊருக்கு வாராதா அப்பாட்டே போன்லே 


சொல்லுச்சு.                                                                         


பூங்காவனம் :- உன்னைய நினைச்சா எனக்கு 


ரொம்பவே கஷ்டமாத்தான் இருக்குதுடா தம்பி. நீ 


செவிடா இருக்கதாலே நான் என்ன 


சொன்னாலும் உனக்கு புரிய மாட்டேங்குதுடா 


தம்பி.                                                                                               


புஷ்பவனம் :-  புட்டு வேணுமா அண்ணே. நம்ம 


ஆத்தாட்டே சொல்லி சாயங்காலமா செய்யச் 


சொல்லி நாம சாப்புடுவோமா அண்ணே ? 


சொல்லு அண்ணே !! சாப்புடுவோமாண்ணே ?                 

(அப்போது வீட்டில் இவர்கள் இருவரும் 


இல்லாததை பார்த்துட்டு இவனுகளோட அப்பா 


புண்ணியகோடி முதலியாரும் ஆத்தா 


அமுதாவும் நூலகத்துக்கு வந்து சேர்கின்றனர். 


அங்கே புள்ளைங்க ரெண்டுபேரும் 


இருக்கிறதைப் பாத்துட்டு மன நிம்மதி  


அடைகின்றனர்.                                                                                   

புண்ணியகோடி :- ஏண்டி அமுதா. அங்கே 


பாத்தியாடி நாம பெத்துப்போட்ட முத்து 


ரத்தினங்கள் ரெண்டு பேரும் எப்படி பொறுப்பா 


இங்க படிக்க வந்துருக்கானுவ.                                         


அமுதா :-  பருப்பு வடையா ? உம.. போறப்ப நாம் 


வாங்கிக்கலாங்க.                                                               


புண்ணிய:-போலீசு எதுக்குடி நம்ம புள்ளைகளை 


புடிப்பானுங்க. பாவம்டி  அவனுக. வா அமுதா 


சீக்கிரமா அவனுகளை நாம வூட்டுக்கு கூட்டிட்டு 


போயிருவோம்.                                                                     


ஸ்ரீமான் பொதுஜனம்:- அடச்சை...குடும்பமே 


செவுட்டுக் குடும்பம்டா சாமி. இவனுக பேசுற 


பேச்சை இன்னும் கொஞ்சநேரம் நாம 


கேட்டோம்னு வச்சுக்குங்க. அப்புறம் நாமளும் 


செவிடா போயிற வேண்டியதுதான். வாங்க 


அண்ணே பரந்தாமண்ணே சீக்கிரமா இந்த 


இடத்தை வுட்டுட்டு நாம் கிளம்பிறனும். 


இல்லாங்காட்டி இந்த செவிட்டுக் குடும்பத்தைப் 


போல நாமளும் செவிடாயிருவோம் அண்ணே.  


ஆளை விடுங்கடா சாமிகளா !!


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!                                   


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது. மீண்டும் அடுத்த பதிவினில் நாம் 


அனைவரும் சந்திப்போம்.                                         


 நன்றி !! வணக்கம் !!                                                         


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment