Thursday, January 28, 2016

நாட்டின் மன்னன்/ஆளும் தலைமை எப்போது அழிந்துபோகும் ? வள்ளுவர் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :- பெரியாரைத் துணைக்கோடல்.

குறள் எண் :-448.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பா ரிலானுங் கெடும்... ... ... 

பொருள் :-  தான் செய்கின்ற தவறை எடுத்துச் 
சொல்லித் திருத்திடும் பெரியோர்களை/
அறிஞர்களைப் பெற்றிடாத மன்னன்/ஆளும் 
தலைமை, அழிப்பவர்கள் எவருமே இன்றி 
அழிந்துபோவார்கள். இது வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 
விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :- 

அருணகிரி :வாடாதம்பிசோணகிரி.உம்..அப்புறம் 
நேத்து என்ன விசேசம்.
சோணகிரி :- ஏண்ணே !! உனக்கு ஒரு விசயமும் 
நிசம்மா தெரியாதா ? இல்லாங்காட்டி நடிக்கிறியா தெரியாத மாதிரி. இல்ல கேக்கேன்.
அரு:- என்னடா..இது நீ பீடிகை போடுறத பாத்தா 
என்னமோ பெருசா நடந்திருக்கும்போல கீதே.
கொஞ்சம் சொல்றா தம்பி. நானும் அப்பால தெரிஞ்சுக்கிறேன்.
சோணகி:-  அண்ணே துறைமுகம் சட்டமன்ற 
உறுப்பினர் திரு.பழ.கருப்பையா அவுக இருக்காகளே 
அரு :- யாரு பல கட்சிகளுக்கு விஜயம் செஞ்ச அவரா ?சரி. அவருக்கென்ன இப்ப ?
சோண :- அவருக்கு என்னவா ? அண்ணே நேத்து அவரு சும்மா நாட்டையே கலக்கிப்புட்டாருல்ல.
அரு :- என்னடா கலக்கினாரு.
சோணகி:-  அண்ணே. அவரு காரைக்குடிக்காரர்.
நல்ல பாரம்பரியம் மிகுந்த குடும்பம் அவரது.
உழைச்சு பணக்காரர் ஆன பரம்பரை அவருக்கு.
இந்த ஆட்சியிலே நடக்குற அவலங்களை தலைமைய சந்திச்சு சொல்ல எம்புட்டோ முயற்சி செஞ்சு பாத்திருக்காரு.கடுதாசி கொடுத்திருக்காரு.ஊஹூம்..ஒன்னும்..
நடக்கலை. அதாலே ஆட்சியின் தவறுகளை அவரு வீதிக்கு வந்து மக்கள் கிட்டே தனக்கு வாக்களித்த மக்கள்கிட்டே எடுத்துச் சொல்லிட்டாரு. இதப்போயி தப்புன்னு எடுத்துக்கிட்டு அந்த பொம்பள இவரைக் 
கட்சியிலிருந்து நீக்க, உடனே இவரு பத்திரிக்கையாளர் கூட்டத்திலே நேத்து நடந்த அல்லாத்தையும் சும்மா சிதறுகாய் உடைச்ச மாதிரி புட்டு புட்டு வச்சுட்டார் அண்ணே. அந்தம்மா இப்ப முழியா முழிக்குது.
இதுதான் அண்ணே விஷயம்.
அரு:- சபாசுடா தம்பி. அப்டியா விசயம். தம்பி ஒரு நாட்டின் தலைமைக்கு/ ஆளும் பொறுப்பில் உள்ள அல்லாத்துக்கும்தான் சொல்றேன். அவுக செய்ற/அவுக ஆட்சியிலே நடக்குற தவறுகளை சுட்டிக்காட்டுற அறிஞர்கள், நம்ம பழ. கருப்பையா போன்றவர்கள் இல்லன்னு சொன்னா அழிக்கிரவங்கன்னு யாருமே 
இல்லாமலேயே அழிஞ்சு போயிருவாங்களாம் அவுக.இத நான் சொல்லல தம்பி.வள்ளுவர் சொல்லியிருக்காரு.அதைத்தான் நம்ம பாலு ஐயா மேலே எடுத்துப் போட்டிருக்கார்.
படிச்சுத் தெரிஞ்சுக்க எனக்கு நிறையவேலை கிடக்கு நான் வரேன் தம்பி.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

Tuesday, January 26, 2016

நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள ( பாதுகாத்திட) நாம் எதை காப்பாற்றிட வேண்டும் ? வள்ளுவர் தந்த விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  வெகுளாமை.


குறள் எண் :-  305.


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க                                                                                                          காவாக்கால் 
தன்னையே கொல்லும் சினம்... ... ...


பொருள் :-  தன்னைத்தானே காத்துக்கொள்ள/பாதுகாத்திட விரும்பினால், தன்னிடம் சினம்/கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால்அந்த சினம்/கோபம் அவனையே அழித்துவிடும்.இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

சோணகிரி :- என்ன தம்பி அருணகிரி. மூணு நாள் 
தமிழ்நாடு சட்டமன்ற முடிவில் ஆளும்கட்சித் தலைமைஎன்னடா இம்புட்டு கோபமும், ஆவேசமும் கொண்ட ஒரு தொனியில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசுனதை தொலைகாட்சியில் பாத்தியாடா தம்பி.

அருணகிரி :- அந்தக் கன்றாவிய என் ரெண்டு கண்ணாலே பாத்து அழுதேன்.

சோணகிரி :- அட..என்னடா..இது...இம்புட்டு கரிசனம் அந்தப்பொம்பள மேலே உனக்கு திடீர்னு ? இல்ல..கேக்கேன்.

அருண:- அட..போங்கண்ணே நீங்க ஒன்னு. கரிசனமும் இல்லை..ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இப்படி கோவப்பட்டா அழிஞ்சு போயுறுவாக அந்த பொம்பளன்னுதானே எனக்கு கவலை.

சோண :- அட..அழிஞ்சா..அழிஞ்சு தொலையட்டுமே நமக்கு என்னடா தம்பிகவலை. உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்..தப்பு செஞ்சவ தண்டனை அனுபவிக்க்கனும். இதுதானேடா தம்பி உலக நிலை.
அட..என்ன...நான்..சொல்றது.

அருண:- அட..அது இல்லண்ணே..செஞ்ச அல்லா 
தப்புக்கும் தவறுக்கும் தண்டனைஅனுபவிக்காம 
அழிஞ்சுபோயிறக்கூடாதுல்ல..அத..சொன்னேன்..

சோண :-  அட..பரவாயில்லையே..தம்பி.. உன்னைய நான்என்னமோன்னுநினைச்சேன்..பொழைச்சுக்குவடா  தம்பி....

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

Thursday, January 21, 2016

வயதில் மூத்த அறிஞர்களுக்கு தீமை செய்தால் என்ன நடக்கும் ? திருவள்ளுவர் தந்த அறிவுரை !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :- பெரியாரைப் பிழையாமை.

குறள் எண் :-  894.


கூற்றத்தைக் கையால் விளித்தற்றான்                                                                                                  ஆற்றுவார்க்கு 

ஆற்றாதார் இன்னா செயல்... ... ... 


பொருள் :-  ஆற்றல் உடையவர்களுக்கு, ஆற்றல் 
இல்லாதவர்கள், தீமை செய்தால், தானே வந்து 
அழிக்கவல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற்
போன்றது ஆகும். இதுநமதுவான்புகழ்வள்ளுவர் 
நமக்குஅருளிச்சென்றதிருக்குறளும்விளக்கமும் 
ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :- 

ராமசாமி :-  வாப்பா தம்பி ரங்கசாமி. என்ன நலமா ?
ரங்கசாமி :-  அண்ணே !! நீங்க இருக்கும்போது இங்கே எனக்கு என்னண்ணே குறைச்சல் ? ராஜாவாட்டம் இருக்கேன்.
ராம:- அப்படிப்போடுறா அரிவாளை. நீ உண்மைய சொல்லு தம்பி. ராஜாவாட்டம் இருக்கியா இல்ல ராஜா வாட்டமா இருக்கியா ? இது எப்டி இருக்கு ?
ரங்க:- அண்ணே சும்மா கிண்டல் பண்ணாதீங்க 
சரி என்னைய எதுக்கு கூப்புட்டீங்க ?
ராம :-  இல்ல தம்பி அப்டி இப்டின்னு சட்டமன்ற 
தேர்தல் ஒருவழியா களைகட்ட ஆரம்பிச்சுருச்சு.
இந்த வாட்டி உன் வாக்கு யாருக்கு ? அத கேக்கதான் உன்னைய நான் கூப்புட்டேன்.
ரங்க:- அட..என்ன..அண்ணே !! இப்புடிக் கேட்டுப் 
புட்டீங்க. சந்தேகம் இல்லாம தலைவர் கலைஞர்
அவர்களுக்குத்தான். இன்னொருதடவை அந்த 
பொம்பளைக்குஒட்டுபோட்டுமொத்தநாட்டையேஅவங்க தோழியோட கும்பலுக்குத் தாரை வார்க்கச் சொல்லுதீகளா ?இல்ல..கேக்குறேன் ?
ராம :அட..முட்டாப்பயலே..மூணுதலைமுறைக்கு முட்டாப்பயலே.. உனக்கு இன்னும் நான் கேட்ட கேள்வியோடு உள்ளர்த்தம் புரியலைடா தம்பி. 
ரங்க:- அட..என்னண்ணே..யாருக்கு..வாக்குன்னு 
கேட்டீங்க. நான் சொன்னேன்..இதுல என்ன உள்ளர்த்தம் இருக்கு ? எனக்குப் புரியலை.
ராம :- தம்பி. நிச்சயம் இந்தத் தடவை பெரும்பாலானோர் ஒட்டு ஐயா கலைஞர் அவர்களுக்குத்தான். நான் இல்லைன்னு 
சொல்லலே. ஏன் அவருக்கு வாக்களிக்கனும்னே நினைக்கே?அதைதாமுல்ல கேட்டேன். அவர் செஞ்ச நன்மை என்ன ?அந்த பொம்பளை செஞ்ச தீமை என்ன ? கொஞ்சம் விவரமா சொல்லு தம்பி.
ரங்க:- அண்ணே. தலைவர் கலைஞர் எம்புட்டு நல்ல பல திட்டங்கள் நம்ம தமிழ்நாட்டுக்கு செஞ்சிருக்காரு ? அதை நான் சொல்ல இந்த வருஷம் முழுசுமே போதாது. ஆனா அதே நேரம் அந்தப் பொம்பள செஞ்சிருக்குற, இப்போ 
செஞ்சிக்கிட்டு இருக்குற இன்னும் பதவிலே நீடிக்கப்போற நாட்களில் செய்ய இருக்குற தீமைகள் ....அப்பப்பா..கணக்கில் அடங்காது அண்ணே. வேற ஒன்னும் வேணாம். நம்ம தல 
வயசுலே எம்புட்டு பெரியவர், அவர் எவ்வளவு ஆற்றல் படைச்சவர்,எழுத்தாளர்,கவிஞர்,படைப்பாளி,இத்தனை விசயத்துக்கும் மேலே அவரு ஒரு குடும்பஸ்தர். அவரை இந்தபொம்பள , இவ ஒரு மொட்டக்கட்டை, புத்திங்கிறது ஒரு பைசாக்கு கூட இல்லாதவ, சட்டசபை என்றாலும் சரி, வெளி இடம் என்றாலும் சரி, ஏய்..கருணாநிதி..ஏய்..கருணாநிதி..அப்டீன்னு கூப்பிட்ட அந்த ஒரு தீமை போதாது 
இந்தபொம்பள சீக்கிரம் எமலோகம் போறதுக்கு ? இதை நான் சொல்லல அண்ணே. நம்ம திருவள்ளுவரே அவரு எழுதிய திருக்குறள் ஒன்னுலே சொல்லியிருக்காரு. மேலே 
கட்டுரையில் நம்ம பாலு ஐயா எடுத்துக் காட்டி இருக்காரு.அத படிங்க உங்களுக்கே தெரிய வரும். அண்ணே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் போயிட்டு அப்பாலே உங்கள பாக்குறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

Tuesday, January 19, 2016

இப்படிப்பட்ட ஆண்களை விட பெண்களே பெருமை உடையவர்கள் !! வள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :- பெண்வழிச் சேறல்.


குறள் எண் :-  907.



பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின்                                                                                        நாணுடைய 
பெண்ணே பெருமை உடைத்து... ... ... 


பொருள் :-  மனைவி இடுகின்ற கட்டளைகளுக்கு 
அஞ்சிநடக்கின்றஆண்களைவிடவும்இயல்பாக 
நாணத்துடன் வாழ்ந்திடும் பெண்ணே பெருமை உடையவள்.இது வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தன் :  வணக்கம் தம்பி கடம்பா. என்ன ஒருவழியா பொங்கலை எல்லாம் வழியனுப்பி வச்சாச்சுட்டியாடா தம்பி.
கடம்பன் :- ஆமா அண்ணே. என்னத்தை வழி அனுப்பி வைக்க. வயித்தெரிச்சல். ஏன்னா 
பொங்கல் இலவசப்பொருள்கூட எங்களுக்கு நொள்ளைன்னு சொல்லிட்டாங்க. 
கந்த :-  சரி..சரி..விடுறா தம்பி. இந்த ஆட்சியிலே எதுதான் ஒழுங்கா நடந்திருக்கு சொல்லு பார்ப்போம். நான் இப்ப உன்கிட்டே வந்தது வேற ஒரு விஷயத்திற்கு.
கடம்:-  என்ன விஷயம் அண்ணே. சொல்லுங்க எனக்குத்தெரிஞ்சா சொல்றேன்.
கந்த :-  நம்ம பன்னீர் செல்வம் இருக்கானே.     கடம் :-  யாருன்னே நம்ம விஸ்வநாதன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுலே இருக்கானே அவனா ?

கந்த:- அவனேதான். கரெக்டா சொல்லிட்டியே. அவன் ஏண்டா எப்ப பாத்தாலும் உம்முன்னு இருக்கான். போதாக்குறைக்கு தாடிய வேற வளத்துகிட்டு பாக்கவே கண்ட்றாவியா இருக்கானே ஏனாம் ?
கடம் :-  அண்ணே உனக்கு விசயமே தெரியாதா ?
கந்த :- அட..தெரியாததாலேதானேடா உன்ட்ட கேக்குறேன்.
கடம் :- கிட்ட வாங்க அண்ணே இது ரொம்ப ரகசியமான விசயமுல்ல.
கந்:-  உம்..சொல்லு..சொல்லுறா..என் தம்பி...
கடம் :- அண்ணே அவன் பொண்டாட்டி இருக்காளே அதுதான் விஜயலலிதா பெரிய திமிர் பிடிச்சவ. அவ இவனை மதிக்கிறதே இல்லைல்ல. அது மட்டும் இல்ல அவ எந்த ஆம்பிளையையும் மதிக்கவே மாட்டாண்ணே.
கந்த :- சரி..சரி..விசயத்துக்கு வாடா தம்பி.
கடம் :-  அதாலே வீட்டுலே என்ன நடக்குதுன்னா இந்தப் பய பன்னீர்செல்வம் இருக்கானே அவன் அவளுக்குப் பயந்துகிட்டு  அவ என்ன வேலை சொன்னாலும்..என்ன வேலை சொன்னாலும் அத்த செஞ்சுகிட்டு வயுத்த கழுவி வாழ்ந்துகிட்டு 
கிடக்கான். ரொம்ப மானங்கெட்ட பொழைப்புத்தான்.இவனுக்கும் வேற கதியும் இல்லை. வழியும் இல்ல.இதுதான் அண்ணே விஷயம்.
கந்த :-  ச்சே !! கேக்கவே ரொம்ப கொடுமையா இருக்கே உம்.. இந்த பொழைப்பு பொழைக்கிறதுக்கு பேசாம நடுத்தெருவுலே 
நாலு பேருக்கு ....எனக்கு என்னமாத்தான் வருது வாயிலே.
கடம் :- ஆமா அண்ணே. எனக்கும் ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்ய ? ஆட்சி,அதிகாரம் அவன் மனைவி 
விஜயலலிதா கிட்டே இல்ல இருக்கு.
கந்த :- தம்பி இந்த மாதிரி எதிர்காலத்துலே மனுசங்க இருப்பானுங்க என்று எண்ணித்தான் நம்ம திருவள்ளுவர் ஒரு திருக்குறள் எழுதி இருக்கார். அத்த நம்ம மதுரை TR.பாலு ஐயா எடுத்துப் போட்டிருக்காருடா தம்பி. ஏவல் 
செய்திடும் பெண்களிடம்அதாவதுமனைவியிடம் இருந்து அதன்படி செய்து இங்கே வாழ்ந்து வருகின்ற ஆம்பிளைகளை விடவும் பொம்பளைகளே மேல் என்று. முடிஞ்சா நீ படிறா 
தம்பி. நான் வாறன்.

நன்றி.வணக்கம்.
அன்புடன். திருமலை.இரா.பாலு.

Monday, January 18, 2016

மிகப்பெரிய குற்றம் என்பது எது ? திருவள்ளுவர் சொன்னது !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  குற்றம் கடிதல்.

குறள் எண் :- 438.


பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் 

எண்ணப் படுவதொன் நன்று... ... ... 


பொருள் :-  பொருளிடத்தில் பற்றுக்கொள்ளும் 
பொருளாசை என்னும்ஈயாத்தன்மை,குற்றங்கள் 
என்று சொல்லப்படும் அனைத்திலும் தனித்தன்மை கொண்ட ஒரு மிகப்பெரிய குற்றமாகும். வான்புகழ்
திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

மன்னாரு :-  என்னங்க தம்பி சுதாகரு நல்லா இருக்கியா.உனக்கென்ன ஆளும்கட்சிக்காரன் நீ. உன்ட்ட போயி நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன் பாரு. என் புத்திய செருப்ப கழட்டிதாண்டா அடிக்கணும்.

சுதாகரு :-  அட..என்ன..அண்ணே..நீங்க ஒன்னு. இதுக்குப்போயி செருப்பு கிருப்புன்னு சொல்லிட்டு. விடுங்க அண்ணே.

மன்னாரு :- ஏண்டா தம்பி கடந்த நான்கரை ஆண்டுகளா எத்தனை லட்சம்டா சம்பாதிச்சு இருப்ப?

சுதா :- அட..போங்க அண்ணே..நீங்க.. என்ன சுத்த விவரம் இல்லாம கேட்டுகிட்டு இருக்கீங்க ? அதெல்லாம் அந்தக் காலம் அண்ணே . எத்தனை கோடி சம்பாதிச்சு இருக்கே ? அப்படி கேளு 
அண்ணே. என்ன நான் சொல்றது.

மன்ன:- தம்பி எனக்கு தலையே சுத்துதுடா. என்ன கோடியா?

சுதா :-  அண்ணே இதெல்லாம் இப்ப ரொம்பவும் சர்வ சாதாரணம்தான்.

மன்:-  ஏண்டா தம்பி இது இப்டி சம்பாதிக்கிறது தப்புன்னு உனக்கு தெரியலையாடா ?

சுதா :- அண்ணே நீங்க பழைய பஞ்சாங்கமா இருக்கீங்க.இதுதான் இப்ப உள்ள லேட்டஸ்ட் பாலிடிக்ஸ்.பணம் கொள்ளையடிக்கிறதுக்கு மட்டும்தான் நாங்க அரசியலுக்கே வறோம் அண்ணே.நீங்க பாட்டுக்கு...சும்மா கிடங்க அண்ணே.

மன்:- அப்டியாடா தம்பி. ஆனா திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்காருன்னு சொன்னா இந்த மாதிரி பொருளாசைதான்  இருக்கிற குற்றங்களிலேயே பெரிய குற்றம்னு இல்ல சொல்லியிருக்காரு ?

சுதா :- அப்டியா. அவரு சொல்லிட்டுபோயிட்டாரு 
அண்ணே. பொழைக்கிற வழியப் பாருண்ணே அதுதான் உனக்கு நல்லது.

மன் :- வேணாண்டா தம்பி. அப்படிப்பட்ட வழி உன்கிட்டே மட்டும் இருக்கட்டும். நான் வரட்டா.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு.


Tuesday, January 12, 2016

பணம் வைத்திருப்பது பெரும் துன்பத்தையே தரும். எங்கே ? !! வள்ளுவர் தந்த விளக்கம் !!







                           தினம் ஒரு திருக்குறள்.

                 அதிகாரம்   :-  கொடுங்கோன்மை.

                                குறள் எண் :-  558.


இன்மையின் இன்னாது உடைமை                                                                                                            முறைசெய்யா 

மன்னவன் கோற்கீழ்ப் படின்... ... ...

பொருள் :-  முறைதவறிய ( ஆட்சி செய்திடத் தெரியாத,மக்கள் நலன் பற்றி கவலை எதுவும் படாத,எதேச்சதிகாரம்மிகுந்த,அராஜகம் செய்திடும்) அரசன்/அரசி/முதல்வர் ஆட்சி 
அதிகாரத்தின்கீழ் வாழ்ந்திடும் மக்கள், பொருள் இன்றி இருப்பதை விடவும், பொருள்/பணம் வைத்திருப்பதே பெரும் துன்பத்தைத் தரும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கருப்பாயி :- என்ன மீனாட்சி அக்கா சவுக்கியமா ?

மீனாட்சி :- சவுக்கியமா எங்க இந்த ஆட்சியிலா ?அட போங்க அக்கா போங்க !! நீங்க ஒன்னு நானே இங்க நொந்து கிடக்குறேன். சவுக்கியமா அது இதுன்னு கேட்டுக்கிட்டு இருக்கீங்க.

கருப்பாயி :-  என்ன அக்கா கதை வுடுறீங்க ? இல்லஎண்ணை குடத்தை போட்டவளும் அழுதாளாம் வெத்துக்குடத்தை போட்டவளும்  அழுதாளாம் அந்தக் கதையா இல்ல கீது. யக்கா எங்களை மாதிரி ஏழைங்க காசு பணம் இல்லாம கஷ்டப்படுறோம் நியாயந்தான்.சுத்தமா கைலே பணம் கிடையாது இந்தா பொங்கல் வேற வருது இன்னா செய்றதுன்னு சொல்லிட்டு கையப் பிசைஞ்சுக்கினு கீறோம்.அது எங்கதலைஎழுத்து.உனக்கு என்னக்காவீடு,வாசல்,தோட்டம்,தொரவு,காரு,பங்களா,சொத்து,சுகம் இத்தனையும் நீங்க வச்சுக்கினு நீங்களும் கிடந்தது அல்லாடுறீங்க.இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்.

மீனாட்சி :- அடியே புத்தி கெட்ட கழுதை. நீ சொல்றது என்னவோ ஒருவகைலே பாத்தா சரிதான். ஆனா இங்க நிலைமை அப்டி இல்லையேடி.

கருப்பாயி :- இன்னா நிலைமைக்கு கேடு வந்துச்சு?

மீனாட்சி :- கருப்பாயி உன்ன மாதிரி கையிலே ஏதும் இல்லன்னு வச்சுக்க ஒரு கவலையும் கிடையாதுடி. அது ஒண்ணுதான் உன்னோட கவலை.ஆனா என்னைய மாதிரி இருக்குறவங்க இந்த கேடுகெட்ட ஆட்சியிலே படுற கஷ்டமும் தும்பமும் சொல்லமுடியாதுடி.சொல்லமுடியாது.

கருப்பாயி :- ஏன்..ஏன்..சொல்ல முடியாது ?

மீனாட்சி :- இப்ப இன்னும் மூணு மாசத்துலே தேர்தல் வரப்போகுது. நீங்கதான் கையிலே துட்டு வச்சு இருக்கீங்களேன்னு சொல்லிட்டு இந்த ஆளும்கட்சி அதிகாரவர்க்கம்எங்களைபடுத்துறபாடு இருக்கு பாரு. அப்பப்பா சொல்ல முடியாதுடி. போதாக் குறைக்கு வார்டு கவுன்சிலர்ல இருந்து MLA முதல் MP வரைக்கும் ஈன்னு பல்ல இளிச்சுக்கிட்டு வந்துருவானுங்க.இது போதாதுன்னு வட்டம் மாவட்டம் அது இதுன்னு எல்லாப்பயகளுக்கும் அழுது தொலையனும். இத்தோட நம்மளை வுட்டானுங்கன்னு நினைக்கிறே. ஊஹூம்..அதான் இல்ல...மந்திரி,மந்திரியோட எடுபிடி,கையாளு அப்டி இப்டின்னு அல்லாப் பயகளுக்கும் காசு கொடுத்து முடியாதுடி. இந்தமாதிரி கொடுங்கோல் ஆட்சியிலே காசு இல்லாம இருக்குறதை விட பெருங்கொடுமை பணம் இருக்கவங்களுக்குத்தான் அப்டீன்னு ஐயன் திருவள்ளுவரே சொல்லியிருக்காரே.நம்ம மதுரை TR.பாலு சார் கொடுத்திருக்கிற அய்யன் திருவள்ளுவர் எழுதின குறளையும் அதன் பொருளையும் படிச்சுப்பாருடி உனக்கே புரியும் சரி நிறைய வேலை கிடக்கு.நான் வரட்டா கருப்பாயி!!

கருப்பாயி :- சரிங்க அக்கா !!நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா.பாலு.

Friday, January 1, 2016

நன்றி மறந்தவருக்கு என்றுமே அந்தப் பாவத்திலிருந்து மீள்வதற்கு வழியே கிடையாது !! வள்ளுவர் தரும் விளக்கம் !!






அன்புத் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் 
என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எனது 
               " தினம் ஒரு திருக்குறள் " எனும் வலைதளத்தினில்நான் பல்வேறு பால்களில் அமைந்துள்ள திருக்குறள்களுக்கு பொருளும் 
பின்பு அது சம்பந்தப்பட்ட விளக்கத்தை, நாட்டு 
நடப்பு விளக்கம் எனும் பெயரில் நேயர்களுக்கு 
வழங்கி வருகின்றேன். அதை உங்களில் எத்தனை நபர்கள் படித்து அதன் பொருள் உணர்ந்து தங்கள் வாழ்க்கை வழிமுறைகளில் மாற்றம் செய்துள்ளனரோநான் அறிந்திலேன். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய இந்த அரும்பெரும் வாழ்க்கை 
தத்துவ நூல் இல்லாத குறைதனை, எனது வலைத்தளம் ஓரளவிற்கு சரிசெய்கின்றது என்பது எனது மனதிற்கு நானே செய்து கொள்ளும் ஒரு சமரசம். உலகப்பொது 
மறை நமது திருக்குறள். அது தமிழ் மொழிக்கு, செய்துள்ள பெரும் பெருமையை வெறும் வார்த்தையினால் சொல்ல முடியாது. அதனை நமக்கு வடிவமைத்து தந்த அய்யன் 
திருவள்ளுவருக்கு முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் மாபெரும் அதாவது 133 அடி உயரத்தில் ( நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களை உணர்த்தும் விதமாக) ஒரு எழில்மிகுந்த சிலைதனை வடிவமைத்திடவைத்து அதனை நிறுவிய 
பெருமை, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை மட்டுமே சாரும். ( அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கத்தால் அந்த சிலை சரிவர பராமரிக்கப்படவில்லை)  அந்த சிலைதனை தலைவர் கலைஞர் அவர்கள்  நிறுவி அதனை திறந்து வைத்ததன் பதினாறாம் ஆண்டு நாள் இந்த நாள். இந்த ஒருசெயல் செய்தமைக்காகவே தலைவர் கலைஞர் அவர்கள் , இந்த உலகம் 
உள்ளவரை, தமிழ் இனம் இந்த புவியில் உள்ளவரை போற்றப்படுவார். பாராட்டப்படுவார். இதில் எள்ளின் முனை அளவுகூட தமிழ் 
மொழியின் ஆர்வலர்களுக்கு சந்தேகம் இல்லை என்று சொல்லி இப்போது நமது " தினம் ஒரு திருக்குறள் " எனும் வலைதலத்தினுள் 
செல்வோமா ? நேயர்களே !!


தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  செய்ந்நன்றி அறிதல்.

குறள் எண் :-  110.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்                                                                                                  உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு... ... ...

பொருள்  :-  எத்தகைய நற்செயலை அழித்தவர்க்கும் அதனை மறந்தவர்க்கும் வாழ்வினில் அத்தகைய பாவத்திலிருந்து மீள்வதற்கு வலி உண்டு.  ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவற்கு மட்டும் அதில் 
இருந்து மீள வழியே இல்லை. இது வான்புகழ் அய்யன் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-                                                     


பிரபாகரு :-  வாங்க தம்பி திவாகரு !! இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.                         திவாகரு :-  அட..போங்க....அண்ணே !! நாம எல்லாம் தமிழர்கள் அப்டி இப்டின்னு மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லிட்டு இப்படி ஆங்கிலப் புத்தாண்டுக்குப் போயி வாழ்த்து சொல்றீங்களே அண்ணே இது என்ன நியாயம் ? இல்ல.. நான் தெரியாமத்தான் கேக்குறேன். 

பிரபா:- டே..டே..என்னடா தம்பி இப்டி மூக்கு முன்னாடி கோவத்தை வச்சுகிட்டு இருக்கே. அமைதி.அமைதி.                                                                தீவாக:- சரிண்ணே. அமைதியாயிட்டேன். இப்ப என்ன சொல்றீங்க.                                                               பிரபா:- தம்பி..நாட்டுலே நடக்குற கூத்து பாத்தியா?                                                                                      திவா:- என்ன கூத்து அண்ணே.                                          பிரபா:- அதுதாண்டா தம்பி.இந்த விஜயகாந்த்-ஜெயலலிதா  விவகாரத்தை சொல்றேன்.   இந்த பொம்பள இன்னைக்கு முதலமைச்சரா இருக்குன்னு சொன்னா, அதுக்கு நம்ம விஜயகாந்த் ஓட்டுக்கள்தான் முக்கியமான காரணம் அப்டீன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனா அத்த எல்லாம் இந்த பொம்பள மறந்துட்டு, ஏத்திவிட்ட ஏணியயையே எப்டி எட்டி உதைக்குது பாத்தியாடா தம்பி.                           திவா:- அண்ணே அதான் உலகம். எல்லாம் காரியம் முடியுறவரை அண்ணே !!முடிஞ்சா பிறவாட்டி போடா வெண்ணே !!. இது தெரிஞ்ச விஷயம் தானே அண்ணே.                                                பிரபா:-  தம்பி. தப்பு..தப்பு..அப்டி எல்லாம் அந்த பொம்பள பேசலாம்டா. நீ என்னோட தம்பி. நீயும் அந்த ஜெயலலிதா மாதிரி நன்றி மறந்து பேசாதேடா. அப்புறம் நீயும் அழிஞ்சு போயிருவே. திவா:- அண்ணே..என்ன..சொல்றீங்க.நான் அழிஞ்சு போயிருவேனா?                                                பிரபா:- இல்லடா தம்பி..ஒரு பேச்சுக்கு சொன்னேன். நம்ம வள்ளுவர் நன்றி மறந்தா என்ன நடக்கும் அப்டீன்னு நம்ம பாலு சார் எடுத்து போட்டிருக்குற குறளை நீயே படிச்சுப் பாருடா தம்பி. உனக்கு உண்மை புரியும். என்ன நான் வரட்டா ?



நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு..