Thursday, February 27, 2014

ஊக்கம் உடையவனின் அடக்கம் எத்தன்மை படைத்தது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!-நவீன பாரத யுத்தத்தை !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு !!                         



தினம் ஒரு திருக்குறள் .                                                     



அதிகாரம்   :-  காலம் அறிதல்.                                         



குறள் எண் :-  486.                                                                     



ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்                   



தாக்கற்குப் பேருந் தகைத்து... ... ... ... ... ... ...                 




விளக்கம் :-  போர் புரியும் குணம் படைத்த 



ஆட்டுக்கிடா பின்வாங்கிச் செல்வது போல 



ஊக்கம் உடைய ஒருவன் தக்க காலத்தை 



எதிர்நோக்கிக் காத்து இருப்பான். இது வான்புகழ் 



வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் அதன் 



விளக்கமும் ஆகும்.                                                           





நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  இந்த குறளுக்கு 



நான் வேறு எந்த நாட்டின் நடப்பு விளக்கத்தை 



சொல்ல வேண்டும். நம் கையிலேயே 



இருக்கிறதே உதாரணம். வெண்ணையைக் 



கையில் வைத்துக்கொண்டு ஒருவன் நெய்க்கு 



அலைந்த கதையாக இருக்கும்.  ஆம்அன்பர்களே 



நம் தாழ்ந்ததமிழகத்தில் இப்போதுநடைபெற்றுக் 



கொண்டு இருக்கும் இந்த நவீன பாரத யுத்தத்தில் 



பாண்டவர்கள் அணியாக முத்தமிழ் அறிஞர் 



கலைஞர் அவர்கள் தர்மராகவும், கௌரவர்கள் 



அணித்தலைமையாக நவீன் துரியோதனியாக 



தமிழ்நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் 



ஒரு அனைத்து இந்திய என்று பெயரளவில் 



கட்சிக்குத் தலைப்பு வைத்துக்கொண்டு 



செய்கின்ற அனைத்து வேலைகளும் சிற்றூர் 



பஞ்சாயத்து வேலைகளாகவே இன்றையதினம் 



செய்து கொண்டிருக்கும் முதல்வர் இந்த 



துரியோதனி என்கின்ற கதாபாத்திரத்தை ஏற்று 



சிறப்புற நடித்துக்கொண்டு இருக்கிறார். இங்கே 



கண்ணனாக அமர்ந்து இருப்பது யார் என்று 



கேட்டால் அது தளபதி மு.க.ஸ்டாலின் என்பதை 



நாம் யாருக்கும் பிளக்ஸ் பானர் போட்டு 



காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை 



அன்பர்களே.  ஆட்சிகள் மாறி மாறி 



அமைவதுதான் ஜனநாயகத்தின் அழகு.  ஆனால் 



அதற்காக முந்திய ஆட்சியாளர்களை 



பழிவாங்குவது அவர்கள் மீது பொய் வழக்குகள் 



போட்டு உள்ளே தள்ளுவது, இதெல்லாம் 



நியாயமா ?  இங்கே தமிழ்நாட்டின் மூத்த 



முதுபெரும் தலைவர் கலைஞர் திரு 



மு.கருணாநிதி அவர்கள்தான் இந்தக் குறளில் 



குறிப்பிட்டுள்ள ஆட்டுக்கிடா. அவர் இப்போது 



பின்வாங்கிச் செல்வதுதான் நடைபெற உள்ள 



பாராளுமன்ற தேர்தல். அதில் கலைஞர் 



பெறப்போகும் வெற்றிதான் அவரது கடும் 



உழைப்புக்குக் கிடைக்க இருக்கும் மாபெரும் 



ட்ரைலர் வெற்றி ஆகும். அதன்பிறகு தமிழ்நாடு 



சட்டமன்றத்திற்கான தேர்தல். அப்போதுதெரியும் 



வெல்வது வாய்மையா ? அல்லவா ? என்பது 



அந்த நேரம் உண்மை ஊருக்குப் புரியும். 



பார்ப்போம் நடைபெறப்போகும் நவீன மகா 



பாரதக் கதையின் போர்காட்சிகள்.  அன்பர்களே 



நான் எதற்காக இந்தக் கதைக்கு மகாபாரதத்தை 



உதாரணமாக எடுத்துக்கொண்டேன் என்றால் 



அதற்கு உண்டான காரணங்கள் இதோ :-                      


1)  அங்கே சூழ்ச்சியால்/சூது விளையாட்டால் 



இராஜ்ஜியத்தை இழந்தவர்கள் பாண்டவர்கள்.   



இங்கே இலவச விளம்பரத்தால் ஆட்சியை 



இழந்தவர் கலைஞர் அவர்கள்.



2)  அங்கே சகுனியாக செயல் பட்ட 



கதாபாத்திரத்தை இங்கே மிகச் சரியாக செய்து 



கொண்டு இருப்பவர் துக்ளக் ஆசிரியர் திரு 



சோ.இராமசாமி ஆவார்.                                                     



 3) அங்கே விபீஷணின் கதாபாத்திரத்தை சென்ற 



சட்டமன்றத் தேர்தலில் அம்மையாருடன் கூட்டு 



வைத்ததன் மூலம் அவரை ஆட்சிக் கட்டிலில் 



ஏற்றி அழகு பார்த்தவர் இங்கே நடிகர் 



விஜயகாந்த் ஆவார். பின்னாளில் இவர் என்ன 



ஆனார் என்பதை இந்த நாடே அறியும்.                         



 4)  மகாபாரத யுத்தத்தினில் ஒலிக்கப்பட்ட 



உபதேசம்தான் கீதாஉபதேசம். இங்கே 



ஒலிக்கப்பட இருக்கும் உபதேசம்தான் 



கலைஞரின் உபதேசம்.                                                         



5) அங்கே தாரக மந்திரம் சத்தியமேவ ஜெயதே !! 



இங்கே ஒலிக்க இருக்கும் மந்திரம் வாய்மையே 



வெல்லும் என்பதே ஆகும்.   மேலும் தர்மத்தின் 



வாழ்வுதன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மம் 



வெல்லும். இதுதான் மகாபாரதக்கதையின் 



மையக் கரு. இங்கே எப்படி அது சொல்லப்படும் 



என்றால் தமிழ்நாட்டின் ஆட்சியை பதவி 



வெறியாளர்கள் கொஞ்ச ஆண்டுகள் 



நிர்வகிப்பார்கள். இறுதியில் தர்மம் 



வெல்கின்றபோது கலைஞரின் தலைமையின் 



கீழ் ஆட்சி அமையும். உண்மை வெல்லும். 



இதுதான் நடைபெறப்போகும் தமிழ்நாட்டின் 



வரலாறு. இதையே இந்த உலகம் காண உள்ளது.                                                                        



நன்றி !! வணக்கம் !!                                                               



அன்புடன். மதுரை T.R.பாலு.                                                            

Monday, February 24, 2014

.நம்பியவன் மனைவி மீது ஆசைகொண்டு துரோகம் செய்யாதே !!வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  பிறனில் விழையாமை.

குறள் எண் :- 143.


விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் 
தீமை புரிந்து ஒழுகுவார்... ... ... ... ... ... ... ... 


விளக்கம் :-   தன்மீது சந்தேகப்படாதவனின் 


மனைவி மீது ஆசைப்பட்டு முறைதவறி 


நடக்க முயல்பவன் செத்த பிணத்தைப 


போன்றவனே ஆவான்.  இது வான்புகழ்


வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.

Wednesday, February 19, 2014

புலால் உணவினை நாம் உண்ணாமல் இருந்தால் புலால் விற்பனைக்கூடங்கள் ஏது ?வள்ளுவர்தரும் விளக்கம் !!









உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்    :-  புலால் மறுத்தல்.



குறள் எண் :-  256.



தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்           

                                                                                 யாரும் 

விலைபொருட்டால் ஊன்தருவார் இல்... ... ... ... ... ...



விளக்கம் :-  மக்கள் தின்பதற்க்காக உயிர்களைக் 


கொல்லவில்லை என்றால், ஒருவரும் 


பொருளுக்காக புலாலை விற்பனை செய்ய 


மாட்டார்கள். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன் விளக்கமும் ஆகும்.        




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-                                       


அகமது :- ஏண்டா பிலால் என்ன்னடா இது ஒரே 


அதிசயமா இருக்கு. இன்னைக்கு சனிக்கிழமை. 


அதுவும் மாச்த்திலேவரும் முதல் சனி. 


எல்லோரும் இன்னைக்கு தலைக்கு எண்ணை 


தேச்சு குளிச்சுட்டு கறிச்சோறு திம்பாங்கன்னு 


நினைச்சுத்தானேடா நான் இன்னைக்கு கூட ஒரு 


செம்மறி ஆடும் வெள்ளாடும் வெட்டி வைச்சுட்டு 


போனேன். ஒரு கால் கிலோ கறிகூடவாடா 


யாரும் வாங்க வரலை.



பிலால் :-  மாமு உனக்கு விசயமே தெரியாதா ? 


அதான் இப்படி பினாத்துறே. ஊர் பஞ்சாயத்துகூடி 


தீர்மானமே போட்டாச்சு.                                                 


அகமது :- என்னது ? தீர்மானமா ?டேய் என்னடா 


சொல்றே ? என்ன தீர்மானம் ? சொல்றா 


கொஞ்சம் விவரமா !!         


பிலால் :- அண்ணே எல்லோரும் இங்க 


இன்னையிலே இருந்து வள்ளுவர் சொன்னபடி 


நடக்கப்போறதா முடிவெடுத்தாச்சு மாமு.           


அகமது : அப்டி வள்ளுவர் என்னதாண்டா 


சொல்லிருக்காரு ?                                                             


பிலால் :-  யாரும் உயிர்களைக் கொன்னு திங்கக் 


கூடாது. அது பாவம். அதாலே நாம யாரும் 


இன்னையிலே இருந்து கறி,கோழி,மீன்.முட்டை 


இதுபோல எந்தவிதமான கவுச்சி அடிக்கிற 


பொருள்கள் எதையுமே சாப்பிடுவது இல்லை 


அப்டீன்னு சத்தியம் பண்ணிட்டாங்க மாமூ. 


இனிமே நீ உன்னோட கடையை இழுத்து மூடிட 


வேண்டியதுதான்.                                                             


அகமது :-  ஆமாண்டா இரும்பு அடிக்கிற 


இடத்துலே ஈக்கு என்ன வேலை. இனிமேலே 


இந்த ஊரில நாம் வியாபாரம் செஞ்சா நாம 


கிளிஞ்சுதான் போயிருவோம். இன்னையிலே 


இருந்து நாம அகமது கறிக்கடைக்கு மூடுவிழா 


வாடா நாம் நம்ம சொந்த ஊருக்குப் போயி வேற 


ஏதாவது பொழைப்பைத் தேடிக்குவோம். வாடா 


கடையைமூடிட்டு ஊரைக்காலிபண்ணிடுவோம். 



அன்பர்களே !! திருக்குறள் விளக்கம் இத்துடன் 



நிறைவு அடைகிறது.                                                               



நன்றி !! வணக்கம் !!




மதுரை T.R.பாலு.

Thursday, February 13, 2014

உண்மையான இல்வாழ்க்கை வாழ்பவன் யார் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!









உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :- பிறனில் விழையாமை.

குறள் எண் :-  147.


அறனியலான் இல்வாழ்வான் என்பான்                       

                                                        பிறனியலாள்

பெண்மை நயவா தவன்... ... ... ... ... ...


விளக்கம் -  அறத்தின் இயல்போடு பொருந்தி 

இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு 


உரிமையானவளின் பெண்மையை 


விரும்பாதவனே :!!  இது 


வான்புகழ்வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நட்பு விளக்கம்:-  


மன்மதன் :-  டேய் !!  ராமா, என்னடா 


உன்னைய பாத்துகிட்டத்தட்ட ஒரு 


மாசத்துக்குமேலே இருக்கும்போல 


இருக்குமே ? எங்கேடா போய்த்தொலைஞ்சே ?


ராமன் :- மதன். எங்க சொந்தஊர் மதுரைக்கு 


போயிருந்தேண்டா. அங்க எங்க அத்தை 


பொண்ணுக்கு கல்யாணம்டா. அதுதான் 


ஒருமாச இடைவெளி உங்களை எல்லாம் 


பாக்க முடியலைடா.



மன்மதன் :- ஆமாடா பொண்ணு எப்படிடா ?


சூப்பரா ? ஏண்டா அடுத்தவனுக்குப்போய் 


கட்டிக் கொடுத்தீங்க ?  பேசாம 


நீ  கட்டிஇருக்க வேண்டியதுதானே ?


ராம்:-  உனக்கு மூளை கீளை குழம்பிப் போச்சா.


எனக்குத் தான் தங்க விக்ரகம் போல மனைவி 



வீட்டிலே இருக்காளே. அப்புறம் எதுக்குடா. 



இன்னொன்னு.தேவையே இல்ல.



மன்மதன் :- இருந்தா இருக்கட்டுமே. யார் 


வேணான்னா. அது ஒரு பக்கம் இருந்தா .இது 


ஒருபக்கம் இருந்துத்துட்டுப் போகட்டுமே .ஆம


 நான்தெரியாமதான் கேக்கிறேன்.வீட்டிலேதான் 


இட்லி தோசை சுடுறாங்களேஅப்புறம் எதுக்குடா 


நாம சங்கீதா ஓட்டல் போறோம்? அந்த 


மொருமொருப்பு, அந்த ரோஸ்ட், அந்த சுவை 


வீட்டிலே இல்லைன்னுதானேநாம அங்கே 


போறோம். அந்த மாதிரித்தானே  இதுவும்.



ராம் :- போடா முட்டாள். ஏண்டா. சாப்பிடுற 


பொருளும் சம்சாரமும் ஒன்னாயிடுமாடா ?


மன்மதன் :- தம்பி சுவை நல்லா இருந்தா 


வீட்டு சாப்பாட்டையும் ரசிக்கணும். 


அதேசுவை இன்னும் அதிகமா இருந்தா 


பக்கத்து வீட்டு சாப்பாட்டையும் ருசிக்கனும்டா.


அதாண்டா வாழ்க்கை.அவந்தான்டா மனுஷன்.


ராம் :- டேய் உங்களை எல்லாம் திருத்தவே 


முடியாதுடா. நம்ம வீடு வீடுதான்.


பக்கத்து வீடு பக்கத்து வீடுதான் சொந்தம்தான் 


என்னைக்கும் நம்ம கூடவே வரும் நாம 


செத்துப்போனா கண்ணீரும் வடிக்கும். ஆனா நீ 


சொன்ன அந்த ரெண்டும் துண்டை உதறித் 


தோளில் போட்டுக்கிட்டு போயிரும் பாத்துக்க. 


டேய் என்னைக்கும் ஒரே மாதிரியே எந்தவீடு 


கதவு தொறந்து கிடைக்குதுன்னு நாய் மாதிரி 


நாக்கைத் தொங்கப்போட்டு அலையாதீங்கடா. 


திருந்துங்கடா.மாறப்பாருங்கடா. உண்மையான 


இல்வாழ்க்கை வாழ்பவன் யார் என்று வள்ளுவர் 


சொல்லியிருக்கார் தெரியுமா தம்பி மன்மதா ?


எவன் ஒருத்தன் தன் பொண்டாட்டியோடு 


திருப்தி அடைகிறானோ எவன் ஒருவன் 


மாற்றான் ஒருவனுக்குச் சொந்தமான 


மனைவியின் பெண்மையை அடைந்திட 


வேண்டும் என்று மனதளவில்கூட 



நினைக்காமல் இருக்கிறானோ அவனே 



உண்மையான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று 



வள்ளுவர் சொல்லியிருக்கிறார் அதாலேதான் 



சொல்றேன் திருந்துங்கடா.



மன்மதன்:- சரிங்க அண்ணே. உங்களுக்கும் 


நம்ம கொள்கைக்கும் ஒத்து வராது. நான் 


கிளம்புறேன்.




அன்பர்களே !!  இத்துடன் குறள் விளக்கம் 


நிறைவு பெறுகிறது.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R.பாலு.


Monday, February 10, 2014

பொண்டாட்டி பேச்சுக்குக் கட்டுப்பட்டு பயந்து நடக்கிற எவனும் உருப்படவே மாட்டான் !!- இது வள்ளுவர் தரும் விளக்கம் ஆகும்!!






உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள் .



அதிகாரம்   :-  பெண்வழிச் சேறல்.       



குறள் எண்:-  9௦8.



நட்டார் குறைமுடியார் நன்றாற்றார்


                                                 நன்னுதலாள்


பெட்டாங்கு ஒழுகு பவர்... ... ... ... ... ... ... 



விளக்கம் :-  மனைவி விரும்பியபடி 



காரியங்களை செய்து முடிப்பவர் 



தன்னுடைய நண்பருக்கு ஏற்பட்ட 



குறையை நீக்கிட மாட்டார்.எந்த 



அறத்தையும் செய்யமாட்டார். இது 



வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 



அதன் விளக்கமும் ஆகும்.                   




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-           



பயந்தராஜன் :- (தூங்கிக்கொண்டு 



இருக்கும் தனது மனைவிக்குகாலை 



காபி தந்து எழுப்புகிறார்.) தங்கம்... 



அம்மா...தங்கம்... மணி எட்டு 



ஆச்சும்மா. இன்னைக்கு ஒன்பது 



மணிக்கு ஆபீஸ் போகனுன்னு 



சொன்னியே என் தங்கம்..எந்திரிடா 



தங்கம்.                                                               



தங்கம் :-  (கோபத்துடன்)ஏங்க...உம்... 



மனுசியை கொஞ்சநேரம் தூங்க 



விட மாட்டீங்களே !! அடடா...எப்பப் 



பாரு அசந்து தூங்குறப்பத்தான் 



எழுப்புவீங்க....உங்க துயரம்...தாங்க 



முடியலே...                                                     



பயந்த:-  இல்ல தங்கம்..சீக்கிரம் நீ 



இன்னைக்கு ஆபீஸ் போனுன்னு 



சொன்னியில்ல..அதனாலதான்நான் 



எழுப்பினேன்..தப்பா இருந்த ப்ளீஸ் 



மன்னிச்சுக்கம்மா.                                         



தங்கம் :- ஆமா. செய்யிற 



தப்பெல்லாம் செய்ய வேண்டியது. 



அப்புறமா மன்னிப்பு கேக்க 



வேண்டியது. இதே உங்களுக்கு 



பழக்கமா ஆயிருச்சு. உம்... நீங்க 



என்ன செய்வீங்க.. உங்களைஉக்கார 



வச்சு சோறு போடுறேன்னில்ல.. 



நீங்க என்ன செய்வீங்க..நீங்க 



மன்னாரன் கம்பெனியில வேலை 



பாக்கிறதா சொன்னதை நம்பி எங்க 



அப்பாவும் என்னைய உங்களுக்கு 



கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. 



எல்லாம் என் தலை எழுத்து. 



உங்களைப் போய் கல்யாணம் 



பண்ணிக்கிட்டேனே.                                 



பயந்த:- (தன மனசுக்குள்-ஏன் நல்ல 



ஒரு ஆம்பிளையைபாத்துதாராளமா 



கல்யாணம் பண்ணிக்கிற 



வேண்டியது தானே --யார் 



வேணான்னு சொன்ன ) ஏம்மா ? 



எதுக்கு எடுத்தாலும் இப்படி 



கோவிச்சுக்கிறே ?                                       



தங்கம் :- ஆமா உங்களுக்கு எத்தன 



வாட்டி சொல்றது  என்னையை 



அடிக்கடி தங்கம் தங்கம்னு பேரைச் 



சொல்லிக் கூப்பிடாதீங்கன்னு. உம்.. 



இல்ல கேக்கிறேன். உங்களோட 



ஒரே ரோதனையாப் போச்சு.                   



பயந்த:- சரிம்மா இனிமே சத்தியமா 



பேரைச் சொல்லிக் கூப்பிடவே 



மாட்டேன். போதுமா ?                                 



தங்கம் :- சொல்றீங்க. ஆனா 



அந்தமாதிரி எங்க நடந்துக்க 



மாட்டேங்கிறேன்களே. கோவம் 



மட்டும் பொத்துக்கிட்டு வந்திருமே 



ஆமா. காலையிலே என்ன டிபன் 



பண்ணிவச்சுருக்கீங்க சொல்லுங்க 



படக்னு.                                                             



பயந்த :- இட்லியும் தக்காளி சட்னி 



வச்சிருக்கேம்மா. வேற என்ன 



செய்யணும் சொன்ன உடனேயே 



செஞ்சு தாரேன்.                                               



தங்கம் :- ஏங்க உங்களுக்கு 



எத்தனை தரம் சொல்றது மல்லிச் 



சட்னி எனக்கு ரொம்ப பிடிக்கும்னு 



ஒரு தரம்தான் என்னாலே சொல்ல 



முடியும். போயி உடனே அரைச்சு 



வைங்க. நான் குளிச்சுட்டு சீக்கிரமா 



ஆபீஸ் போனும். ஆமா.                           



 பயந்த :- சரிம்மா. இப்ப உடனேயே 



அரைச்சுடுறேன். நாளையிலே 



இருந்து நீ சொல்லாமலேயே 



செஞ்சுடுறேன்.                                               



தங்கம் :- சரி..சரி..நீங்க போறப்போ 



இந்த காபி குடிச்சு வச்ச தம்ளரையும் 



தவராவையும் கொண்டு போயி 



உடனே கழுவி வையுங்க. 



இதெல்லாம் ஒருத்தி எப்பயும் 



உங்களுக்கு சொல்லிட்டு 



இருக்கணும் 

                                                       


பயந்த :- சொல்லும்மா நீ எத்தனை 



வாட்டி வேணா சொல்லிட்டே 



இருக்கலாம். ஏன்னா நீ இந்த வீட்டு 



முதலாளிஉன்னையவிட்டா எனக்கு 



வேற போக்கிடம் ஏது . சாக்கடை 



தண்ணிக்கு போக்கிடம் ஏது . நான் 



ஒரு வேலையத்தவன்.  (மனசுக்குள்--



இப்படி பொண்டாட்டிகிட்டே ஏச்சும் 



பேச்சும் கேக்கனும்கிறது என்னோட 



தலை எழுத்து.)                                               



அன்பர்களே !! நமது நாட்டு நடப்பு 



விளக்கம் இத்துடன் நிறைவு 



பெறுகிறது. இப்படி ஒரு மனைவிக்கு 



ஒரு புருஷன் இருக்கிறதுக்கு பேசாம 



தூக்கிலே தொங்கிடலாம். மீண்டும் 



நாளைக்கு வேறு ஒரு குறள் 



விளக்கத்தில் நாம் சந்திப்போம். 



நன்றி !! வணக்கம் !!                                 



அன்புடன் மதுரை T.R.பாலு.

Saturday, February 8, 2014

அடுத்தவன் மனைவி மீது ஆசை கொள்பவனை விட்டு இந்த நான்கு வகையான பாவங்களும் எப்போதும் நீங்கிடாதாம் !! வள்ளுவர் தரும் குறளும் அதன் விளக்கமும் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!






தினம் ஒரு திருக்குறள்.







அதிகாரம்   :-  பிறனில் விழையாமை.


குறள் எண் :- 146.


பகைபாவம் அச்சம் பழியென 


                                                           நான்கும் 

இகவாவாம் இல்லிறப்பான் கண்... ... 



விளக்கம்:-பகை, பாவம், அச்சம், பழி, 

என்னும் இந்த நான்கு குற்றங்களும் 

பிறன் மனைவியிடத்து நெறி தவறி 

நடப்பவர்களிடத்து நீங்காவாம். இது 

திருவள்ளுவர் நமக்கு அருளிய 

குறளும் அதன் விளக்கமும் ஆகும். 


நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.பாலு.

Thursday, February 6, 2014

உலகின் மிகச் சிறந்த அறம் எனப்படுவது எது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!உங்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-  கொல்லாமை.                   



குறள் எண் :-  332.                                             



பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்           

                                                             நூலோர் 


தொகுத்தவற்றுள் எல்லாந் தலை... ...




விளக்கம்:-  இருப்பவற்றை 



எல்லோருக்கும் கொடுத்துத் தானும் 



உண்டு பல உயிர்களையும் 



காப்பாற்றிடும் பண்பு உடைய 



நெறியே, அறவோர் கூறியவற்றுள் 



எல்லாம், தலையான அறம் ஆகும். 



இது வான்புகழ் திருவள்ளுவர் 



நமக்கு அருளிய அறமாகும்.                 



குறள்தரும் நெறி :- இறைவனால் 



படைக்கப்பட்ட எந்த உயிர் 



இனத்தையும் கொல்லாமல் நாம் 



வாழ்ந்திட வேண்டும். மாமிசஉணவு, 



அது எந்த உருவில் இருந்தாலும் 



அதனை மனிதன் சாப்பிடக்கூடாது.