Wednesday, February 19, 2014

புலால் உணவினை நாம் உண்ணாமல் இருந்தால் புலால் விற்பனைக்கூடங்கள் ஏது ?வள்ளுவர்தரும் விளக்கம் !!









உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்    :-  புலால் மறுத்தல்.



குறள் எண் :-  256.



தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்           

                                                                                 யாரும் 

விலைபொருட்டால் ஊன்தருவார் இல்... ... ... ... ... ...



விளக்கம் :-  மக்கள் தின்பதற்க்காக உயிர்களைக் 


கொல்லவில்லை என்றால், ஒருவரும் 


பொருளுக்காக புலாலை விற்பனை செய்ய 


மாட்டார்கள். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன் விளக்கமும் ஆகும்.        




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-                                       


அகமது :- ஏண்டா பிலால் என்ன்னடா இது ஒரே 


அதிசயமா இருக்கு. இன்னைக்கு சனிக்கிழமை. 


அதுவும் மாச்த்திலேவரும் முதல் சனி. 


எல்லோரும் இன்னைக்கு தலைக்கு எண்ணை 


தேச்சு குளிச்சுட்டு கறிச்சோறு திம்பாங்கன்னு 


நினைச்சுத்தானேடா நான் இன்னைக்கு கூட ஒரு 


செம்மறி ஆடும் வெள்ளாடும் வெட்டி வைச்சுட்டு 


போனேன். ஒரு கால் கிலோ கறிகூடவாடா 


யாரும் வாங்க வரலை.



பிலால் :-  மாமு உனக்கு விசயமே தெரியாதா ? 


அதான் இப்படி பினாத்துறே. ஊர் பஞ்சாயத்துகூடி 


தீர்மானமே போட்டாச்சு.                                                 


அகமது :- என்னது ? தீர்மானமா ?டேய் என்னடா 


சொல்றே ? என்ன தீர்மானம் ? சொல்றா 


கொஞ்சம் விவரமா !!         


பிலால் :- அண்ணே எல்லோரும் இங்க 


இன்னையிலே இருந்து வள்ளுவர் சொன்னபடி 


நடக்கப்போறதா முடிவெடுத்தாச்சு மாமு.           


அகமது : அப்டி வள்ளுவர் என்னதாண்டா 


சொல்லிருக்காரு ?                                                             


பிலால் :-  யாரும் உயிர்களைக் கொன்னு திங்கக் 


கூடாது. அது பாவம். அதாலே நாம யாரும் 


இன்னையிலே இருந்து கறி,கோழி,மீன்.முட்டை 


இதுபோல எந்தவிதமான கவுச்சி அடிக்கிற 


பொருள்கள் எதையுமே சாப்பிடுவது இல்லை 


அப்டீன்னு சத்தியம் பண்ணிட்டாங்க மாமூ. 


இனிமே நீ உன்னோட கடையை இழுத்து மூடிட 


வேண்டியதுதான்.                                                             


அகமது :-  ஆமாண்டா இரும்பு அடிக்கிற 


இடத்துலே ஈக்கு என்ன வேலை. இனிமேலே 


இந்த ஊரில நாம் வியாபாரம் செஞ்சா நாம 


கிளிஞ்சுதான் போயிருவோம். இன்னையிலே 


இருந்து நாம அகமது கறிக்கடைக்கு மூடுவிழா 


வாடா நாம் நம்ம சொந்த ஊருக்குப் போயி வேற 


ஏதாவது பொழைப்பைத் தேடிக்குவோம். வாடா 


கடையைமூடிட்டு ஊரைக்காலிபண்ணிடுவோம். 



அன்பர்களே !! திருக்குறள் விளக்கம் இத்துடன் 



நிறைவு அடைகிறது.                                                               



நன்றி !! வணக்கம் !!




மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment