Thursday, February 13, 2014

உண்மையான இல்வாழ்க்கை வாழ்பவன் யார் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!









உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :- பிறனில் விழையாமை.

குறள் எண் :-  147.


அறனியலான் இல்வாழ்வான் என்பான்                       

                                                        பிறனியலாள்

பெண்மை நயவா தவன்... ... ... ... ... ...


விளக்கம் -  அறத்தின் இயல்போடு பொருந்தி 

இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு 


உரிமையானவளின் பெண்மையை 


விரும்பாதவனே :!!  இது 


வான்புகழ்வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நட்பு விளக்கம்:-  


மன்மதன் :-  டேய் !!  ராமா, என்னடா 


உன்னைய பாத்துகிட்டத்தட்ட ஒரு 


மாசத்துக்குமேலே இருக்கும்போல 


இருக்குமே ? எங்கேடா போய்த்தொலைஞ்சே ?


ராமன் :- மதன். எங்க சொந்தஊர் மதுரைக்கு 


போயிருந்தேண்டா. அங்க எங்க அத்தை 


பொண்ணுக்கு கல்யாணம்டா. அதுதான் 


ஒருமாச இடைவெளி உங்களை எல்லாம் 


பாக்க முடியலைடா.



மன்மதன் :- ஆமாடா பொண்ணு எப்படிடா ?


சூப்பரா ? ஏண்டா அடுத்தவனுக்குப்போய் 


கட்டிக் கொடுத்தீங்க ?  பேசாம 


நீ  கட்டிஇருக்க வேண்டியதுதானே ?


ராம்:-  உனக்கு மூளை கீளை குழம்பிப் போச்சா.


எனக்குத் தான் தங்க விக்ரகம் போல மனைவி 



வீட்டிலே இருக்காளே. அப்புறம் எதுக்குடா. 



இன்னொன்னு.தேவையே இல்ல.



மன்மதன் :- இருந்தா இருக்கட்டுமே. யார் 


வேணான்னா. அது ஒரு பக்கம் இருந்தா .இது 


ஒருபக்கம் இருந்துத்துட்டுப் போகட்டுமே .ஆம


 நான்தெரியாமதான் கேக்கிறேன்.வீட்டிலேதான் 


இட்லி தோசை சுடுறாங்களேஅப்புறம் எதுக்குடா 


நாம சங்கீதா ஓட்டல் போறோம்? அந்த 


மொருமொருப்பு, அந்த ரோஸ்ட், அந்த சுவை 


வீட்டிலே இல்லைன்னுதானேநாம அங்கே 


போறோம். அந்த மாதிரித்தானே  இதுவும்.



ராம் :- போடா முட்டாள். ஏண்டா. சாப்பிடுற 


பொருளும் சம்சாரமும் ஒன்னாயிடுமாடா ?


மன்மதன் :- தம்பி சுவை நல்லா இருந்தா 


வீட்டு சாப்பாட்டையும் ரசிக்கணும். 


அதேசுவை இன்னும் அதிகமா இருந்தா 


பக்கத்து வீட்டு சாப்பாட்டையும் ருசிக்கனும்டா.


அதாண்டா வாழ்க்கை.அவந்தான்டா மனுஷன்.


ராம் :- டேய் உங்களை எல்லாம் திருத்தவே 


முடியாதுடா. நம்ம வீடு வீடுதான்.


பக்கத்து வீடு பக்கத்து வீடுதான் சொந்தம்தான் 


என்னைக்கும் நம்ம கூடவே வரும் நாம 


செத்துப்போனா கண்ணீரும் வடிக்கும். ஆனா நீ 


சொன்ன அந்த ரெண்டும் துண்டை உதறித் 


தோளில் போட்டுக்கிட்டு போயிரும் பாத்துக்க. 


டேய் என்னைக்கும் ஒரே மாதிரியே எந்தவீடு 


கதவு தொறந்து கிடைக்குதுன்னு நாய் மாதிரி 


நாக்கைத் தொங்கப்போட்டு அலையாதீங்கடா. 


திருந்துங்கடா.மாறப்பாருங்கடா. உண்மையான 


இல்வாழ்க்கை வாழ்பவன் யார் என்று வள்ளுவர் 


சொல்லியிருக்கார் தெரியுமா தம்பி மன்மதா ?


எவன் ஒருத்தன் தன் பொண்டாட்டியோடு 


திருப்தி அடைகிறானோ எவன் ஒருவன் 


மாற்றான் ஒருவனுக்குச் சொந்தமான 


மனைவியின் பெண்மையை அடைந்திட 


வேண்டும் என்று மனதளவில்கூட 



நினைக்காமல் இருக்கிறானோ அவனே 



உண்மையான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று 



வள்ளுவர் சொல்லியிருக்கிறார் அதாலேதான் 



சொல்றேன் திருந்துங்கடா.



மன்மதன்:- சரிங்க அண்ணே. உங்களுக்கும் 


நம்ம கொள்கைக்கும் ஒத்து வராது. நான் 


கிளம்புறேன்.




அன்பர்களே !!  இத்துடன் குறள் விளக்கம் 


நிறைவு பெறுகிறது.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment