Monday, February 3, 2014

காதலியின் உமிழ்நீர் பாலோடு கலந்த தேனின் சுவை போன்றதாகும் !! வள்ளுவர் கருத்து இது !!







உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-   காதற் சிறப்புரைத்தல்.


குறள் எண் :-  1121.                                                


பாலோடு தேன்கலந் தற்றே 

                                                    பணிமொழி 

வாலெயிறு ஊறிய நீர்... ... ... ... 




விளக்கம் :-    மென்மையான 



மொழிகளைப் பேசுகின்ற 



இவளுடைய தூய்மையான 



பற்களில் ஊறிய நீர், பாலுடன் 



தேனைக்கலந்தார்போன்ற சுவை 



உடையதாகும். இது திருவள்ளுவர் 



நமக்கு அருளிய திருக்குறளும் 



அதன் விளக்கமும் ஆகும்.




நன்றி !! வணக்கம் !!




அன்புடன். மதுரை T.R. பாலு.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-             



இராஜா :- என்ன ? மணி 9.௦௦ 



ஆயிருச்சே !! உம்.....இன்னும் என் 



காதலி இராதாவை காணோம். 



ரெண்டு பேரும் இன்னைக்கு 



சினிமாவுக்குப் போகலாம்னு 



நினைச்சேன். நேத்து அவளுக்குஅவ 



பிறந்த நாளை ஒட்டி 15,௦௦௦ 



ரூபாய்க்கு பட்டுப்புடவை RMKVபட்டு 



ஜவுளிக் கடையிலே வாங்கிக் 



கொடுத்தபோது ஈன்னுசிரிச்சிகிட்டே 



வாங்கிக்கிட்டு அவசியம் நாம் 



சினிமாவுக்குப் போலாம்னு 



சொன்னவளை இன்னும் காணோம். 



அடச்சை !! இந்தப் பொம்பளைகள் 



எல்லாருமே இப்படித்தானா? ஒரே 



கடுப்பா இருக்கு. கடவுளே !! ஏன் 



இப்படி என்னைய சோதிக்கிறே?உம்.. 



ஆகா!! இராதாவோட TVS ஸ்கூட்டி 



வந்துருச்சே !! தெரு முனையிலே !! 



அப்பாடா !! இப்பத்தான் எனக்கு 



போன உசுரு திரும்பி வந்திருக்கு.       



(இப்போது இராதாவின் ஸ்கூட்டி 



இராஜாவின் அருகினில் வந்து 



நிற்கின்றது.) 



இராதா :- Sorry dear !! ஒரு மணிநேரம் 



லேட் ஆயிருச்சு. ஊர்லே இருந்துஎன் 



தாய்மாமா தங்கமணி 



வந்திருந்தாங்க. அதாங்க லேட் 



ஆயிருச்சு. ப்ளீஸ். மன்னிச்சுகுங்க 



கோவிச்சுக்கிறாதீங்க !! வாங்க நாம 



A.G.S. தியேட்டர் போயி நம்ம சிம்பு 



நடிச்ச " இங்க என்ன சொல்லுது " 



படத்துக்குப் போலாங்க. ஆனாஅங்க 



நீங்க எனக்கு பிஸ்தா ஐஸ்கிரீம் 



வாங்கித்தாங்க.                                             



இராஜா :-  நிச்சயம் நாம இரண்டு 



பேருமே பிஸ்தா ஐஸ்கிரீம் வாங்கி 



சாப்பிடுவோம் கண்ணு.                           



(இருவரும் வாங்கி ஒருவருக்கு 



ஒருவர் அதனை ஊட்டி 



மகிழ்கின்றனர். திடீரென்று இராஜா 



என்ன செய்தான் என்றால் யாரும் 



அருகினில் இல்லாததாலும், படம் 



போட்டுவிட்டதால் அனைத்து 



விளக்குகளும் அணைத்துவிடப் 



பட்டதாலும், இராதாவின் இதழோடு 



இதழ் வைத்து சுவைக்கிறான்.       



இராஜா :-  இராதா நான் சத்தியமா 



சொல்றேன். பிஸ்தா ஐஸ்கிரீமில் 



இல்லாத சுவையும் இனிப்பும் உன் 



நாவில் உள்ள உமிழ்நீரில் 



இருக்குதடி. பாலோடு கலந்த 



தேனின் சுவையைப் போன்றதாகும் 



இது.     



இராதா :-  நம்ம தத்துவ ஞானி 



மதுரை T.R.பாலு ஐயா இன்னைக்கு 



அவரோட இணையதள " குறள் 



விளக்கத்துலே " திருவள்ளுவர்கூட 



நீங்க சொன்ன கருத்தை தனது 



குறளில் எழுதி இருக்காருங்க. அவர் 



என்றென்றும் வாழ்கங்க.                       



இராஜா :- அவரோடு சேர்ந்து நம்ம 



மதுரை T.R.பாலு சாரும் வாழ்கவே. 



அவரு இதுபோல இன்னும் நிறைய 



காமத்துப்பாலில் இருந்து 



பாடல்களும் விளக்கங்களும் 



தரணும்னு நான் எல்லாம் வல்ல 



ஆண்டவனை பிரார்த்தனை 



செய்துக்குறேன். நீயும் பிரார்த்தனை 



செஞ்சுக்கோ.சரி...இராதா..இப்ப..படம் 



போட்டுட்டான். நாம் இப்போ 



படத்தைப் பாப்போமா?                             




அன்பர்களே !! குறள் விளக்கம் 



இத்துடன் நிறைவு பெறுகின்றது.         



நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R.பாலு. 

No comments:

Post a Comment