Friday, January 31, 2014

பிரிவதை எண்ணிக் கண்கள் கலங்கும் காதலி---திருவள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்  :- புலவி நுணுக்கம்.               



குறள் எண் :- 1325.                                           



இம்மைப் பிறப்பில் பிரியலாம்               

                                                    என்றேனால் 


கண்ணிறை நீர்கொண் டனன்... .. ... ... 



விளக்கம் :-  இந்தப் பிறவியில் நாம் 



பிரியமாட்டோம் என்று என் 



காதலியிடம் சொன்னேன். அவள் 



கன்னங்களில் அப்போதும் கண்ணீர் 



வழிந்துகொண்டு இருந்தது.ஏன் ? 



அப்படி எனில் இனிவரும் பிறவியில் 



நாம் பிரிந்திடுவோமா ? என்றுஅவள் 



எண்ணியதால்.  இஃது வள்ளுவர் 



நமக்கு அருளிய குறளும் அதன் 



விளக்கமும் ஆகும்.                               




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



ரங்கன் நமது கதையின் நாயகன். 



அவனது அன்புக் காதலியின் பெயர் 



பத்மாவதி.  இவர்கள் இருவரும் 



உயிருக்கு உயிராக காதலித்து 



திருமணத்திற்காக காத்திருப்போர் 



பட்டியலில் உள்ளார்கள். அப்படி 



இருக்கும்போது ரங்கன் தனது 



தொழில் விஷயமாக தாய்லாந்து 



நாட்டிற்கு மாற்றல் ஆகிச் 



செல்கிறான். திரும்பிவர சுமார் 



மூன்று ஆண்டுகள் ஆகிவிடுமாம். 



இவன் இந்த விஷயத்தை 



தனது காதலியிடம் சொல்கிறான். 



இதைக் கேள்வியுற்ற அவளது 



செவிகள் இந்தச்செய்தியை அவளது 



மூளைக்கு அனுப்பி அது அவளது 



கண்களுக்கு அச்செய்தியை அனுப்பி 



வைக்கிறது. உடனே 



எங்கிருந்துதான் கங்கையில் 



இருந்து வெள்ளம் வருமோ 



தெரியாது அதுபோலவே 



கன்னியில் கண்களில் இருந்து 



கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 



காதலியின் கன்னங்களில் வழிந்து 



ஓடிடும் கண்ணீரை தனது கை 



விரல்களால் துடைத்தபடியே 



காதலன் ரங்கன் கேட்கிறான். ஏன் 



பத்மா ? நான் அப்படியே போய் 



விடுவேனோ என்று எண்ணியா நீ 



கண்ணீரை வடிக்கிறாய் ? ரங்கன் 



கேட்ட கேள்விக்கு காதலி பத்மா 



சொன்ன பதில் இதுதான்:-  இல்லை 



அத்தான் (ஏன் இவனுக்கு அத்தான் 



என்று பெயர் வந்தது என்றால் 



கல்யாணத்திற்கு பிறகு 



குடும்பத்திற்கு எப்போதெல்லாம் 



பண நெருக்கடி வருகின்றதோ 



அப்போதெல்லாம் மனைவியின் 



அம்மா வீட்டில் போட்ட ஒவ்வொரு 



நகைகளையும் அவ்வப்போது அத்து 



அத்து மார்வாடி கடையினில் அடகு 



வைப்பவன் இவன் என்பதனாலோ 



இவனுக்கு " அத்தான்" என்ற பெயர் 



வழங்கலாயிற்று. ஆகையாலோ 



 (அத்துப்போடுபவன்=அத்தான்)இந்த 



பெயர் வந்ததோ தெரியவில்லை.) 



எனக்கு அப்படி ஒரு எண்ணம் 



நெஞ்சினில் இல்லை. நீங்கள் 



போவதோ தாய்லாந்து நாட்டிற்கு. 



அங்கே காய்களை விடவும் மிகவும் 



மலிவாக கன்னிகளே 



கிடைக்குமாம். 



என் தோழியர்கள் சொல்லி நான் 



கேள்விப்பட்டு இருக்கிறேன். 



ஒருவேளை தாங்கள் மனம்தடுமாறி 



வேறு யார் மீதும் உங்கள் காதல் 



இடம் பெயர்ந்து விடுமோ என்று 



எண்ணிய அச்சத்தினால் ஏற்பட்ட 



மிச்சம் இங்கே கன்னங்களில் 



கண்ணீராக வழிந்து ஓடிக்கொண்டு 



உள்ளது என்று சொன்னாளாம்.  



உடனே காதலன்:-அடி போடி மண்டு. 



என் உள்ளம் என்னும் அறைதனில் 



இருப்பது உனையன்றி வேறுஎவரும் 



இல்லை. உன் ஒருத்தியைத் தவிர 



என் இதயக் கதவுகள் வேறு எந்த 



ரம்பா,ஊர்வசி, மேனகை, இம்மூவர் 



அழகும் சேர்ந்து ஒருத்தி வந்தாலும் 



திறக்காது. இதை நீ நம்பு. இது உன் 



இதயக் காதலன் விடும் அம்பு. 



இதுதான் சுத்தத் தமிழ்ப் பண்பு 



என்று பகர்ந்தானாம் ரங்கன். உடனே 



காதலி நெஞ்சம் பூரிப்படைந்து 



காதலனை இறுகக் கட்டித் தழுவிக் 



கொண்டனளாம். இது எனது 



கற்பனை வானில் நான் சிறகடித்து 



பறந்துகொண்டு இருந்தபோது 



உதயமான சிறுகதை. மீண்டும் 



நாளை நாம் சந்திப்போமா ?                   



நன்றி !! வணக்கம் !!                                   




அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment