Thursday, January 9, 2014

படிச்சவனுக எல்லாரும் பண்பானவனுக கிடையாது !! வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                           



அதிகாரம்  :- ஒழுக்கமுடைமை.         



குறள் எண்:-  14௦.                                             


உலகத்தோடு ஓட்ட ஒழுகல்                   

                                                    பலகற்றும்  

கல்லார் அறிவிலா தார்... ... ... ... ... ... ... 



விளக்கம் :-உலகத்து 



உயர்ந்தவரோடு பொருந்துகின்ற 



ஒழுகும் மறையைக் கற்காதவர், 



அவர் எவ்வளவோ பல நூல்களைக் 



கற்று கல்வியின் மூலமாக கற்று 



அறிந்திட்டபோதிலும், அவர் 



கல்லாதவர், அறிவு இல்லாதவரே 



ஆவார். இது   திருவள்ளுவர் நமக்கு 



அருளிச் சென்ற திருக்குறளும்அதன் 



விளக்கமும் ஆகும்.                                                             



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-           



அங்கமுத்து :-  தம்பி தங்கமுத்து 



வாடா !! வாடா !! உன்னையத் 



தாண்டா தேடிக்கிட்டே இருந்தேன். 



தங்கமுத்து :- என்னயவா ? எதுக்கு 



அண்ணே தேடிட்டு இருந்த.                 



அங்:- தம்பி. நம்ம பூனைக்குட்டி 



முதலியாரோட மவன் சமரசம், 



அதாண்டா, நம்மளோட 



எலிமெண்ட்ரி ஸ்கூலில் 5ம் 



வகுப்புவரைப் படிச்சான்லே அந்த 



சமரசம்தாண்டா, நேத்து  லண்டன்ல 



இருந்து பெரிய படிப்பு படிச்சுட்டு 



வந்திருக்கானாம். அதான் அவனப் 



போயி பாத்துட்டு வரலாம்னுதான் 



உன்னைய தேடிட்டு இருந்தேன். 



போவோமாடா ?                 



தங்:-   அண்ணே !! வேணாம்னே !! 



சொன்னாக் கேளு !!அவங்கல்லாம் 



என்ன படிப்பு படிச்சுருந்தாலும், 



உலகத்து பண்புகள் தெரியாதவங்க 



அண்ணே அதான் போக வேணாம்னு 



நினைக்கிறேன்.                                                 



அங்:-   தம்பி எதையும் நினைக்கிறன் 



வைக்கிறேன் அப்டீன்னு எல்லாம் 



சொல்லக்கூடாதுடா. நேர போயி 



பாப்போம்டா.என்னதான் செய்றான் 



அப்டீன்னு பார்ப்போமாடா.                       



தங்:- சரிடா !!



அங்:-  டேய் என்ன வரவர மரியாதை 



தேயுது.



தங்:- இல்லண்ணே !!உங்கள மாதிரி 



நானும் சொல்லிப்பாத்தா எப்டி 



இருக்கும்னு சொன்னேன்னேன்.தப்பு 



அப்டி சொன்னா கன்னத்துல 



போட்டுக்கிறேன். மத்தபடி உங்க 



இஷ்டம். அண்ணே எங்க அப்பாரு 



ஒரு கருத்து அடிக்கடி சொல்டே 



இருப்பாரு.



அங்:- என்னாடா சொல்வாரு ? 



தங்:-  இல்லண்ணே நடந்து 



போறவன்கிட்ட வெத்தலைக்கு 



சுண்ணாம்பு கேட்டாத்தருவான் 



ஆனை மேலே உக்காந்துட்டு 



இருக்கவன்கிட்டே சுண்ணாம்பு 



கேட்டா அவன்..அவன்..அவன்...



அங்:- என்னாடா தங்கமுத்து நாக்கு 



தடுமாறுது. இன்னா விசயம்.   



தங்:- இல்லண்ணே !! எனக்கு இப்ப 



இப்ப இப்டி அடிக்கடி வருது இந்த 



மாதிரி பேச்சு திக்கித்திக்கி 



வர்ரது.போயி டாக்டர்டே காட்டனும். 



நேரமே இல்லண்ணே !!உம்..நாட்லே 



ஊர்லே  யார்தான் நாம சொல்றதை 



நம்புதானுங்க? விதி யாரை 



விட்டுது.வாங்க டாக்டர் சமரசத்தை 



அவர் வீட்டிலேயே சந்திப்போம்.           



இருவரும் லண்டன்ல இருந்து ஊர் 



திரும்பிய டாக்டர் சமரசம் 



வீட்டிற்குள் செல்கின்றனர். வீடுதேடி 



வந்த இருவரையும் வாங்கன்னு 



கேக்க அந்த வீட்லே எந்த நாதியும் 



இல்ல. பத்து நிமிசத்துக்கு மேலாக 



நின்னுகிட்டு இருந்தவங்கஇருவரும் 



யோசிச்சு கூப்பிடுறாங்க. சார்....சார்... 



வீட்லே யாரும் இல்லையா ? சார்...   



(கொஞ்ச நேர இடைவெளிக்குப் 



பிறகு மாடி முற்றத்திலிருந்து 



டாக்டர் சமரசமும் அவரது ஆசை 



நாயகி லலிதாவும் எட்டிப் 



பார்க்கிறார்கள் இவ்விருவரையும்) 



சமரசம்:- யோவ்..யாருயா..நீங்க..வீடு 



தொறந்து கிடந்தா எது மாதிரி 



எல்லாம் உடனேயே உள்ளே 



நுழைஞ்சுறதா ? உம்..இல்ல.. 



கேக்றேன் ? அது..வேற..ஒன்னும் 



இல்ல லலிதா..கலிகாலம் முத்திப் 



போச்சுல்லே.. அதான் பிச்சக் காரங்க 



வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு பிச்சை 



கேக்குறாய்ங்க (சமரசமும் 



லலிதாவும் " கொல்லென்று " வாய் 



விட்டு சிரிக்கின்றனர்.                             



அங்:- அண்ணே !! சமரசம் !! நான் 



தாண்ணே !! நம்ம பாலுத் தேவர் 



மவன் உக்கிரமுத்து. நாம ஒண்ணா 



அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் சேந்து 



படிச்சோம்....அது...உங்களுக்கு 



ஞாபகம் இல்லையா அண்ணே !!       



சமரசம்:-  அண்ணனாவது 



தம்பியாவது ? இப்ப உடனேயே 



வீட்டை விட்டு வெளிய போகப்



போறீங்களா ? இல்ல போலீசை 



கூப்பிடட்டுமா?                                             



தங்:-  சரிதான் நிறுத்துங்க சமரசம் 



ஏதோ நீங்க எங்க அண்ணன் 



அங்கமுத்துக்கு கிளாஸ்மேட்ன்னு 



சொன்னதாலேயே உங்க வீட்டுக்கு 



வந்தோம். நாங்க வந்தது 



பிடிக்கலன்னு சொன்னா, 



வெளியபோக சொல்லுங்க. 



போயிடுறோம்.ஆனா அத வுட்டுட்டு 



போலீஸ்,கீலீஸ்ன்னு ஏதும் 



பேசாதீங்க ஆமா சொல்லிட்டேன். 



அண்ணே வாங்கண்ணே !! போலாம் 



( என்று சொல்லியபடியே 



அங்கமுத்துவின் கையைப்  பிடிச்சு 



வெளியே கூப்பிட்டுப் போகிறான் 



தங்க முத்து.)                                                   



தங்:- ஏண்ணே !! நான்தான் 



ஆரம்பத்துலேயே சொன்னேன்ல 



நீங்க கேக்கலே. அண்ணே உலக 



ஞானம் இல்லன்னு வச்சுக்கிடுங்க 



ஒருத்தன் எம்புட்டு பெரிய 



படிப்புபடிச்சு 



இருந்தாலும் அவன் படிக்காதவன், 



கல்வியறிவே இல்லாத கபோதி 



அப்படீன்னு நம்ம திருவள்ளுவரே 



எவ்வளவு அருமையா 



சொல்லிருக்காரு. பின்னாளில் 



இப்படி ஆளுங்க வருவாங்கன்னு 



அவருக்கு முன்கூட்டியே 



தெரிஞ்சுருக்கு.அதான் அவர் 



தெய்வப் புலவர் அப்படீன்னு நாம் 



சொல்றோம். சரிண்ணே நான் 



கிளம்புறேன். நாளைக்கு உங்கள 



பாக்குறேன். பை !! பை !!                             



குறள் விளக்கம் இத்துடன் நிறைவு 



பெறுகிறது. 



இந்த உரையாடல் நமக்குசொல்லும் 



கருத்து :-  நமது வீடு தேடி நமது 



எதிரியே நேரில் வந்தாலும் அவரை 



வரவேற்று குறைந்தபட்ஷம்பச்சைத் 



தண்ணீரையாவது பருகிடத் தந்து 



உபசரிப்பதுதான் உலகத்தோர் 



நமக்கு அருளிச் சென்ற 



விருந்தோம்பலின் விளக்கம். 



இதனைக் கடைப்பிடிக்காதவர் 



எவ்வளவு பெரிய படிப்பு படித்து 



பெரிய அறிவாளியாக இருந்தாலும், 



உலகத்தோர் பார்வையில் அவர் 



படிக்காத, பண்பில்லாத, 



அறிவில்லாதவர் என்பதுதான்.




மீண்டும் நாளை சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment