Thursday, January 23, 2014

அன்புக் காதலியின் பெருமைதனை உலகுக்கு உணர்த்துவது எப்படி ?இதோ வழிகாட்டிட வான்புகழ் வள்ளுவர் இருக்கும்போது ஜெகத்தினில் நமக்கு இனி பயமேது ?






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்:-நலம் புனைந்துரைத்தல். 



குறள் எண்:- 1111.                                           



நன்னீரை  வாழி அனிச்சமே                     

                                                      நின்னினும் 


மென்னீரள் யாம்வீழ் பவள்... ... ... ... ... 



விளக்கம்:- அனிச்சப்பூவே !! நல்ல 



மென்மைத்தன்மையைப் பெற்று 



இருக்கிறாய்.  யாம் விரும்பும் காதலி 



உன்னைவிடவும் மெல்லிய தன்மை 



உடையவள். இது வான்புகழ் 



வள்ளுவர் தரும் குறளும் அதன் 



விளக்கமும் ஆகும்.                                     




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



நெருக்கடி மிகுந்த சென்னை நகரின் 



குறுகல் நிறைந்த சந்து ஒன்றின் 



எட்டாவது வீட்டின் மூன்றாவது 



மாடியில் (மொட்டை  மாடி) 



வரிசையாகப் படுத்து உறங்கிக் 



கொண்டு இருக்கும் 5 நண்பர்களின் 



ஒட்டு மொத்தக் கூட்டணிஇதுதான்:- 



ராமு, கோபு,கண்ணன், ரங்கன், 



மற்றும் பாலன் ஆகியோர். இதில் 



கண்ணன் தனது வீட்டின் மொட்டை 



மாடியைத்தான் நண்பர்களுக்கு மிக 



சொற்பமான வாடகைக்கு 



தந்திருந்தான். கண்ணனின் தங்கை 



பெயர் கல்யாணி. பார்ப்பதற்கு 



ரதிதேவியின் தங்கையோ, 



ரவிவர்மா வரைந்த ஓவியமோ 



என்று பார்ப்போர் வியக்கும் 



வண்ணம் அழகு என்றால் அழகு 



அப்படி ஒரு அழகு. இவளை பாலன் 



தனதுமனதாரக் காதலித்தான். இதை 



ஓரளவிற்கு கல்யாணியும் அறிந்து 



இருந்தாள். ஒரு நாள் என்றும் 



வழக்கத்தில் இல்லாமல் பாலன் 



மதியம் 2.45 க்கு எல்லாம் வேலை 



முடித்துவிட்டு வீட்டிற்கு 



வந்துவிட்டான்.  கல்யாணி காயப் 



போட்டு இருந்த துணிமணிகளை 



எடுத்து மடித்து வைத்துக்கொண்டு 



இருந்தாள். பாலன் தனது பின்பக்கம் 



வந்து நிற்பதை அவள் 



அறியவில்லை. எல்லாத் 



துணிகளையும் மடித்து 



முடித்தவுடன் படக் என்று 



திரும்பினாள் கல்யாணி.நங் என்று 



பாலனின் நெற்றியோடு தனது 



நெற்றியை மோதியதால் அவள் 



நெற்றி வீங்கிவிட்டதோடு அவள் 



நல்ல வெள்ளை நிறம் அல்லவா 



அப்படியே அந்த நெற்றிப் பகுதி 



சிவந்து விட்டது. அவளது கொடி 



இடையில் தனது இரு கரங்களையும் 



படற விட்ட பாலன், அவளை இறுக 



அணைத்தான். அவளோ 



சிணுங்கினாள். ஏங்க..யாராவது... 



பாத்துடப்போறாங்க...கொஞ்சம் 



கையை எடுக்கிறீங்களா என்று 



சொல்லியபடியே சிணுங்கினாள் 



அந்த சிருங்காரி. நாணத்தால் 



அவளது கன்னங்களும் சிவந்தன. 



(இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் 



அன்பர்களே இதுபோன்ற உவமைக் 



கதைகளில்தான் இப்போது எல்லாம் 



உங்களால் பார்த்து படித்து 



உணர்ந்திட முடியும், கற்பனைக்கண் 



ஓட்டத்தில். நிஜத்தில், அதற்கு 



வாய்ப்பே என்றும் இல்லை. ஏன் 



என்றால் இந்தக் காலப் பெண்கள் 



யாருக்கு முதலில் கொடி இடை 



இருக்கிறது? நாணம் எவளுக்கு முக 



பாவனையில் வருகின்றது?)உடனே 



பாலன் கல்யாணியிடம் 



சொல்கிறான்:-   கண்ணே!!                       



கல்யாணி:- அன்பே !!                                 



பாலன்:- உன்னைப்போல ஒரு 



பெண்ணை இவ்வுலகில் கண்ணால் 



கண்டதில்லை. உன் இளமை, 



பேரழகு இதுபோல் வேறு எங்கும் 



நான் பார்த்ததில்லை.                             



கல்யாணி:- அதுதான் நான் 



இருக்கேனே. அப்புறம் வேறு யாரை 



நீங்க பார்க்கணும். நான் என்ன 



அவ்வளவா மென்மையாகவா , 



வெண்மையாகவா  இருக்கேன்?         



(பொதுவாக இந்தப் பெண்களிடம் 



உள்ள குணமே என்னவென்றால் 



அடுத்தவங்க தங்களைப்பார்த்து 



பாராட்டனும், அந்த பாராட்டை 



தங்களது காதால் கேட்கணும்)         



பாலன்:- ஆமா கல்யாணி. நம்ம 



வான்புகழ் வள்ளுவர் உன்னைய 



மாதிரி ஒரு பொண்ணை மனதில் 



கற்பனைபண்ணித்தான் இந்தக் 



கட்டுரையில் உள்ள 



திருக்குறளையே எழுதியிருக்கார் 



என்றால் பாத்துக்கோயேன்.               



 கல்யாணி:- சரி சரி அம்மா 



தேடுவாங்க. நான் வாரேன். என்று 



சொல்லியபடியே தனது இடையைச் 



சுற்றியிருந்த பாலனின் கரங்களில் 



இருந்து தன்னை விடுவித்துக்



கொண்டு காதலி கிளம்பிவிட்டாள். 



காதலனின் " உள்ளம் "   கண்ணீர் 



வடித்திட.   



****************************************               

நன்றி !! வணக்கம் !!                                 


அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment