Friday, January 3, 2014

நாட்டை ஆளும் அரசன் எப்போது தானே கெட்டுப்போவான் > வள்ளுவர் தரும் விளக்கம் !!







உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :- பெரியாரைத் 

                                              துணைகோடல்.



குறள் எண் :- 448.



இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 

கெடுப்பா ரிலானுங் கெடும்... ... ... ...  



விளக்கம்:-  அவ்வப்போது 



மன்னனின் நடவடிக்கைகளைக் 



கடிந்து அறிவுரை கூறும் 



பெரியவர்களின் துணை ஏதும் 


இல்லாத காவலற்ற அரசன், 



தன்னைக் கெடுக்கும் பகைவர் 



எவரும் இல்லாதுபோனாலும், 



அவன் தானே கெடுவான்.



இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 



அருளிச் சென்ற குறளும் அதன் நல்



விளக்கமும் ஆகும.



நமதுநாட்டுநடப்புவிளக்கம்:- _______________________________ 



பொதுவாக அரசன், அரசாட்சி, 



மன்னன்,மன்னராட்சி 



என்பதெல்லாம் இந்தக் காலத்தில் 



நமது திருநாட்டினில் இல்லாது 



போனாலும்கூட, மக்களாட்சித் 



தத்துவத்தில், ஒட்டுமொத்த நாட்டில் 



அந்த நாட்டின் தலைமைப் பீடத்தில் 



ஆட்சி செய்திடும் பொறுப்பினில் 



பிரதமர்/குடியரசுத் தலைவர் 



இருப்பவர்தான் அரசன்,மன்னன் 



என்று அழைக்கப்படுபவன் ஆகும். 



இது போலவேதான் ஒவ்வொரு 



மாநிலங்களைப் பொறுத்த 



வரையில் அந்தந்த மாநில 



நிர்வாகத்தின் தலைமைப்பதவியில் 



இருக்கும் முதலமைச்சர்கள், 



முதல்வர்கள்தான் அந்தந்த 



மாநிலங்களைப்பொறுத்தவரையில் 



அரசன்,மன்னவன் என்றே 



அழைக்கப்படுவதுண்டு.  ஆக அப்படி 



அழைக்கப்படும் முதல்வர்கள்எப்படி 



இருக்க வேண்டும் என்றால் 



அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு 



அரசாங்க ஆணைகளையும் 



அதனதன் தன்மைகளை ஆராய்ந்து 



அந்த ஆணைகள், மக்களுக்கு 



நன்மை பயக்கின்றனவா, அல்லவா 



என்பதனை ஆராய்ந்து, 



மன்னவனுக்கு, அப்போதைக்கு 



அப்போது,ஆலோசனைகள் வழங்கி, 



மன்னனை(முதல்வரை) நல்ல 



வழியில் கொண்டு செல்ல 



வேண்டும். இங்கே அப்படி 



ஆலோசனைகள் வழங்கி நல்ல வழி 



காட்டும் பெரியவர்கள் என்று 



அழைக்கப்படுபவர்கள் யாரெனின் 



இதற்கு முன்பு ஆட்சி செய்த, 



அனுபவம் வாய்ந்த, அரசியலில் 



ஊறித் திளைத்து நல்ல பல 



அனுபவங்களைப் பெற்ற முன்னாள் 



முதல்வர் என்றும்கூட சொல்லலாம் 



அவரை முதலில் மதித்திட இந்த 



ஆளும் பொருப்பினில் உள்ள 



முதல்வர் கற்றுக்கொள்ள 



வேண்டும். அதை விடுத்து, நீ என்ன 



சொல்வது ? அதனை நான் ஏன்  



கேட்பது ? என்று திமிர் பிடித்து,வெறி 



கொண்டு, பழி  வாங்கிடும் 



மனோபாவத்தை மட்டுமே 



மனதுக்குள் வாங்கி, வாழ்ந்திடும் 



தலைமைப் பொறுப்பில் உள்ளோர், 



தமக்கு சட்டமன்றத்தில் மிருக பலம் 



கொண்ட பெரும்பான்மைசட்டமன்ற 



உறுப்பினர்கள் என்ற பெயரில் 



அடிமைகள் இருக்கிறார்கள், எனவே 



என்னை யார் கேட்பது, எனக்கு யார் 



அறிவுரைகள் வழங்குவது, நானே 



ராஜா/ராணி எனக்கு நானே 



ஆலோசனைகள் வழங்கும் 



புத்திமான்கள் வேறு எவரும் எனக்கு 



ஆலோசனைகள் வழங்கிடத்தேவை 



இல்லை எல்லாம் எமக்குத் தெரியும் 



எந்த அறிவிற்சிறந்த 



பெரியோர்களது ஆலோசனைகள் 



ஏதும் வேண்டாம் எனக்கு,என்று 



தான்தோன்றித் தனமாக, தான் 



காண்பதே காட்சி, தான் கொண்டதே 



கோலம் என்றும் நானே ராணி, நான் 



வச்சது தான் அறிவின் கேணி என்று 



எந்த நாட்டிலாவது அம்மாநில 



முதல்வர்கள், அவர்கள் ஆண்களாக 



இருந்தாலும் சரி, பெண்டிர் என்ற 



போர்வையில் பேய்களாக 



இருந்தாலும் சரி, அவர்களைக் 



கெடுத்து,குட்டிச்சுவராக்கி, 



கேடுகளை விளைவிக்க 



அவர்களுக்கு என்று தனியாக, 



பகையாளிகள் என்று எவரும் வரத் 



தேவை இல்லை. அவர்கள் 



தாங்களாகவே கெட்டுச்சீரழிந்து 



போவார்கள் இது உறுதி என்று 



இன்றைக்கு இரண்டாயிரம் 



ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது 



வள்ளுவப் பெருந்தகை கூறிச் 



சென்றுள்ளது எவ்வளவு 



பொருத்தமாக இருக்கிறது 



பார்த்தீர்களா இன்றைய தினம் 



நமதுஅக்கம்பக்கத்து நாட்டினில் 



நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் 



பார்க்கின்றபோது!!  நல்ல வேளை, 



நமது மாநிலத்தில் இதுபோன்ற ஒரு 



நிலைமை ஏதுமில்லாமல் ஒரு 



அறிவிற் சிறந்த, 


ஆற்றல் பலம் மிகுந்த, 


இனிமையான குணம் கொண்ட, 


ஈகைத்திறம் நிறைந்த, 


உண்மையே பேசும் மனங்கொண்ட, 


ஊக்கம் மிக நிறைந்த, 


எப்போதும் மக்களைப் பற்றிய நல்ல 


தோர் சிந்தனையிலேயே 


இருந்திடும், 


ஏற்றம் பெற வேண்டும் மாநில 


மக்கள் என்ற நினைவு மட்டுமே 


கொண்டு, 


ஐயங்கள் எதுவுமின்றி, 


ஒழுக்கம் மட்டுமே தனது பிறவியின் 


இலட்சியம் என்று வாழ்ந்து வரும், 


ஓங்குபுகழ் கொண்ட ஒரு 


தலைமைதனை இம்மாநில 


முதல்வராக, 


ஒவ்வையாரே  பாராட்டும் 


அளவுக்குத் தமிழ் அறிவும் 


ஞானமும், சுய சிந்தனையும், நல்ல 


பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் 


கொண்டு, ஒவ்வொருவரைப்போல் 


எழுதி வைத்துக்கொண்டு அதனைப் 


பார்த்துப், பார்த்துப், படித்திடும், 


பழக்கம், எதுவும் இல்லாமல், அகில 


உலகமே வியக்கும் வண்ணம், 


அரசாளும் ஒருவர் நமக்கு கிட்டியது, 


நாம்  செய்த புண்ணியங்கள்தான் 


அதற்குக் காரணம். இவரே நாளைய 


தினம் இந்த பாரத நாட்டிற்குத் 


தலைமை ஏற்றிடும் பிரதமராக 


வரவேண்டும் என்று, வடக்கே 


விந்தியத்தில் இருந்து தெற்கே 


குமரிமுனை வரை, மேற்கே 


சவுராஷ்ட்ரத்திலிருந்து கிழக்கே 


வங்காளம் வரை உள்ள பாரத 


மக்கள் அனைவரும் தவமாய்த் 


தவமிருந்து வருகிறார்கள் என்பது, 


உண்மையிலும் உண்மை, என் 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 


மீண்டும் அடுத்த குறள்விளக்கத்தில் 


உங்கள் அனைவரையும் நான் 


சந்திக்கிறேன்.  நன்றி !! வணக்கம் !!   


அன்புடன். மதுரை T.R.பாலு.   

No comments:

Post a Comment