Monday, January 13, 2014

அளவுடன் உணவு உண்டால், அவசியமே இல்லை மருந்துக்கடைக்கு செல்ல வேண்டியது !! வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



அன்புத் தமிழ் நெஞ்சங்கள் எல்லோ-



ருக்கும் என் உளம்கனிந்த பொங்கல்,



புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழர்



திருநாளில் ஒரு திருக்குறள் 



ஒன்றினை 



நாம் படிப்போமா அன்பர்களே:-



தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-  மருந்து.



குறள் எண்:-   942.



மருந்தென வேண்டாவாம்                       

                     யாக்கைக்கு     அருந்தியது 


அற்றது போற்றி உணின்... ... ... ... ... ...  



விளக்கம் :- முதலில் உண்ட உணவு 



செரிமானம் ஆகிவிட்டதை அறிந்து 



ஆராய்ந்த பிறகே, அதற்குப் பிறகு 



தக்கஅளவு உணவினை உண்டால், 



மனித உடம்பிற்கு மருந்து என்ற 



ஒன்று என்றும்வேண்டியதே 



இல்லை. இது வான்புகழ் 



வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 



குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-                     


கண்ணுச்சாமி:-  வாடா!! ஏலே!! 



திண்ணிச்சாமி. ஏண்டா !! எப்பப் 



பாத்தாலும் உன் வாய் எதனாச்சும் 



அறச்சுக்கிடே  தானேலே இருக்கு. 



அதுக்கு ஓய்வே கொடுக்க 



மாட்டியால. சொல்றா.மட்டிப்பயலே. 



ஏல. என்னால நாம் பாட்டுக்குப் 



பேசிக்கிட்டே கிடக்கேன். நீ அங்க 



எவள நோட்டாம் பாக்கல.



திண்ணிச்சாமி:-  அட போண்ணே!! 



உனக்கு என்னாட்டம் துண்ண 



முடிலன்னு போறாமை



உக்கும்.. அதான் என்ன கண்டிக்கீறு.



எல்லாத்துக்கும் எல்லா 



கொடுப்பொனையையும்



அந்த அல்லா தரமாட்டாம் பாத்துக்க.



கண்ணி:- ஏல. ஒரு நாளைக்கு நீ 



எத்தனைவாட்டில சாப்புடுத. 



விவரமா சொல்லுளா. 


திண்ணி:-  அண்ணே காலைல 4 



மணிக்கு அல்லாம் எந்திரிச்சு 



பானையல ஆத்தா பழைய சோறு 



வச்சிருப்பா. நல்ல ஒரு எட்டு கை 



அளவு தண்ணிய வடிச்சு அதுல 



ஒருகுத்து உப்பு போட்டிட்டு ஒரு 



பத்து கரண்டி கட்டி எருமைத் தயிர் 



விட்டு மக்கிப் பிசஞ்சு 



வெங்காயத்தையும் புறவு 



பச்சமுளகாயும் கடிச்சு அடிப்பேன்.



கண்ணி:- ஒன்னு.  அப்புறம்.....



திண்ணி :- சரியா கால 9 மணிக்கு 



நம்ம சுப்புணி அய்யர் கடை 



அதாண்ணே நம்ம மாடன் 



ரெஸ்டாரன்ட் போயி ஒரு கப் 



கேசரி,4 இட்லி,2 சாம்பார்வடை, 2 கப்



வெண்பொங்கல்,1 நெய் ரோஸ்ட் 



தோசை,1 செட் பூரி மசால், ஒரு கப் 



டிகிரி காபி குடிப்பேன்னேன்.



கண்ணி:-  ஏல உன் வவுத்துக்கு நீ 



எங்கனாச்சும் பிராஞ்சு கிராஞ்சு 



வச்ச்ருக்கியால. ஏல 



இந்தத் தீனி திண்டா வவுறு 



என்னத்துக்கு ஆகுமல. சரி இது 



அயிட்டம் .ரெண்டு .



அப்புறம்.



திண்ணி :- பொறவு சரியா மணி 



11க்கு 4மெதுவடை,2 மசாலா வடை, 2 



கிளாஸ் ரோஸ் மில்க். அப்பிடியே 



ஒரு குட்டித்தூக்கம் 



போட்டேன்னு  வச்சுக்க. சரியா 2 



மணிக்கு முழிச்சுருவேன்.


கண்ணி:-  சரி. இது அயிட்டம் 3.



திண்ணி :- நல்லா 1 பிளேட் மட்டன் 



பிரியாணி,நாடுக்கோழிசாப்ஸ்சோட, 



அப்படியே ஒரு நெய் மீன் ரோஸ்ட். 



அரை பிளேட் சிக்கன் 65.



அதுக்கு அப்றமா நல்லா ஒரு 



தூக்கம். 5 மணிக்குத்தான்னே 



எந்திரிப்பேன். 



கன்னி :-  அடேங்கப்பா, புராணப் 



புழுகுல வர்ற கடோற்கஜன், 



குண்டோதரன் இவங்க 



எல்லாரும் உண்ட்டே செத்தாங்கடா.



சரி இது ஆயிட்ட்டம் 4.



திண்ணி :-  5 மணிக்கெல்லாம் 4 



இனிப்பு போளி,4 சமோசா, 2 கப் 



இஞ்சி டீ. அப்டியே ஒரு வாக்கிங்.



கண்ணி:- உக்கும். வாக்கிங். இதுல 



ஒன்னும் கொறைச்சல் இல்ல. 



எதுக்குடா வாக்கிங். 



ராவுல இன்னும் அமுக்கவா. சரி இது 



அயிட்டம் 5.



திண்ணி:-  சரியா 7 மணிக்கு நம்ம 



ராமுஅய்யர் கடைக்குப் போயி சூடா 



ஆவி பறக்க 12முதல் 15 இட்லி, 6 



மசாலா தோசை, 2 கப் மசாலா பால்.



அம்புட்டுத்தான் அண்ணே.



கண்ணி:-  சரிதான் போ. இது 



அயிட்டம் 6.இம்புட்டுத்தான இல்ல 



இன்னும் இருக்கால.



திண்ணி :-  என்ன அண்ணே 



வவுத்துக்கு நாம் துரோகம் 



பண்ணலாமா அண்ணே.



கண்ணி:- அய்யய்யோ கூடவே 



கூடாதுடா சாமி.



திண்ணி :-  அப்புறமா சரியாஇராவுல 



11 மணிக்கு நாயர் கடையிலே 6 



புரோட்டா கோழிக்கறியோட.



அப்டியே கொத்துக்கறி 2 பிளேட். 



அப்டியே 2 கப் பசும்பால். 



அவ்வளவுதான் அண்ணே. அப்புறம் 



அப்டியே தூங்கிடுவேன். திரும்பவும் 



அதிகாலை 4 மணிக்கு எந்திரிச்சு........



கண்ணி:- அடேங்கப்பா. போதும்டா 



போதும்டா ...சாமி. நான் இனிமே என் 



ஆயுசுக்கும் எவன்டேயும் நீ 



என்னடா சாப்புடுறேன்னு கேக்கவே 



மாட்டேன்.கும்புடுறா சாமி.                                                              


( சில நாள்கள் கழிச்சு கண்ணிச்சாமி 


இருக்குற தெருவுல சங்கு சேகண்டி 


சத்தம் கேக்கவே வெளியே வந்து 


விசாரிக்கிறான் கண்ணிச்சாமி)


ஏல சங்குச்சாமி. யாருலமண்டையப் 




போட்டா.யாருல டிக்கட் எடுத்துட்டா?



சங்கு:அண்ணேநம்மதிண்ணிச்சாமி 



பூட்டான்ஆமாண்ணே ராவுல 



நெஞ்சடைக்குது சொன்னான்.



டாக்டர் வரதுக்குள்ளே 



புட்டுக்கிட்டான். 



கண்ணி:- இதுக்குத்தான்ல 



திருவள்ளுவர் அழகா 



சொல்லிருக்காரு. முந்தி சாப்பிட்ட 



உணவு செரிமானம் ஆயிருச்சான்னு 



பாத்துட்டு பசி எடுத்தாத்தான் அடுத்த 



வேளை சாப்பிடனும். இத 



கடைப்பிடிடான்னு நானும் 



திண்ணிச்சாமிட்டே 



எம்புட்டோ சொல்லிப் 



பாத்தேன்.கேக்கல, உம்...



விதி யாரை விட்டது. ஏல சங்கு. 



நீயாவது நான் சொல்றத 



கேப்பியாலே. 



சங்கு:- அண்ணே நான் நிச்சயம் 



கேப்பேன் அண்ணே.



என் குருநாதர் மதுரை T.R.பாலுன்னு 



ஒருத்தர் இருக்கார்னே. அவர் என்ன 



சொல்லுவார்னா...



கண்ணி:- என்னாலேசொல்லுவாரு? 



சங்கு :-  



ஒருவேளை உண்பவன் யோகி.



இருவேளை உண்பவன் போகி.



மூன்றுவேளை உண்பவன் ரோகி.



நான்குவேளை உண்பவன் இனத் 



துரோகி.



கண்ணி:- சபாஸுடா. ஏண்டா 



4வேளைக்கே



அன்னாரு அப்டி சொன்னாரு. நம்ம 



பய எட்டுவேளை தின்னாண்டா !! 



அதான் எம லோகம் 



போயிட்டாண்டா !! சரிடா சங்குநான் 



வரேன்.வணக்கம்.



சங்கு:- சரிண்ணே. நானும் 



போயிட்டு வாரேன்.

No comments:

Post a Comment